மைலேஜை வாரி வழங்கும் காரை அறிமுகம் செய்ய போகும் டாடா! மொத்த இந்தியாவும் இதுக்காகதான் காத்துகிட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) ஆகிய வெர்ஷன்களில், டாடா நெக்ஸான் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் டாடா நெக்ஸான் காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் நாளை காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. எங்கு? என நீங்கள் உங்கள் மனதில் நினைப்பது புரிகிறது.

Tata Nexon

பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) வாகன திருவிழா நாளை தொடங்குகிறது. டெல்லியில் (Delhi) நடைபெறும் இந்த வாகன திருவிழா, வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த வாகன திருவிழாவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கவுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், மொத்தம் 8 தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரும் ஒன்றாகும். டாடா நெக்ஸான் சிஎன்ஜி மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Tata Nexon Interior

இதனுடன் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கிட் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிலிண்டர்களில் 60 லிட்டர் சிஎன்ஜி-யை நிரப்ப முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் பூட் ஸ்பேஸ் சுமார் 230 லிட்டர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் பல்வேறு அதிநவீன வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையிலேயே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் திகழ்ந்து வருகிறது. சிஎன்ஜி மாடலின் வருகைக்கு பின்னர், டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் சிஎன்ஜி இன்ஜின் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியது.

டாடா நெக்ஸான் சிஎன்ஜி காருக்கு முன்னதாக, டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG) ஆகிய 2 கார்களிலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Automatic Gear Box) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதன் காரணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிஎன்ஜி செக்மெண்ட் மீது கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் நம்பர்-1 இடத்தில் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 31, 2024, 14:23 [IST]
English summary
Bharat mobility global expo 2024 tata nexon cng debut all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+