இந்த கலருக்காகவே எல்லாரும் வாங்க போகும் புது ஆடி கார்!! ஆனால் விலையை பார்த்தால் ஆசையே போய்டும்!
ஆடி இந்தியா (Audi India) நிறுவனம் புதிய க்யூ8 ஃபேஸ்லிஃப்ட் (Q8 Facelift) எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூ.5 லட்சம் முன் தொகை உடன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், தற்போது கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, புதிய ஆடி க்யூ8 காரின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஆடி காரை எவ்வளவு விலைகளில் வாங்கலாம் என்பதையும், இந்த காரின் சிற்ப்பம்சங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் சொகுசு கார்களை அதிகளவில் விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து 3வது இடத்தில் ஆடி உள்ளது. இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் 1 லட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை சமீபத்தில்தான் ஆடி கடந்தது. 2007ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் ஆடி நிறுவனம் 17 வருடங்களுக்கு பிறகு இந்த மைல்கல்லை கடந்துள்ளது.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்டதை போன்று இன்று (ஆகஸ்ட் 22) ஆடி க்யூ8 லக்சரி எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.17 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பப்படுபவர்கள் இந்த புதிய ஆடி காரை ரூ.5 லட்சம் முன் தொகை உடன் வாங்கலாம். இது ஒரு பெட்ரோல் என்ஜினை கொண்ட லக்சரி ஆடி கார் ஆகும்.
இந்த காரில் 3 லிட்டர் டி.எஃப்.எஸ்.ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 340 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. காரின் பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பெட்ரோல் இல்லாத நேரத்திலும் காரை இயக்கவல்லது.
கவர்ச்சிக்கரமான சாஹிர் கோல்டு மெட்டாலிக் கலர் உள்பட மொத்தம் 8 விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கலாம். காரின் முன்பக்கத்தில் ஆடியின் லோகோ உடன் கருப்பு நிறத்தில் பெரிய அளவில் கிரில் பகுதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கிரில் பகுதிக்கு கீழே காற்று காருக்குள் செல்வதற்கான துளைகளும் நன்கு பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளன. மேட்ரிக் தொழிற்நுட்பத்துடன் ஹெட்லேம்ப்கள் புதிய வடிவில் உள்ளன.

முன்பக்கத்தை போன்று காரின் பின்பக்கமும் தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. காருக்குள் லே-அவுட் டிசைனில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. டேஸ்போர்டில் வழக்கம்போல் இரு திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது. மற்றொன்று, ஏசி கண்ட்ரோல்களுக்கானது ஆகும். ஆடியின் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று என்பதால், க்யூ8-இன் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள மெட்டீரியல்கள் டாப்-நாட்ச்சில் உள்ளன.
இந்த காரினுள் பேங்க்-ஒலுஃப்சன் மியுசிக் சிஸ்டம், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் காரை சுற்றிலும் லைட்டிங் செட்-அப் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனையில் ஆடி க்யூ8 காருக்கு போட்டியாக மெர்சிடிஸ் ஜி.எல்.எஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மற்றும் வால்வோ எக்ஸ்சி90 உள்ளிட்டவை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆடி நிறுவனமும் எலக்ட்ரிக் கார்களில் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும், இதற்கிடையில் க்யூ8 போன்ற பெட்ரோல் கார்களையும் ஆடி அறிமுகம் செய்கிறது. இந்த புதிய அறிமுகம், இந்தியாவில் ஆடி கார்களின் விற்பனையை உயர்த்த உதவி செய்யும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








