ஏழை வீட்டு பிள்ளைகளும் இனி பல்சர் பைக் ஓட்டனும்! பஜாஜ் கம்மி விலைக்கு பல்சர் பைக்கை கொண்டு வரப்போகுதா?
பஜாஜ் நிறுவனம் தனது என்125 என்ற குறைந்த விலை பல்சரை தற்போது தயார் செய்து வருகிறது. இந்த பைக்கை இந்திய சாலைகளில் நிறுவனம் சோதனை செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து பேசி வருகிறார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் தான் தனது மிகப்பெரிய பல்சர் பைக்கின் 400 சிசி இன்ஜின் திறன் கொண்ட பைக்கை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகப்படுத்திய கையோடு அடுத்ததாக குறைந்த விலையில் ஒரு பல்சர் பைக்கையும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் தயாராகி வருகிறது. இதற்காக என் 125 என்ற பல்சரை உருவாக்கியுள்ளது.

இந்த பைக்கை நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இந்த பைக் குறித்த சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த புகைப்படத்தில் உள்ள பைக்கில் உள்ள வடிவமைப்பை பொறுத்தவரை இது பல்சர் என்எஸ்125 பைக் லுக்கை பெரும்பான்மை பெற்றுள்ளதாக இருக்கிறது.
அதன்படி இந்த பைக்கில் பைக்குக்கு கீழே எக்ஸாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. பைக்கில் சிங்கிள் கிராப் ரெயில் மற்றும் டயர் ஹக்கர் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கில் பாக்ஸ் செக்ஸ் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளும் பல்ப் இண்டிகேட்டர்களும் உள்ளன. இந்த பைக்கில் உள்ள சீட்டை பொருத்தவரை ஸ்பிளிட் சீட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கின் பெட்ரோல் டேங்கில் நீட்டிக்கப்பட்ட எக்ஸ்டென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் வழங்கப்பட்டிருக்கிறது. இது டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வழங்கும் அம்சம் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக் சோதனை செய்யப்படுவது இது ஒன்று முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதே பைக் சோதனை செய்யப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 124.45 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 13.99 பிஎஸ் பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கின் முன்பக்கம் டிஸ்க் பிரேக்குகளும் பின்பக்கம் ட்ரம் பிரேக் செட்டப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்பக்கம் டெனஸ்கோபிஷனும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தீபாவளியை குறிவைத்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வரும்போது மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 போட்டியாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக்கின் விலையை பொறுத்த வரை குறைந்த விலை பல்சர் பைக்காக இது விற்பனைக்கு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் ஒரு லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகமாக ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் குறித்த இறுதி கட்ட முடிவுகளை பஜாஜ் நிறுவனம் எடுத்த பின்பு தான் இந்த பைக்கின் விலை குறித்த தெளிவான விபரங்கள் எல்லாம் நமக்கு தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் பலர் இந்த பைக்கை சொந்தமாக வாங்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருக்கிறார்கள். அவர்களது கனவை நிறைவேற்றும் வகையில் குறைந்த விலையில் பல்சர் பைக் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது.
Source: Acko Drive


Click it and Unblock the Notifications









