நம்ம ஆளுங்க மிக பெரிய டீசல் கார் பிரியர்கள் என்பதை இத வச்சே கண்டுபிடிச்சுடலாம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவை காற்றை அதிகம் மாசை ஏற்படுத்துவதாகக் கூறி அரசே அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கான எதிரான நடவடிக்கை சமீப காலமாக தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே, மக்களை மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் மீதான மோகம் குறைந்தபாடில்லை. இந்த நிலையை உணர்ந்து வாகன உற்பத்தியாளர்கள் இப்போதும் பெட்ரோல், டீசல் வாகனங்களை அதிக அளவில் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் நடப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தியாவில் அதிகளவில் பெட்ரோல்-டீசல் எஞ்சின் கொண்ட வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த பட்டியலில் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு வந்த கார் மாடல்களின் லிஸ்ட்டையே பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அறிமுகமான டாப் 5 டீசல் கார் மாடல்களைப் பற்றிய பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Diesel car

ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta): இந்தியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்சின் தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

டீசல் ஆப்ஷனில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களே இந்த மோட்டர் உடன் வழங்கப்படுகின்றது.

லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா, கார் இணைப்பு தொழில்நுட்பம் மற்றும் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா இந்தியாவில் ரூ.10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில் டீசல் ஆப்ஷன் 12.50லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha): இந்தியாவில் மஹிந்திரா தார் கார் மாடலுக்கு போட்டியாக விற்பனையில் உள்ள கார் மாடலே ஃபோர்ஸ் கூர்கா ஆகும். இதன் 5 கதவுகள் கொண்ட வெர்ஷனை சமீபத்தில் புதுப்பித்து ஃபோர்ஸ் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாடலில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.

இது 2.6 லிட்டர் டீசல் மோட்டாரே கூர்காவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் ரூ. 18 லட்சம் ரூபாயில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3XO): மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலே எக்ஸ்யூவி 300. இதன் அப்டேட் வெர்ஷனே எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகும். அப்டேட்டை அடுத்து அதன் பெயரையும் மஹிந்திரா மாற்றி இருக்கின்றது. எக்ஸ்யூவி 300 மாடலைப் போலவே இதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷனை மஹிந்திரா வழங்குகின்றது.

டீசல் ஆப்ஷனில் 115 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட 1.5 லிட்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் டீசல் மோட்டாரில் வழங்கப்படுகின்றன. காற்றோட்டத்தை வழங்கும் திறன் கொண்ட இருக்கைகள் மற்றும் லெவல் 2 அடாஸ் என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

கியா சோனெட் (Kia Sonet): கியா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் சொனெட்-ம் ஒன்றாகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே கியா இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் இரண்டு பெட்ரோல் என்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் விருப்ப தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 113 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றக் கூடிய டீசல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனே இந்த காருடன் வழங்கப்படுகின்றது.

மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் (Mahindra Bolero Neo+): நம்முடைய இந்த பட்டியலின் கடைசி பட்ஜெட் கார் மாடலே மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ் ஆகும். பொலிரோ அதிக இருக்கை மற்றும் இட வசதிக்கு பெயர்போன கார் மாடலாக உள்ளது. புதிய 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மக்கள் டீசல் எஞ்சின் கொண்ட கார்களை அதிகளவில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக கார் உற்பத்தியாளர்களும் தங்களுடைய முன்னணி கார் மாடல்களில் டீசல் ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், மாருதி சுஸுகி போன்ற ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் டீசல் எஞ்சின் கார் உற்பத்தியை அடியோடு கை விட்டு இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 15:00 [IST]
English summary
Best diesel suvs launched in india in first half of 2024
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+