மேனுவல் கியர் எல்லாம் வேஸ்ட்! இந்தியாவில் இத்தனை ஆட்டோமெட்டிக் கியர் கார்கள் விற்பனையாகிடுச்சா?

இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் மேனுவல் கியர் கார்களை விட ஆட்டோமேட்டிக் கியர் கார்களின் விற்பனை கணிசமான அளவு வளர்ந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகமாக செலவு செய்தாலும் சொகுசான பயணம் வேண்டும் என விரும்புவதால் இப்படியான கார்களை அவர்கள் தேர்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கார் வாங்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு விதமான மாடல்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு விதமான கார்கள் தற்போது மார்க்கெட்டில் பயன்பாட்டிற்கு வருவதால் பலர் கார் வாங்கும் ஆப்ஷனை தேர்வு செய்கிறார்கள். சிலர் வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் கூட பயன்படுத்தப்படுகிறது.

Automatic Gear Box Car Sales

இன்று மக்களின் வசதிக்காக பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுக்கு கார்களில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனை கொண்டு வந்துவிட்டது. குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களை அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்த காரை ஓட்டுவது சுலபமாக இருக்கும் என்பதால் இந்த கார் மக்களால் அதிகம் விரும்பப்படும் காராகவும் இருக்கிறது.

இருந்தாலும் விற்பனை அடிப்படையில் மேனுவல் கியர் கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகின. ஆட்டோமேட்டிக் கியர் கார்கள் குறைந்த அளவில் விற்பனையான நிலையில் சமீபத்தில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் ஆட்டோமேட்டிக் கியர் கார்களை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Automatic Gear Box Car Sales

இந்திய மார்க்கெட்டில் மேனுவல் கார்களுடன் ஒப்பிடும்போது ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கார்கள் ரூபாய் 60 ஆயிரம் முதல் ரூபாய் இரண்டு லட்சம் வரை அதிகமான விலையில் விற்பனையாகிறது. இருந்தாலும் மக்கள் பலர் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களையே அதிகம் விரும்புவதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக பெருநகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடி தான் என கூறப்படுகிறது.

அதிக போக்குவரத்து நெருக்கடியில் கார் ஓட்டி செல்லும் போது மேனுவல் கியர் காராக இருந்தால் அதை அடிக்கடி மாற்ற வேண்டியது இருக்கும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக இருந்தால் எதையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை. நாம் ஸ்கூட்டர் ஓட்டி செல்வது போல அந்த காரை சாலையில் ஒட்டி செல்லலாம் என மக்கள் நினைக்கிறார்கள்.

Automatic Gear Box Car Sales

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் 100 வாகனங்களில் 26 வாகனங்கள் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட வாகனங்களாக விற்பனையாவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இதுவே கடந்த 2026ம் ஆண்டு 100 வாகனங்களுக்கு வெறும் 16 வாகனங்கள் தான் ஆட்டோமேட்டிக் ஆப்சன் கொண்ட வாகனங்களாக இருந்தன. தற்போது 100 வாகனங்களுக்கு 10 வாகனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த ஆய்வு அறிக்கை இந்தியாவில் உள்ள டாப் 20 நகரங்களில் நடத்தப்பட்ட ஜட்டோ டைனமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் விற்பனையாகும் 4 கார்களில் ஒரு கார் நிச்சயம் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கொண்ட காராக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

இந்தியா இந்திய மார்க்கெட்டில் மொத்தம் 83 மாடல் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் வந்துவிட்டன. மாருதி, டொயோட்டா, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய், கியா உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களில் தங்கள் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இன்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புதிதாக வாகனங்களை களம் இறக்கும் போது அதில் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனையும் ஒரு முக்கிய ஆப்ஷனாக அறிமுகப்படுத்துகிறது.

மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில் விற்பனையான 100 ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன் கார்களில் 60 சதவீதமான கார்கள் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் தான் விற்பனையாகி உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கியர் பாக்ஸ் தான் டாப் மாடல் கார்களிலும் பொருத்தப்படுவதால் மக்கள் மத்தியில் இந்த கியர் ஆப்ஷன் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்களுக்கான உதிரி பாகங்களை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றன. இந்த பாகங்கள் இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவில்லை. இருந்தாலும் மாருதி மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் இந்தியாவிலேயே இந்த பாகங்களை உற்பத்தி செய்து தங்கள் வாகனங்களில் பொருத்தி வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எதிர்காலத்தில் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் கியர் கார்களின் விலையை குறைப்பதற்கு இந்தியாவிலேயே ஆட்டோமேட்டிக் கியர் உதிரிபாகங்களை தயாரித்தால் கணிசமான அளவு விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 15, 2024, 10:28 [IST]
English summary
Automatic gear box car sales india cities report
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X