ரூ1 கோடிக்கு காரை இறக்கிய ஆடி! அப்படி என்னதான் இருக்குது அதுல?

ஆடி நிறுவனம் தனது கியூ 7 என்ற எஸ்யூவி காரின் போல்ட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 97.84 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்ரோடு இந்த கார் வரும்போது ஒரு கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும். இவ்வளவு அதிக விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் அளவிற்கு இதில் என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கிறது என்பதை விரிவாக காணலாம் வாருங்கள்.

ஆடி நிறுவனத்தின் க்யூ7 என்ற கார் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில், இதன் போல்ட் எடிஷனை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் மொத்தம் நான்கு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி வெள்ளை, கருப்பு, நீளம் மற்றும் கிரே ஆகிய நேரங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் லிமிடெட்டான ஸ்டாக்கில் மட்டுமே தயாரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Audi Q7 Bold Edition

இந்த காரின் முன் பக்கம் கிளாசி கருப்பு நிற கிரில் பினிஷ் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கமும் பின்பக்கமும் ஆடி நிறுவனத்தின் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் ஜன்னல்களை சுற்றி கருப்பு நிற ஸ்டைலிங் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இதன் ஓஆர்விஎம், ரூப் ரெயில்கள் எல்லாம் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 19 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது ஐந்து ஆர்ம் கொண்ட ஸ்டார் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்ஜின் செட்டப் குவாட்டரோ ஆல்வில் டிரைவ் சிஸ்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 335 எச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னரே சொன்னதுபடி இது ஆல்வில் டிரைவ் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.6 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது.

மொத்தம் 7 விதமான டிரைவ் மோடுகள் உள்ளன. ஆட்டோ, டைனமிக், கம்போர்ட், இன்டிவிஜூவல், ஆப் ரோடு, ஆல் ரோடு ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த காரின் சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை 3டி சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 19 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் உள்ள ஏசியை பொருத்தவரை நான்கு ஸோன் கொண்ட ஏசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆடி க்யூ 7 கோல்ட் எடிசன் காரை பொறுத்தவரை ஒரு 7 சீட்டர் எஸ்யூவி காராக இருக்கிறது. இந்த காரில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக காரின் உட்புறம் ஆம்பியன்ஸ் லைட்டிங் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன. இதனால் இந்த காரை ஆடி ரசிகர்கள் விரும்பி வாங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

ஆடி நிறுவனம் ஏற்கனவே க்யூ3 காரில் போல்ட் எடிஷனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது க்யூ7 காரின் போல்டு எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போல்ட் எடிஷனை வாங்குவதற்கு என பிரத்தியேகமாக ரசிகர்கள் இருப்பதால் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனால் இந்த காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் எவ்வளவு எண்ணிக்கை என்ற விபரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 97.84 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இது சாதாரண ஆடி க்யூ7 காரை விட ரூபாய் 3.3 லட்சம் அதிகமாகும். தற்போது சாதாரண ஆடி க்யூ7 கார் ரூ94.45 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்கும்போது ஆன் ரோடு விலையில் ரூபாய் ஒரு கோடிக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி நிறுவனத்திற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த காரை வாங்கும் அளவிற்கு பணக்காரர்கள் வெகு சிலரே இருப்பதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம் தான். இந்த காரை சாலையில் பார்த்தாலே பெரிய விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 7:00 [IST]
English summary
Audi q7 bold edition launched at rs 97 84 lakh know full details
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+