ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை... மாருதி இதை மட்டும் செய்தால் ஆட்டம் சூடுப்பிடிக்க ஆரம்பிச்சிடும்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ள நிறுவனம். இந்த இடத்தை மாருதி சுஸுகி ஒன்றும் அவ்வளவு எளிதாக பெறவில்லை. கடந்த காலங்களில் இருந்து பல தரமான கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து, அவற்றிற்கான தடையற்ற சேவைகளை வழங்கி பல்வேறு கடின உழைப்பின் மூலமாகவே மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்த வகையில் மாருதி சுஸுகியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தரமான தயாரிப்புகளுள் ஒன்று, ஜிப்ஸி (Gypsy) ஆகும். ஒரு சமயத்தில் ஆஃப்-ரோடு (off-road) பயணங்களுக்கு என்றாலே ஜிப்ஸியை தான் எல்லாரும் பயன்படுத்தினர்.

ஆனால், அவ்வாறான ஒரு ஆஃப்-ரோடு வாகனம் அதன்பின் மாருதி சுஸுகியில் இருந்து வரவேயில்லை என்பதுதான் உண்மை. இதனால், அந்த இடைவெளியை பயன்படுத்தி மஹிந்திரா (Mahindra) தனது தார் (Thar) வாகனத்தின் மூலமாக நுழைந்துவிட்டது. மஹிந்திராவின் இந்த ஆதிக்கத்தை முறியடிக்கும் விதமாக ஜிம்னி (Jimny)-ஐ மாருதி சுஸுகி அறிமுகம் செய்த போதிலும் பயனில்லை.

hustler at auto expo 2025

இதனாலேயே, ஜிம்னியை போன்று அளவில் சிறியதான பெட்டகம் வடிவிலான கார் ஒன்றை புதியதாக அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி தயாராகி வருகிறது. இந்த புதிய மஹிந்திரா காரின் பெயர், ஹஸ்ட்லர் (Hustler) ஆகும். 2025 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் ஹஸ்ட்லரை இந்தியாவில் அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

ஹஸ்ட்லர் ஆனது சுஸுகி நிறுவனத்தின் மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) கார் ஆகும். ஜப்பானில் முதன்முறையாக 2014ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹஸ்ட்லரில் சிறிய அளவிலான 658சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) 650சிசி பைக்குகளில் கிட்டத்தட்ட இதே அளவிலான என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. இதில் இருந்து ஹஸ்ட்லர் எந்த அளவிற்கு விலை குறைவான & சிறிய அளவிலான கார் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

hustler at auto expo 2025

ஆனால், மாருதி சுஸுகி நிறுவனம் ஹஸ்ட்லரை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இந்த வாகனத்தை ஜப்பானை தாண்டி வெளிநாடுகளில் எலக்ட்ரிக் மோட்டார் உடன் அறிமுகம் செய்யும் திட்டத்தில்தான் சுஸுகி உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், ஹஸ்ட்லர் ஆனது 4 கதவுகள் உடன் முழுவதும் பெட்டகம் வடிவில் உருவாக்கப்பட்ட எஸ்யூவி வாகனம் ஆகும்.

இந்தியாவில் விற்பனையில் உள்ள எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில் ஹஸ்ட்லர் 421மிமீ நீளமானது, 20மிமீ உயரமானது ஆகும். ஆனால், அகலம் 30மிமீ குறைவானது ஆகும். எம்ஜி கோமெட் இவி காரில் 2 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இருப்பினும், ஒருவேளை மாருதி சுஸுகி ஹஸ்ட்லர் அறிமுகம் செய்யப்பட்டால், விற்பனையில் அதற்கு எம்ஜி கோமெட் இவி நேரெதிர் போட்டியாக இருக்கும்.

hustler at auto expo 2025

இவை தவிர்த்து, ஹஸ்ட்லர் இவி வாகனத்தை பற்றிய வேறெந்த விபரமும் தற்போதைக்கு இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், வேகன்ஆர் இவி எலக்ட்ரிக் காரையும் மாருதி சுஸுகி தனது திட்டத்தில் வைத்துள்ளதால், இவை இரண்டிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி வழங்கப்படலாம். வேகன்ஆர் இவி வாகனத்தை 2018ஆம் ஆண்டிலேயே மாருதி சுஸுகி சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக இருப்பினும், எலக்ட்ரிக் கார் விஷயத்தில் தயக்கம் காட்டிவரும் மாருதி சுஸுகி அடுத்த 2025ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், மாருதி சுஸுகியில் இருந்து வெளிவரும் முதல் எலக்ட்ரிக் காராக ஹஸ்ட்லர் இவி இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2024, 14:59 [IST]
English summary
Maruti suzuki hustler ev india launch also in pipeline
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X