இனி ஒருத்தர் கூட பஸ்ல ஏற மாட்டாங்க! இவ்ளோ கம்மியான கட்டணத்தில் டாக்ஸியா! சந்தோஷத்துல கையும் ஓடல காலும் ஓடல!
இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்கப்பட்டு கொண்டுள்ளது. குறிப்பாக டாக்ஸி (Taxi) சேவைகளில், எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த வரிசையில் பெங்களூர் விமான நிலையத்தில் (Bangalore Airport) தற்போது புதிதாக எலெக்ட்ரிக் டாக்ஸிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிர்வாகமானது, ரீஃபெக்ஸ இவீல்ஸ் (Refex eVeelz) நிறுவனத்துடன் இணைந்து இந்த எலெக்ட்ரிக் டாக்ஸிகளை அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்த எலெக்ட்ரிக் டாக்ஸிகளில் பயணிகள் சௌகரியமான பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள டாக்ஸி ஸ்டாண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் டாக்ஸிகளை பயணிகள் 'புக்கிங்' செய்து கொள்ளலாம். அத்துடன் 'BLR Pulse' என்ற செயலி மூலமாகவும் 'புக்கிங்' செய்து கொள்ள முடியும்.

இந்த எலெக்ட்ரிக் டாக்ஸிகளில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. இது முதல் 4 கிலோ மீட்டர்களுக்கான கட்டணம் ஆகும். அதற்கு பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 24 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) வெகு சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டுதான் பெங்களூர் விமான நிலையத்தில் இந்த எலெக்ட்ரிக் டாக்ஸிகளின் சேவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் முதற்கட்டமாக 175 எலெக்ட்ரிக் டாக்ஸிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் படிப்படியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் விமான நிலையமானது, பெங்களூர் நகரில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. போதாக்குறைக்கு சென்னை விமான நிலையத்தை (Chennai Airport) போல், பெங்களூர் விமான நிலையத்திற்கு மெட்ரோ ரயில் சேவையும் இல்லை.
எனவே பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்று வருவதற்கு டாக்ஸிகளைதான் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) பஸ்கள் உள்ளன என்றாலும், டாக்ஸிகள்தான் பெரும்பாலான பயணிகளின் 'சாய்ஸ்' ஆக உள்ளது.
ஓலா (Ola), ஊபர் (Uber) மற்றும் ப்ளூஸ்மார்ட் (BluSmart) போன்ற நிறுவனங்களின் டாக்ஸிகளை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இனி பெங்களூர் விமான நிலைய நிர்வாகத்தின் முயற்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் டாக்ஸிகளையும் பயணிகள் அதிகளவில் பயன்படுத்த தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாறி கொண்டுள்ள நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. அங்கு விமான நிலைய போக்குவரத்திற்காக புதிதாக 175 எலெக்ட்ரிக் டாக்ஸிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவி செய்யும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








