காலண்டர்ல இந்த தேதிய குறிச்சு வச்சுக்கோங்க! வேற எந்த வேலையையும் இந்த தேதில வச்சுக்காதீங்க!

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ மூலம் இந்தியாவில் உள்ள ஆட்டோ மொபைல் துறை மிகப்பெரிய புரட்சியை சந்திக்க போகிறது. இதற்கான தேதியும் தற்போது வெளியாகி உள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி 17-22 தேதி வரை இந்த நிகழ்வை நடத்த தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரகதி மைதான், துவாரகா பகுதியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டரில் உள்ள யாஷோபூமி, நொய்டா பெருநகர பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் என்ற இடத்திலும் இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

இதற்கு முன்பு SIAM மற்றும் ACMA ஆகிய அமைப்புகள் தனித்தனியாக வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான கண்காட்சியை நடத்தி வந்தன. இந்நிலையில் முதன்முறையாக இந்த ஆண்டு துவக்கத்தில் பாரத் மொபிலிட்டி என்ற கண்காட்சி வர்த்தக அமைச்சகம் தரப்பிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் தொடர்பான நிகழ்வுகளையும் ஒரே நிகழ்வாக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Bharat Mobility Expo 2025

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் ஏராளமான செக்டாரை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க போகின்றன. முக்கியமாக கமர்சியல் வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், டயர்கள், பேட்டரி ஸ்டோரேஜ் பாகங்கள், சாப்ட்வேர், வாகன கட்டுமானத்திற்கு தேவையான கருவிகள் உள்ளிட்ட ஆட்டோமொபைல் தொடர்பான அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறப் போகிறது.

ஆட்டோமொபைல் துறையில் உள்ள பல்வேறு விதமான செக்டாரில் உள்ள அனைவரும் இந்த கண்காட்சியில் பங்கேற்கிறார்கள். இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சில் (EEPC), இந்தியா சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்சர்ஸ்(SIAM),ஃபெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (FICCI) அசோசியேடட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா (ASSOCHAM) தரப்பில் இருந்து பல்வேறு நபர்கள் இதில் ஆக்டிவாக பங்கேற்கப் போகிறார்கள்.

Bharat Mobility Expo 2025

இதுகுறித்து வர்த்தகத் துறையின் இணைச் செயலாளர் விபுல் பன்சால் கூறும்போது: " பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ தற்போது ஒரே குடைக்குள் அனைத்து பிராண்டுகளையும் கொண்டு வர முயற்சி செய்கிறது. ஆட்டோமொபைல் துறை சம்பந்தமான அனைத்து விதமான கண்காட்சியும் இங்கு நடக்கிறது. பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ மூலம் மொபிலிட்டி தொடர்பான அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு பங்களிக்க போகிறார்கள். இதனால் மூன்று இடங்களில் இந்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறினார்.

சமீப காலமாக 2ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் கண்காட்சி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும். இந்த கண்காட்சிக்கு சமீப காலமாக வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. இதன் காரணமாக அரசு இதை மாற்றி விட்டு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ என்ற கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு போதுமான அளவு வரவேற்பு கிடைக்கும்.

ஒரே நேரத்தில் அனைத்து செக்டாருக்கான கண்காட்சியும் நடத்துவது, அதில் பங்கேற்கும் நபர்களுக்கு வசதியை ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல் 2-3 செக்டார்களை ஒன்றாக இணைத்து உருவாக்கும் ஐடியாவையும் ஏற்படுத்தி தர அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இது இந்தியாவில் உள்ள மொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ கண்காட்சி தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2025ம் ஆண்டு இந்த தேதிகளில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகிறதை இப்போதே உணர்ந்து உள்ளார்கள். இதனால் பலர் இந்த எக்ஸ்போவில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

அரசு அனைத்து விதமான ஆட்டோமொபைல் செக்டார் கண்காட்சியையும், ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் புதிய விதமான கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகள் ஆட்டோமொபைல் செக்டாருக்குள் வரும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த மாதிரியான நேரங்களில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்படியான கண்காட்சிகளை ஏற்பாடு செய்வது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். தனித்தனியாக கண்காட்சியை நடத்துவதை விட ஒரே இடத்தில் பல்வேறு விதமான பொருட்களுக்கான கண்காட்சியை நடத்தும்போது ஆட்டோமொபைல் துறை மிகப் பெரிய வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 19:44 [IST]
English summary
Bharat mobility expo 2025 dates and venue revealed know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+