இந்த கார்ல போய் இறங்குனா ஊரே உங்கள மரியாதையா பாக்கும்! அப்படி இந்த கார்ல என்ன இருக்குது?

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாகனங்களின் அதிக நீள வீல் பேஸ் கொண்ட கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே அதன் 3 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்கள் இந்த அடிப்படையில் அறிமுகமாகியுள்ளன. இந்நிலையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது இந்தியாவிற்காக தனது 5 சீரியஸ் காரின் நீள வீல் பேஸ் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஜூலை மாதம் 24ம் தேதி இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாக உள்ளது. இந்த கார் குறித்த அனைத்து விரிவான விவரங்களையும் காணலாம் வாருங்கள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 5 சீரிஸ் காரின் நீள வீல் பேஸ் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காருக்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இருக்கும் 5 சீரிஸ் காருக்கு மாற்றாக அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆப்ஷனாக இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

BMW 5 Series LWB

இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை ஏற்கனவே விற்பனையாகி வரும் 5 சீரிஸ் காரின் அதே வடிவமைப்பில் சற்று பெரிய விஷயமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நீள வீல் பேஸ் கொண்ட கார் என்பதால் இதை லிமோஷைன் கார் என நினைத்து விட வேண்டாம். இந்த கார் 5.17 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது.

இதில் வீல் பேஸ் மற்றும் 3.1 மீட்டராக இருக்கிறது. இதன் போட்டி காரரான மெர்சிடிஸ் பென்ஸ் கார் 5.09 மீட்டர் நீளமும், 3.09 மீட்டர் வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. அதை ஒப்பிடும்போது இந்த கார் சற்று பெரிய காராக இதை கூறலாம்.

BMW 5 Series LWB

இந்த காரின் வெளிப்புற மாற்றத்தில் முக்கியமாக கிட்னி கிரில் வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோக ஷார்ப்பான பம்பர்கள், மல்டிஸ்போக் கொண்ட அலாய் வீல்கள் எல்லாம் இந்த காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 18 இன்ச் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 19 இன்ச் அலாய் வீலுக்கான ஆப்ஷனையும் வழங்குகிறது.

இந்த காரின் பின்பக்கம் முழுமையாக எல்இடி யூனிட் வழங்கப்படவில்லை ஆனால் இதன் வடிவமைப்பு சிம்பிளாகவும், கிளீனாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பல்வேறு விதமான டிசைன் அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இது இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களை பெரிதாக ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

BMW 5 Series LWB

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை மினிமாலாகவும் அதே நேரம் பெரிய ஸ்கிரீன் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீனில் டிரைவர் மற்றும் பயணிகளுக்காக இரண்டு தகவல்களும் இடம் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சென்டர் கன்சோல் பகுதியில் ஐடிரைவ் டயல், வால்யூம் கண்ட்ரோல், டிரைவ் மோடு, கியர் செலெக்டர் என பல்வேறு விதமான நாப்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காரின் பின்பக்க சீட்டில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. முக்கியமாக அதிக வீல் பேஸ் கொண்ட கார் என்பதால் கால் வைக்க போதுமான இட வசதி இருக்கிறது. 7 சீரியஸ் மாடல் போல இந்த காரில் ரூப் மவுண்ட் டிஸ்ப்ளே எதுவும் இல்லை. ஆனால் சீட்டுக்கு பின்பக்கம் உள்ள டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது இதுவே இந்த காருக்கு போதுமானதாக இருக்கிறது.

இந்த காரில் உள்ள அம்சங்கள் எல்லாம் சொகுசு காரில் உள்ள பெரும்பாலான அம்சங்களாக இருக்கின்றன. மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 அடாஸ், 18 ஸ்பீக்கர் கொண்ட பவ்வர்ஸ் வில்கின்சன் சவுண்ட் சிஸ்டம், டைப் சி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள், முன் பக்க சீட்டில் பவர் பங்க்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 520டி மற்றும் 520ஐ ஆகிய கார்களில் இந்த எல்டபிள்யூபி வெர்ஷன் அறிமுகப்படுத்தப்படலாம் பின்னர் இது 530டி மற்றும் 530 ஐ எம் ஸ்போர்ட்ஸ் ஆகிய கார்களுக்கும் நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இது வந்தாலும் வரவேற்ப்பு சிறப்பாக இருக்கும்.

இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 85 லட்சம் முதல் ரூபாய் ஒரு கோடி என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் மார்க்கெட்டில் உள்ள மெர்சிடிஸ் இ கிளாஸ் கார் மற்றும் ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஆடி க்யூ 5 ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட கார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கலாம். பெரும் பணக்காரர்கள் பலர் ரக காரை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் இந்த கார் விற்பனைக்கு வரும்போது அதன் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அதிகமாக இருப்பதால் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 15:29 [IST]
English summary
Bmw 5 series lwb india launch july 24 unveiled
மேலும்... #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X