பிஎம்டபிள்யூ-வின் இந்த காரோட ரேட் தெரிஞ்சா உடனே வாங்கலாமான்னு நினைப்பீங்க!

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது 330 எஐ எம் ஸ்போர்ட் மற்றும் 330 எல்டி எம்ஸ்போர்ட் ஆகிய இரண்டு வேரியன்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தது. இந்நிலையில் தற்போது அதில் புதிய வேரியன்டாக எம்ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் வேரியன்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த எம்ஸ்போர்ட் ப்ரோ எடிஷன் பொருத்தவரை ரூபாய் 62.60 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த எம் ஸ்போர்ட்ஸ் ப்ரோ எடிஷன் கார் காராகவும் இது பெட்ரோல் இன்ஜின் உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. என்ட்ரி லெவல் வேரியன்டை விட ரூபாய் 2 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

BMW 3 Series Gran Limousine

இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை என்ட்ரி லெவல் வேரியன்டில் உள்ள அதே டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 2 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் ஆகும். இது 258 பிஎஸ் பவரையும், 400எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் ரியர் வீல் டிரைவ் காராக விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.2 நொடியில் பிக்கப் செய்து விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் எக்கோ, ப்ரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவிங் மோடுகள் இருக்கின்றன.

BMW 3 Series Gran Limousine

இந்த காரைப் பொறுத்தவரை சில டிசைன் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக 3 சீரிஸ் கிரான் லிமௌசைன் காரின் வடிவமைப்பில் சில பாகங்கள் மட்டும் கருப்பு டிசைனில் வழங்கப்பட்டுள்ளன. இதன் கிரில் பகுதி கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன . இது ஸ்மோக் எஃபெக்ட்டுடன் இருக்கிறது.

இது இந்த காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை கொடுக்கிறது. இது போக வெளிப்புறத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. பின்பக்க டிஃப்யூசரில் கருப்பு நிற கிளாஸ் நிற பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி மினரல் ஒயிட், கார்பன் பிளாக், போர்டிகோ ப்ளூ, ஸ்கை ஸ்கேப்பர் மெட்டாலிக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

BMW 3 Series Gran Limousine

இந்த காரின் உட்புறமும் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. கருப்பு நிற ஹெட்லைனர்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி உட்புறம் அதே டூயல் டோன் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ட்ரி லெவல் காரில் உட்புறம் எப்படி இருக்கிறதோ அதே போலவே இந்த காரின் உட்புறமும் இருக்கிறது.

முக்கியமாக இந்த காரின் உட்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 14.9 இன்ச் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கர்வ்டு டிஸ்ப்ளேயாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் மூன்று ஸோன் கொண்ட கிளைமேட் கண்ட்ரோல், பேனராமிக் சன் ரூஃப், 16 ஸ்பீக்கர் கொண்ட ஹார்மோன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வயர்லெஸ் போன் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள் டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் அடாஸ் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடார் தொழில்நுட்பத்தில் டிரைவர் அட்டெண்டிவினர் அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த காரின் விலையை நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி ரூபாய் 62.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் என்ட்ரி லெவல் கார் ரூ60.60 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும் பணக்காரர்கள் சொகுசான செடான் கார் ஒன்றை வாங்க விரும்பினால், அவர்களுக்கு இந்த கார் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்தியாவில் இந்த கார் ரூ60 லட்சம் தான் என்பதால் ஓரளவு இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சொகுசு அம்சங்கள் கொண்ட காராக இருப்பதால் சாலையில் பயணிக்கும் போது இது தனி அந்தஸ்தை கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2024, 7:00 [IST]
English summary
Bmw 3 series gran limousine m sport pro edition launched
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X