உலகமே இந்தியாவை தான் இப்ப திரும்பி பார்க்குது! ஜனவரி மாசம் மிரட்ட போகும் சம்பவம் நடக்கப்போகுது!

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியாக பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி என்ற நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை எங்கு நடக்க உள்ளது? இதில் யார் யார் பங்கேற்க இருக்கிறார்கள்? என்னென்ன விதமான நிகழ்ச்சிகள் எல்லாம் இதில் இடம்பெற உள்ளன? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.

இந்தியாவில் ஒவ்வொரு துறைக்கும் அந்த துறைக்கான ஒரு கண்காட்சி அரசால் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இப்படியாக ஆட்டோமொபைல் துறைக்காக ஆட்டோ எக்ஸ்போ என்ற கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் புதிய முயற்சியாக வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் வாகன தயாரிப்புக்கு தொடர்பான மற்ற அனைத்து துறைகளையும் ஒன்றாக சேர்ந்து ஒரே கண்காட்சியாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சியை சர்வதேச ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காக நடத்தினார்கள்.

bharat mobility global expo 2025

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியும் இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியையும் ஒன்றாக சேர்த்து நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இது பல்வேறு விதமான வாகனம் மற்றும் தொழில்நுட்ப அறிமுகங்கள் இடம்பெற உள்ளன.

இந்த கண்காட்சி மொத்தம் மூன்று விதமான இடங்களில் நடக்கிறது. பாரத் மண்டபம், யசோ பூமி மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் ஆகிய இடங்களில் வைத்து நடக்கிறது. இந்த மூன்று இடங்களும் டெல்லியில் தான் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான கண்காட்சிகள் இடம் பெற உள்ளன. இதனால் இந்த நாட்களில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் டெல்லிக்கு சென்றால் அனைத்து கண்காட்சியிலும் பங்கேற்க முடியும்.

இந்த கண்காட்சியில் டொயோட்டா, மாருதி ஹூண்டாய், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களும், சொகுசு வாகனங்களை தயாரிக்கும் பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி உள்ளிட்ட நிறுவனங்களும் கூடுதலாக வியட்னாமை சேர்ந்த இந்தியாவில் காலடிதடத்தை எடுத்து வைக்க உள்ள எலக்ெட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனமும் இதில் பங்கேற்க உள்ளது.

இது மட்டுமல்லாமல் டூ வீலர் வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, பஜாஜ் ஆட்டோ, பிஎம்டபிள்யூ மோட்டோராட், ஹோண்டா ஸ்கூட்டர், ஹீரோ மோட்டோகார்க், யமஹா இந்தியா, ஓலா எலெக்ட்ரிக், சுஸூகி மோட்டார் சைக்கிள், கிரீவீஸ் எலெக்ட்ரிக், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இதில் பங்கே இருக்கிறது. இந்நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளையும் புதிய தொழிற்நுட்பங்களையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளன.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வரும் ஹோண்டா, ஜீப், ரெனால்ட், நிஸான் ஃபோக்ஸ்வேகன், சிட்ரோன், பிஒய்டி, போர்ஸ் மோட்டார், வால்வோ ஆகிய நிறுவனங்கள் எல்லாம் பங்கேற்ற போவதில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளன. இந்நிறுவனம் தற்போது பிசினஸ் திட்டங்கள் பெரிய அளவில் இல்லை என்பதால் இதில் பங்கேற்க வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

இந்த கண்காட்சியில் வெறும் கார் மற்றும் பைக்குகள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட போவதில்லை, இது போக கூடுதலாக ஆட்டோமொபைல் துறையில் வந்துள்ள புதிய கண்டுபிடிப்புகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாகனங்களை கட்டுமானம் செய்யும் மிஷின்கள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், டயர்கள் பேட்டரி, வாகனங்களுக்கான சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 17ம் தேதி துவங்கும் நிலையில் இதற்கான டிக்கெட் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் ஊடகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமான அறிமுகங்கள் எல்லாம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாம் முடிந்த பிறகு பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காட்சியின் நடைபெறும் பாரத் மண்டபத்தில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி இந்தியா இன்டர்நேஷனல் டயர் ஷோ, இந்தியா சைக்கிள் ஷோ, பாரத் பேட்டரி ஷோ, ஸ்டீல் பேவிடியன் மொபிலிட்டி டெக் பெவிலியன் உள்ளிட்ட கண்காட்சிகள் இடம் பெற உள்ளன. டில்லி துவாரகா பகுதியில் உள்ள யசோ பூமி பகுதியில் நடக்கும் கண்காட்சியில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கான கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா பெரு நகரப் பகுதியில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் பகுதியில் பாரத் கட்டுமான கருவிகள் எக்ஸ்போ, இந்தியா அர்பன் மொபிலிட்டி மற்றும் கட்டுமான எஸ்போவும் நடைபெற உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆட்டோமொபைல் தொடர்பான கண்காட்சியில் வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ள கண்காட்சி மிகப்பெரிய கண்காட்சியாக பார்க்கப்படுகிறது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளானர். இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தும் வாகனங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த நிகழ்ச்சியில் நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2024, 15:20 [IST]
English summary
Bharat mobility expo 2025 in january all you need to know
மேலும்... #auto expo 2025 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+