பணத்தோட கெத்தை காண்பித்த இந்தியர்கள்! காஸ்ட்லியான காருன்னு தெரிஞ்சும் இவ்வளவு பேர் வாங்கிருக்காங்க!
பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார் மற்றும் பைக் விற்பனையில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளை விரும்பி வாங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்து வருவதால் இந்நிறுவனத்திற்கு பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். அதிக பணம் படைத்தவர்களே பிஎம்டபிள்யூ தயாரிப்புகளை வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

இதனால் நீங்கள் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளை வைத்திருந்தாலே சமூகத்தில் உங்களுக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலைமையின் தற்போது உள்ளது. இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்து 2023-ம் ஆண்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. சொகுசு கார் மற்றும் டூவீலர் விற்பனையில் பிஎம்டபிள்யூ இந்த சாதனையை செய்துள்ளது.
இதன்படி பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு மொத்தமாக 14,172 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 18 சதவீதம் வளர்ச்சியாகும். மொத்தம் விற்பனையான 14,172 வாகனங்களில் 13,303 வாகனங்கள் பிஎம்டபிள்யூ பிராண்டில் விற்பனையாகியுள்ளன. மீதி உள்ள வாகனங்கள் எல்லாம் பிஎம்டபிள்யூ இன் துணை நிறுவனமான மினி பிராண்டில் விற்பனையாகியுள்ளன.

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் 325 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. மொத்தமாக 1474 வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக விற்பனை செய்துள்ளன. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 10 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனம் வாகனமாக உள்ளது. பிஎம்டபிள்யூ வாகனங்களின் விலை எல்லாம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த வாகனங்களை எல்லாம் வாங்கும் அளவிற்கு இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகம் வருவது இதன் மூலம் நமக்குத் தெரிகிறது.
இந்தியாவில் பலர் பிஎம்டபிள்யூ வாகனங்களை வாங்குவதன் மூலம் சமூகத்தில் தங்கள் அந்தஸ்து உயர்வதாக கருதுவதால் பலர் இந்த வாகனங்களை வாங்குவதை தங்கள் வாழ்நாள் காலமாக கொண்டுள்ளனர். இந்த கனவை நிறைவேற்றும் தருணம் பலருக்கு தனது 2023-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது.

இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் முழு விவரங்களை பார்க்கும் போது அந்நிறுவனத்தின் 3 சீரியஸ் கார்கள் மொத்தம் 2702 கார்கள் கடந்த 2023-ம் ஆண்டு விற்பனையாகி உள்ளன. இந்த மாடல் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்த மாடலாகும். இதைத்தொடர்ந்து எக்ஸ்1 என்ற மாடல் 2633 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன.
தொடர்ந்து மூன்றாவது இடத்தில் எக்ஸ் 7 என்ற கார் இருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் மொத்தம் 1,513 கார்கள் விற்பனையாகி உள்ளன. அடுத்ததாக பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் என்ற டூவீலருக்கான பிராண்டில் மொத்தம் 8,768 பைக்குகள் கடந்த 2023 ஆம் ஆண்டு விற்பனையாகியுள்ளன. பைக்குகளை பொருத்தவரை கடந்த 2023 ஆம் ஆண்டு விற்பனை என்பது 20% வளர்ச்சியை தந்துள்ளது.
பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. முக்கியமாக 500 சிசிக்கு அதிகமான திறன் கொண்ட இன்ஜின் பைக்கில் பிஎம்டபிள்யூ சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ க்கு சிறந்த ஆண்டாக இருந்த நிலையில் அடுத்த ஆண்டும் இதேடிரெண்ட்டை தொடர 19 புதிய மாடல்களை களம் இறக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் புதிய எக்ஸ்3 புதிய மினி கண்ட்ரிமேன் மற்றும் ஆர்13 100 ஜிஎஸ் ஆகிய தயாரிப்புகள் இதில் உள்ளடங்கும். மொத்தம் உள்ள 19புதிய வாகனங்களில் 13 வாகனங்கள் கார்களாகவும் ஆறு வாகனங்கள் பைக்குகளாகவும் களம் இறங்க உள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த 2024-ம் ஆண்டிலும் நிச்சயமான நல்ல விற்பனையை பெற்று சொகுசு கார்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









