தல தோனி துணையுடன் விற்பனைக்கு வந்த காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு!.. ரொம்ப ராசியானவரா இருப்பாருபோலையே!

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவமான சிட்ரோன் (Citroen), இந்தியாவில் சமீபத்தில் கூபே எஸ்யூவி (Coupe SUV) ரக கார் மாடலான பசால்ட் (Basalt)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த காரை கிரிக்கெட் விளையாட்டு வீரர் தல தோனியின் துணையுடனேயே அந்நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கியது. ஆமாங்க, நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக எம்எஸ் தோனியே இருக்கின்றார். இந்த சூழலிலேயே மிக மிக குறைவான விலையில் பசால்ட் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. ரூ. 7.99 லட்சம் என்கிற விலையிலேயே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இந்த காருக்கே தற்போது நல்ல வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பசால்ட் மாறியிருக்கின்றது. சென்ற ஆகஸ்டு மாதத்திலேயே பசால்ட் காரை சிட்ரோன் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Citroen basalt coupe suv

ஆகையால், இதுவே இக்கார் மாடல் விற்பனைக்கு வந்த முதல் மாதமாக உள்ளது. இந்த முதல் மாதத்திலேயே சுமார் 579 யூனிட்டுகள் பசால்ட் கார் மாடல்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஆகஸ்டு 9 ஆம் தேதியில் இருந்து கிடைத்த விற்பனை எண்ணிக்கையே இதுவாகும். நிறுவனத்தின் விலை குறைவான கார் மாடலான சி3-கூட இந்த அளவிற்கு விற்பனையாகவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

அது, இதைவிட குறைவான எண்ணிக்கையாக ஆகஸ்டு மாதம் முழுக்க 507 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றது. எனவே, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சிட்ரோன் கார் மாடலாக பசால்ட் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சிட்ரோன் நிறுவனம் தல தோனியை வைத்து புதிய விளம்பர வீடியோவை தயார் செய்திருக்கின்றது.

Citroen basalt coupe suv tvc

இந்த விளம்பர வீடியோ புதிய சிட்ரோன் பசால்ட் காரின் அட்வான்ஸ்டு சிறப்பம்சங்களையும், பாதுகாப்பு திறன்களையும், தனித்துவமான வடிவமைப்பை பற்றியும் விளக்கும் வகையில் இருக்கின்றது. பசால்ட் சிட்ரோன் நிறுவனத்தின் இந்தியாவிற்கான நான்காவது தயாரிப்பு ஆகும். இந்த கார் இந்திய சந்தையில் மூன்று விதமான வேரியண்டுகள் மற்றும் 7 விதமான வண்ண ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதில் 5 ஒற்றை டோனிலும், 2 டூயல் டோன் ஆப்ஷன் ஆகும். யு (You), பிளஸ் (Plus) மற்றும் மேக்ஸ் (Max) ஆகியவையே அவை ஆகும். இந்த கார் மாடலின் ஆரம்ப விலை ரூ. 7.99 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 13.57 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரின் விலை மட்டுமே கவரக் கூடியதாக இல்லைங்க, அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களும் மனதைக் கவரக் கூடியதாகவே இருக்கின்றன. இதன் உயர்நிலை வேரியண்டே சிறப்பம்சங்களை மிக மிக அதிகளவில் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓஆர்விஎம், ஒயர்லெஸ் சார்ஜர், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகியவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, பின்னிருக்கைக்கான ஏசி துவாரங்கள் தாழ்வான நிலையிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல் காரில் பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக சிட்ரோன் வழங்கி இருக்கின்றது.

6 ஏர் பேக்குகள், ரியர் கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் மவுண்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகியவையே அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 579 யூனிட் என்பது மிகவும் குறைவானதாக தெரியலாம். ஆனால், மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் சிட்ரோன் எனும் வளர்ந்து வரும் நிறுவனத்தின் தயாரிப்பு இந்த அளவிற்கு விற்பனையாகி இருப்பது உண்மையில் ஆச்சரியமளிக்கும் தகவலாகவே உள்ளது. இந்தியாவில் இந்த பசால்ட் காருக்கு வரும் நாட்களிலும் நல்ல வரவேற்பேக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 8, 2024, 5:00 [IST]
English summary
Basalt coupe suv is now citroens s top selling car
மேலும்... #citroen #Citroen Basalt
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+