எமனை கூப்பிட்டு வச்சு வம்புக்கு இழுக்க நினைப்பவர்கள் இந்த காரை வாங்கலாம்.. குல தெய்வம்போல கூடவே துணை நிற்கும்!
பாதுகாப்பான பயணத்தை உறுதிச் செய்யக் கூடிய கார் (Safest Car)-களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு சான்றாக சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் மாடல் உள்ளது. யாரும் நம்ப முடியாத வகையில் இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை வாங்கிக் குவித்துள்ளது. இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க இந்தியாவில் இதுபோன்று இன்னும் பல கார் மாடல்கள் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
அந்தவகையில், இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற டாப் ஐந்து (Top 5) செடான் ரக கார் (Sedan Car)-கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி டிசையர்: இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாருதி சுஸுகி டிசையர் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த கார் நவம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சமீபத்தில் குளோபல் என்சிஏபி இந்த காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவலை வெளியிட்டது.
அது மேற்கொண்ட மோதல் ஆய்வில் புதிய மாருதி சுஸுகி டிசையர் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை அது குவித்திருக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 31.24 புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 42 புள்ளிகளுக்கு 39.20 புள்ளிகளையும் இந்த கார் மாடல் பெற்றது.
இதுபோன்று அதிகபட்ச பாதுகாப்பு புள்ளிகளை பெறும் முதல் மாருதி சுஸுகி கார் மாடல் இந்த டிசையரே ஆகும். இதனால்தான் ஒட்டுமொத்த வாகன உலகமும் தற்போது ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மும்முனைகள் கொண்ட சீட் பெல்ட்டுகள், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களையே மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.
இதுதவிர, சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சத்தையும் இந்த காரில் மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. இதுபோன்ற அம்சங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து இந்த காருக்கு ஆக சிறந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க செடான் ரக கார் மடால்களில் இதுவும் ஒன்றாகும். ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடலும் பெற்றிருக்கின்றது. சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளையும், பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 29.71 புள்ளிகளையும் இந்த கார் மாடல் பெற்றது.
இந்த காரில் பாதுகாப்பிற்காக 6ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், மும்முனை சீட் பெல்ட்டுகள் உள்ளிட்ட அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களை மட்டுமல்ல பிரீமியம் தர அம்சங்களையும் இந்த கார் மாடல் மிக தாராளமாகக் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் ஆரம்ப விலை ரூ.10.69லட்சம் மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ.18.69லட்சமே ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus): இந்த காரே இந்தியாவில் முதன் முதலில் விற்பனைக்குக் வந்த ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்தே ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றது.
இது பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 29.71 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளையுமே பெற்று இருக்கின்றது. இதன் விலை ரூ. 11.56 லட்சம் தொடங்கி ரூ. 19.41 லட்சம் வரையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் செடான் ரக கார் மாடல்களில் ஹூண்டாயின் இந்த கார் மாடலும் அடங்கும். இதேபோல், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல்களில் ஒன்றாகவும் வெர்னா செடான் கார் இருக்கின்றது.
இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 28.18 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளையுமே பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏகப்பட்ட அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், முன் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் ஏர் பேக்குகளை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. இதுதவிர, இஎஸ்சி, ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட் உள்ளிட்ட அம்சங்களையும் அது வழங்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 17.48 லட்சம் வரையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடிக்கடி கார் பயணத்தை மேற்கொள்வோர் மற்றும் அதிக ஆபத்தான சூழலில் பயணிப்போர்கள் இந்த மாதிரியான கார்களை பயன்படுத்தலாம். இவை பாதுகாப்பை மிக தாராளமாக வழங்கும். இதுமட்டுமில்லைங்க, அதிக பிரீமியமான டிராவல் அனுபவத்தையும் இந்த கார் மாடல் அதன் பயணிகளுக்கு வழங்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








