அக்கவுண்டல ரூ15 லட்சம் விழுந்ததும் உடனே இந்த காரை வாங்கிடலாம்! ஒவ்வொன்னும் தரமா இருக்குதே!

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிதாக கார் வாங்கும் பலர் எலெக்ட்ரிக் காரை வாங்கலாமா என யோசித்து வருகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்ஜெட்டில் மார்க்கெட்டில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை பற்றி விரிவாக கூறவே இந்த பதிவை செய்துள்ளோம்.

பொதுவாக சிறிய கார்கள் என்றால் அதிக கூட்டம் நிறைந்த சாலைகளில் பயணிப்பது எளிதாக இருக்கும். டிராபிக்கில் போகும்போது சிறிய கார்களை திருப்புவது சுலபமாக இருக்கும். இதனால் நீங்கள் சிட்டியில் பயன்படுத்தும் படி ஒரு சிறிய காரை எலெக்ட்ரிக் காராக வாங்க நினைத்தால் உங்களுக்கு கம்மி பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் கார்கள் நிறைய மார்க்கெட்டில் உள்ளன.

best electric car in india

எம்ஜி கோமெட் இவி: எம்ஜி நிறுவனத்தின் கோமெட் இவி கார் ரூ 6.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 230 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சிட்டி பயன்பாட்டிற்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும் முக்கியமாக குறுகிய சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல சாய்ஸ் தான்.

டாடா டியாகோ இவி: டாடா நிறுவனத்தின் டியாகோ இவி கார் ரூ7.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது. இது ஒரு காம்பேக்ட்டான ஸ்டைலிஷ் ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த காரை ஒருமுறை சார்ஜ் போட்டால் 315 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டது.

best electric car in india

டாடா பஞ்ச் இவி: டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 421 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. முக்கியமாக எலெக்ட்ரானிக் சன்ரூஃப் வாய்ஸ் அசிஸ்ட்டென்ட் இருக்கிறது. மேலும் இந்த காரில் பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்கள் உள்ளன.

சிட்ரோன் இசி 3: சிட்ரோன் நிறுவனத்தின் இசி3 என்ற கார் ரூ12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஒரு முறை சார்ஜ் போட்டால் 320கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 29.2கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரை 10-80 சதவீத சார்ஜ் ஏற வெறும் 57 நிமிடம் தான் எடுத்துக் கொள்ளும்.

best electric car in india

இந்த கார்கள் எல்லாம் ரூபாய் 15 லட்சத்திற்கும் குறைவான விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது சிறிய ரக கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் , மக்களை கவரும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எலெக்ட்ரிக் கார் மீது விருப்பம் இருந்தால் நீங்கள் தாராளமாக இந்த காரை தேர்வு செய்யலாம்.

எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்யும் முன்பு நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இந்த காரை நீங்கள் எந்த பயன்பாடுக்காக வாங்குகிறீர்கள் என கவனிக்க வேண்டும் எலெக்ட்ரிக் கார்களை எடுத்துக் கொண்டு நீங்கள் நீண்ட தூர பயணம் செய்வது என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. சிட்டி பயன்பாட்டிற்கு மட்டும் ஏற்றதாக மட்டுமே எலெக்ட்ரிக் கார் தற்போது இருக்கிறது.

சிட்டி பயன்பாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் மற்றொரு விஷயத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் காரை வாங்கிய பிறகு அதை எப்படி சார்ஜ் செய்ய போகிறீர்கள் என பார்த்துக்கொள்ள வேண்டும். பலர் காரை பொது இடத்தில் பார்க் செய்கிறார்கள். அங்கு சார்ஜ் செய்வது கடினமான விஷயமாகும். அதே நேரம் தனியார் பார்க்கிங்கிளும் சார்ஜ் செய்வது கடினமான விஷயம் சொந்தமாக பார்க்கிங் இருந்தால் மட்டுமே சார்ஜிங் சுலபமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் முன்னர் நீங்கள் பல்வேறு விஷயங்களை கவனித்து எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்ய வேண்டும். முக்கியமாக அதன் பேட்டரி உள்ளிட்ட விவரங்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த பேட்டரி உங்களுக்கு தேவையான விஷயங்களை தருமா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2024, 7:00 [IST]
English summary
Best electric cars india price under 15 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X