அம்பானியாவே இருந்தாலும் இந்த கார வாங்க முடியாது! ஒத்த கால்ல நின்னு அடம் பிடிச்சாலும் அவரால் அதை வாங்க முடியாது
உலக புகழ்பெற்ற சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனம் பென்ட்லீ மோட்டார்ஸ் (Bentley Motors). இந்த நிறுவனத்தின் சூப்பரான ஆடம்பர ரக கார் மாடல்களில் ஒன்றாக பட்டுர் (Batur) இருக்கின்றது. இந்த மாடலிலேயே கன்வர்டபிள் (Convertible) வெர்சனை வெளியீடு செய்திருக்கின்றது, பென்ட்லீ நிறுவனம்.
பட்டுர் நிறுவனத்தின் அதிக சொகுசு வசதிகள் நிறைந்த கார் மாடல் மட்டுமல்ல அதீத திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட கார் மாடலும் அதுவாகும். இத்தகைய கார் மாடலுக்கே கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அதில் கர்வென்டபிள் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. கன்வெர்டபிள், தேவைப்படும்போது கூரை இருக்கும்படியும், கூரை இல்லாத வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பென்ட்லீயின் முல்லினர் கோச் பில்டிங் பிரிவில் (Mulliner coachbuilding division) வைத்து தயாரிக்கப்பட்ட மூன்றாவது கார் மாடலே பட்டுர் கன்வெர்டபிள் ஆகும். மொத்தமாகவே 16 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆமாங்க, உலக அளவில் விற்பனைச் செய்ய இத்தனை யூனிட்டுகளை பென்ட்லீ தயார் செய்திருக்கின்றது.
எனவே இந்த காரை வாங்க உலக பணக்காரர்கள் மத்தியில் மிகப் பெரிய போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து யூனிட்டுகளையும் பிரத்யேக கஸ்டமைசேஷன் வாயிலாக விற்கவும் அது திட்டமிட்டுள்ளது. இப்போதைக்கு தோராயமாக இந்த காருக்கு 20.9 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த காரில் கான்டினென்டல் ஜிடி மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 6.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் டபிள்யூ 12 மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 750 எச்பி மற்றும் 1000 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.
மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 336 கிமீ ஆகும். இதுமட்டுமில்லைங்க இதனால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும் எட்ட முடியும். இத்தகைய அதிக திறன்மிக்க காராகவே பென்ட்லீ பட்டுர் கன்வெர்டபிள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த காரில் பயன்படுத்தப்படும் நிறம் தொடங்கி இருக்கைகளுக்கான போர்வை வரை என அனைத்தையும் கஸ்டமைஸ் செய்துக் கொள்ளும் வசதியை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க இருப்பதாக பென்ட்லீ தெரிவித்து இருக்கின்றது. இந்த காரின் மேற்கூரையை வெறும் 19 செகண்டுகளிலேயே விரித்துக் கொள்ள முடியும்.
ஆமாங்க, ஒரு பட்டனைத் தட்டினாலே பட்டுர் கன்வெர்டபிள் கூரை இல்லாத நிலையில் கூரை உள்ள நிலைக்கு வந்துவிடும். இந்த கார் மாடல் மணிக்கு 50 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தாலும், இந்த அளவு அதிக வேகத்தில் கூரை விரிந்துவிடும். இந்த கார் ஏற்கனவே விற்பனைக்கு விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

ஆமாங்க, பென்ட்லீயின் பட்டுர் கன்வெர்டபிள் காரின் 16 யூனிட்டுகளையும் ஏற்கனவே உலக செல்வந்தர்கள் போட்டி போட்டு வாங்கிவிட்டனர். எனவே இனி இந்த கார் விற்பனைக்குக் கிடைக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை யாரேனும் வாங்கி இருக்கின்றார்களா என்பது தெரியவில்லை. ஒரு வேளை இந்தியர்கள் யாரேனும் இந்த காரை வாங்கியிருந்தால் அந்த காரை விரைவில் இந்திய சாலையில் காண்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதுபோன்று குறைவான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோன்று அவர்கள் சிறப்பு பதிப்புகளை மிக மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த மாதிரியான கார் மாடல்களுக்கு எப்போதும் கார் காதலர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் உண்டு. இதற்கு சான்றாகவே பென்ட்லீ பட்டுர் கன்வரெ்டபிளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









