பெட்ரோல்/ டீசல் போட்டு பணத்தை செலவழிக்க தேவையில்லை! ஆட்டோ டிரைவர்களுக்கு கிடைத்த வரபிரசாதம்!!
எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) மெல்ல மெல்ல போக்குவரத்தின் உயிர்நாடியாக மாறி வருகிறது. நம் இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Scooters) மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை (Auto rickshaw) வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மார்க்கெட்டில் புது, புது எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள புதிய ஆட்டோ ரிக்ஷாக்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறொம்.
பாக்ஸி மொபைலிட்டி (BAXY Mobility), பாக்ஸி க்ருப்பில் ஆட்டோமொபைல் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்குகிரது. இந்த இவி நிறுவனம் தான் தற்போது தனது புதிய 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை 'சார்ஜ் கரோ' (Charge Karo) என்கிற பெயரில் வெளியீடு செய்துள்ளது. இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் ஈய-அமிலம் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரி தொழிற்நுட்பங்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ளன.

பாக்ஸி தற்போது உருவாக்கியுள்ள எலக்ட்ரிக் ஆட்டோக்களில் விலை குறைவானவை, பிரீமியம் தரத்திலானவை மற்றும் செயல்திறன்மிக்கவை என மூன்று விதமான எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அடங்குகின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஏற்கனவே பாக்ஸி நிறுவனத்தில் இருந்து பெட்ரோல்/டீசல் என்ஜின் உடன் கிடைக்கின்றன.
அதேபோல், இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் பயணிகளை அழைத்து செல்வதற்கு மட்டுமின்றி, பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படும். இதனால், இவற்றை ஷேர் ஆட்டோக்களாக பயன்படுத்துவதுடன், லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைக்கும் பயன்படுத்தலாம். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் குறித்த மற்ற விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்களின் வெளியீடு குறித்து பாக்ஸி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ் பாக்ஸி கூறுகையில், "இந்தியாவில் அதிகமான மக்களுக்கு நிலையான இயக்கத்தை வழங்கக்கூடிய வகையில் தொடர்ந்து பணியாற்றும் எங்களுக்கு இந்த வெளியீடு ஒரு முக்கியமான படியாகும். இது நகரங்கள் முழுவதும் மலிவான போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லும், மேலும் இந்தியாவின் நிலையான இயக்கத்திற்கான இலக்குகளில் நிச்சயமான மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.
பாக்ஸி மொபைலிட்டி நிறுவனத்தின் சிஇஓ குமார் ராமமூர்த்தி கூறுகையில், "இந்த வரம்பு நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. லாஸ்ட்-மைல் மொபைலிட்டியின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை இது உள்ளடக்கியது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தலைநகர் டெல்லிக்கு அருகே குர்கானில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியின் மூலம் பாக்ஸி மொபைலிட்டியின் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளன. ஆதலால், இவற்றின் விலைகள் எல்லா தரப்பினராலும் ஏற்கக்கூடிய அளவில் நிர்ணயிக்கப்பட்டால், கஸ்டமர்கள் குவிவார்கள் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








