இந்திய பணக்காரர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு.. நாளை அறிமுகமாகிறது.. பணக்காரர்களே போட்டி போட்டு வாங்க ரெடியா!

ஆடி (Audi) நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாக க்யூ8 (Q8) இருக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்திய பணக்காரர்களின் ஃபேவரிட் சொகுசு கார் மாடல்களில் ஒன்று இதுவாகும். இந்த காருக்கு என தனி ரசிக பட்டாளமே இந்தியாவில் உண்டு என கூறலாம். அந்த அளவிற்கே இந்த காருக்கு இந்திய செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) வெர்ஷனையே ஆடி நிறுவனம் நாளைய தினம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்திய பணக்காரர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இந்த சொகுசு கார் மாடல் இருந்து வருகின்ற இந்தவேளையிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக நாளை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேலும், இந்த காருக்கான புக்கிங் பணிகளும்கூட நாட்டில் தொடங்கிவிட்டன.

Audi q8 facelift launches tomorrow

ரூ. 5 லட்சம் முன் தொகையிலேயே இக்காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் ஷோரூம் என இரண்டின் வாயிலாகவும் இந்த காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன. புதுப்பித்தலின்கீழ் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த காரில் ஆடி நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

மிக முக்கியமான அப்டேட்டாக இந்த காரில் லேசர் அசிஸ்ட் வசதிக் கொண்ட எச்டி வகை மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டை ஆடி வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதைத்தொடர்ந்து, கிரில் மற்றும் ஏர் இன்டேக் உள்ளிட்ட பாகங்களும் புதிய லுக்கிற்கு மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், காரின் பின்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், புதிய டிஜிட்டல் ஓஎல்இடி டெயில் லைட்டே, நான்கு விதமான டிசைனை தேர்வுச் செய்துக் கொள்ளும் வசதியுடன் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு முறையும் இந்த காரில் ரைடு மேற்கொள்ளும்போதும் புதிய டிசைனில் ரியர் லைட்டை எரிய விட்ட பயணிக்கலாம்.

தொடர்ந்து, காரின் உள்பக்கத்திலும் சில மாற்றங்களை ஆடி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இருக்கை, பொழுதுபோக்கு சிஸ்டம் ஆகியவற்றிலேயே மிக முக்கியமான அப்டேட்டுகளை ஆடி செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே முன்பைவிட அதிக சொகுசான ரைடு அனுபவம், அட்வான்ஸ்டு பொழுதுபோக்கு அம்சத்துடன் கிடைக்கும் என தெரிகின்றது.

இதே மேலும் மேம்படுத்தும் விதமாக இந்த காரில் வழங்கப்படும் டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சத்தை கூடுதலாக மெருகேற்றியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுபோன்று இந்த காரின் தரம் பலவகைகளில் உயர்த்தப்பட்டு இருப்பதால் இதன் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஆடி க்யூ8 1.07 கோடி தொடங்கி ரூ. 1.43 கோடி என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதைவிடவே சற்று அதிக விலையில் இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. க்யூ8 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 340 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றக் கூடிய 3.0 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் எஞ்சின், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட இருக்கின்றது.

கியர்பாக்ஸைப் பொருத்த வரை இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவுடன் வழங்கப்பட உள்ளது. இந்த வாகனம் வெறும் 5.6 வினாடிகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.

நிற தேர்வைப் பொருத்த வரை இந்த காரில் சகிர் கோல்ட் (Sakhir Gold), வைட்டோமோ ப்ளூ (Waitomo Blue), மைதோஸ் பிளாக் (Mythos Black), சாமுராய் கிரே (Samurai Grey), கிளேசியர் ஒயிட் (Glacier White), சேட்டிலைட் சில்வர் (Satellite Silver), புளி பிரவுன் (Tamarind Brown) மற்றும் விக்குனா பீஜ் (Vicuna Beige) ஆகிய எட்டு வண்ணங்களில் கிடைக்கும்.

வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் 4விதமான வண்ணத் தேர்வுகள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. ஒகாபி பிரவுன் (Okapi Brown), சைகா பீஜ் (Saiga Beige), பிளாக் (Black) மற்றும் பாண்டோ கிரே (Pando Gray) ஆகியவையே அவை ஆகும். இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த காரில் வழங்கப்படும் வீல்களும்கூட மிகுந்த அழகானதாக இருக்கும் என கூறப்படுகின்றது. 21அங்குல கன்மெட்டல் ஃபினிஷ் கொண்ட 5ஸ்போக் அலாய் வீல்களே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காருக்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே ஆடி நிறுவனம் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 21, 2024, 5:00 [IST]
English summary
Audi q8 luxury suv facelift launches tomorrow in india
மேலும்... #audi #Audi Q8 Facelift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+