7லட்ச ரூபா வச்சுக்கிட்டு கார வாங்க அங்கும்-இங்குமா அலஞ்சுட்டு இருக்கீங்களா? இந்தா புடிங்க மாருதி கார் லிஸ்ட்!

மலிவு விலைக்கு பெயர்போனவையாக மாருதி சுஸுகி (Maruti Suzuki)-யின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் மலிவு விலைக்கு பெயர்போனவை மட்டுமல்ல, குறைந்த பராமரிப்பு செலவையும், மைலேஜையும் மிக அதிகமாக வழங்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதனால்தான், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏகபோகமான வரவேற்பை இந்தியர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே, ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுஸுகி கார் மாடல்களின் லிஸ்ட்டை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

இந்த லிஸ்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து கார் மாடல்களும் முதல் முறையாக காரை வாங்க இருப்போர்கள் ஏற்றவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பதிவில் ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மாருதி சுஸுகி கார்களையே பட்டியலிட்டு உள்ளோம். ஒட்டுமொத்தமாக ஐந்து கார் மாடல்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க .

Maruti cars

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): இந்த கார் மாடல் நகர்புற பயன்பாட்டிற்கு ஒன்றாகும். கச்சிதமான தோற்றம், அதிக எரிபொருள் சேமிப்பு திறனை விரும்புவோர்க்கு ஏற்ற ஹேட்ச்பேக் என இதனைக் கூறலாம். இந்த கார் ரூ.3.99 லட்சத்தில் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எனவே பட்ஜெட் கார் பிரியர்கள் பலரின் விருப்பமான கார் மாடலாக ஆல்டோ கே10 இருக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என்கிற ஆகிய இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் சிறிய அளவும், திறமையான எஞ்சினும் குறைந்த செலவில் இயங்கக் கூடிய நகர்புறங்களுக்கு ஏற்ற காராக ஆல்டோ கே10-ஐ மாற்றி இருக்கின்றது.

மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Suzuki Celerio): இந்தியாவில் ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு சூப்பரான கார் மாடலாக செலிரியோ உள்ளது. இதன் ஆரம்ப விலையே ரூ. 5.36 லட்சம் மட்டுமே ஆகும். இந்த கார் மாடலும் இந்தியாவில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுவும் ஓர் குட்டியான தோற்றம் கொண்ட ஹேட்ச்பேக்கே ஆகும். எனவே இதுவும் நகர்புற பயன்பாட்டிற்கான உகந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இத்துடன், வசதியான சவாரி மற்றும் சிறந்தை கேபின் ஸ்பேஸைக் கொண்ட காராகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், தினசரி பயணங்களுக்கு ஏற்ற காராகவும் காட்சியளிக்கின்றது.

மாருதி சுசுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR): கொஞ்சம் விசாலமான இடத்தை எதிர்பார்ப்போருக்கு ஏற்ற ஹேட்ச்பேக் ரக கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. குறிப்பாக, மாருதி சுஸுகி வேகன்ஆர் அதன் விசாலமான கேபின் மற்றும் உயரமான வடிவமைப்பிற்காக இந்தியர்கள் மத்தியில் அறியப்படுகிறது.

இந்த கார் மாடல் ரூ. 5.54 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் இந்தியர்களின் பிரியமான கார் மாடல் ஆகும். இந்தியர்கள் இந்த கார் மாடலை செல்லமாக 'டால் பாய்' என அழைப்பதுண்டு. இந்த உயரமான ஹேட்ச்பேக் தினசரி பயணங்களுக்கு ஏற்ற தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது.

மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis): ஸ்டைலான மற்றும் இளைஞர்களுக்கு ஏற்ற தயாரிப்பாக இந்த கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ.5.84 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் மினி எஸ்யூவிகளுக்கு இணையான அம்சங்களையே மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. அதன் தோற்றமும் அப்படியேதான் இருக்கின்றது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற காராகவும் இது காட்சியளிக்கின்றது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift): இப்போது இந்தியாவின் டிரெண்டிங்கில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இடம் பிடித்துள்ளது. ஸ்போர்ட்டி தோற்றம், சுவாரஸ்யம் நிறைந்து டிரைவிங் அனுபவம் மற்றும் விசாலமான கேபின் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ.6.49லட்சம் மட்டுமே ஆகும். உற்சாகமான ஓட்டும் அனுபவத்தை தினசரி பெற வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஏற்ற கார் மாடலே ஸ்விஃப்ட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஐந்து மாருதி சுஸுகி ஹேட்ச்பேக்குகளும் எரிபொருள் சிக்கனம் மற்றும் மலிவு விலைக்கு பெயர்போனவை ஆகும். உங்களின் தேவைகளை பலநிலைகளில் இந்த கார் மாடல்கள் பூர்த்தி செய்யும். குறிப்பாக, எரிபொருளை சிக்கனப்படுத்தி உங்கள் பாக்கெட்டை பாதுகாப்பதில் இந்த கார் மாடல்கள் அனைத்தும் கை தேர்ந்தவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2024, 5:00 [IST]
English summary
Best maruti suzuki cars under rs 7 lakh for new drivers
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+