சீன நிறுவனம் இந்த காரைதான் அறிமுகம் செய்யபோகுது.. ஃபுல் சார்ஜ் பண்ணா சென்னையில இருந்து ராமேஸ்வரமே போயிடலாம்!

சீனாவை தாயகமாகக் கொண்டு இயங்கும் மின்சார கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (BYD). இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முதலில் இந்த நிறுவனம் இ6 (e6) எனும் எம்பிவி (MPV) ரக காரையே சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆரம்பத்தில் வர்த்தக நோக்கில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டது. இந்த பிரிவில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததைத் தொடர்ந்து, தனி நபர்களுக்கான விற்பனைக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், இதை செய்த கையோடு அடுத்த தயாரிப்பாக அதன் உலக புகழ்பெற்ற அட்டோ 3 (Atto3) எனும் எலெக்ட்ரிக் காரை பிஒய்டி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

Byd seal ev

Source: Autocar India இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலுக்கு பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi) மற்றும் பென்ஸ் (Benz) போன்ற சொகுசு கார் பிராண்டுகளின் தயாரிப்புகளை பயன்படுத்துவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே பிஒய்டி நிறுவனம் அதன் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இந்த நிறுவனம் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி அன்றே தன்னுடைய புதுமுக காரை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.

சீல் (Seal) எனும் கார் மாடலையே இம்முறை இந்தியாவிற்காக சீன நிறுவனம் ஒதுக்கி இருக்கின்றது. இது ஓர் செடான் (Sedan) வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதனை சிபியூ (CBU) வாயிலாக பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வரும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே என்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் இந்த கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரம் வெளியாகி இருக்கின்றது. பிஒய்டி சீல் இந்தியாவில் ஒரே ஒரு தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் பலதரப்பட்ட ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதில் இந்தியாவில் அது குறிப்பிட்ட வகுப்பு மக்களை மட்டுமே குறிவைக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. அதாவது பணக்காரர்கள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தும் ஓர் காராகவே இதன் வருகையும் இருக்கும் என தெரிகின்றது.

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களும் அதிக விலயைக் கொண்டவையாகவே காட்சியளிக்கின்றன. இதேபோல், புதிய சீல்-ம் அதிக விலையைக் கொண்டதாகவே இருக்கும். இதை உறுதிப்படுத்தும் விதமாக அட்டோ3-க்கு மேல் இடத்திலேயே இந்த கார் மாடல் நிலை நிறுத்தப்பட இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் முழு சார்ஜில் இந்த கார் 570 கிமீ தூரம் பயணிக்குமாம். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன் 230 பிஎச்பி மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது ரியர் ஆக்ஸிலில் பொருத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த கார் வெறும் 6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டது ஆகும். இத்தகைய திறன் கொண்ட காராகவே பிஒய்டி சீல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா இவி6 மற்றும் வால்வோ சி4 ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். மேலும், சீல் கார் மாடலே இந்தியாவிற்கான பிஒய்டி-யின் முதல் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகள் நிறைந்த கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவுவதனாலேயே பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் தர எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரு இருந்தா சென்னையில இருந்து 562 கிமீ தூரத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கே போயிடலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 26, 2024, 22:08 [IST]
English summary
Before official launch byd seal e car specifications leaked
மேலும்... #பிஒய்டி #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+