இந்தியாவின் அடுத்த பிரதமரின் கார் இதுவாக கூட இருக்கலாம்! பிஎம்டபிள்யூவின் இந்த கார் பற்றி தெரியுமா?
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 7 சீரிஸ் காரின் பாதுகாப்பான அம்சங்கள் நிறைந்த வெர்ஷனை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் புரோடெக்ஷன் என்ற பெயரில் தற்போது பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் வழக்கமான பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் உள்ளது போல இல்லாமல் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 சீரியஸ் கார் பெரும் பணக்காரர்கள் விரும்பும் காராக இருக்கிறது. இந்த காரின் லுக் மற்றும் ஸ்டைல் ஆகியவை பலரை விரும்பும் விதமாக இருக்கும் நிலையில் இதை வாங்கும் மனிதர்கள் பலர் உலகின் மிகப்பெரிய மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உயிர்க்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவர்கள் பாதுகாப்பான கார்களில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள்.

இதை கருத்தில் கொண்ட பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த 7 சீரிஸ் காரில் பாதுகாப்பு வெர்ஷன் ஒன்றை தற்போது பொதுவெளியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சிறப்பான ரைடு கம்போர்ட் மற்றும் அதிக பாதுகாப்பு கருவிகள் கொண்ட பவர்ஃபுல் காராக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எம் ஸ்போர்ட் வெர்ஷன் காரில் புரொடெக்ஷன் கோர் என்ற பிஎம்டபிள்யூவின் முக்கியமான பாதுகாப்பு அம்சம் என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்த காரின் பாடி முழுவதும் தாக்குதல்களை தாங்கும் ஸ்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த காரின் கீழ் புறமும் மேல்புறமும் சரி தாக்குதல்களை தாங்கும் வகையில் ஸ்ட்ராங்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கண்ணாடிகளும் குண்டு துளைக்காத வகையில் சிறந்த கண்ணாடிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் பாதுகாப்பு அம்சங்களை பற்றி நாம் விரிவாக காண வேண்டுமென்றால் இந்த காருக்கு வெளியே இருந்து யாராவது காருக்குள் இருக்கும் நபரை துப்பாக்கி மூலமும் அல்லது வெடிகுண்டு மூலமோ தாக்க வேண்டும் என முற்பட்டால் அந்த தாக்குதல் நிகழ்ந்தாலும் அதனால் கார்க்குள் இருப்பவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக விஆர் 9 என்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ப்ரோடுக்ஷன் காரில் பயணிக்கும் போது காருக்கு கீழே குண்டுவெடித்தாலும் மேலே இருந்து யாராவது குண்டை தூக்கி கார் மீது போட்டாலும் பக்கவாட்டில் இருந்து துப்பாக்கி மூலம் சுட்டாலும் அல்லது குண்டுகளை எரிந்தாலும் காருக்குள்ளே இருக்கும் நபர்களுக்கு சிறு கீறல் கூட ஏற்படாமல் பாதுகாக்கும். இது மட்டும் இல்லாமல் காருக்குள்ளே இருக்கும் பயணிகளுக்கு சொகுசு வசியம் இந்த காரில் உள்ளது.

இந்த காரின் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷனைப் பொறுத்தவரை வி8 டிவின் பவர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4.4 லிட்டர் கொண்ட 8 சிலிண்டர் இன்ஜினாக இருக்கிறது இது 48 ஓல்டு மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 530 எச்பி பவரையும் 750 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த கார் எக்ஸ் டிரைவ் ஆல் வீல் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட கார் ஆகியிருக்கிறது. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.6 நொடியிலும் அதிகபட்சமாக 210 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ முதல் முறையாக இந்த காரில் இன்டகிரல் ஆக்டிவ் ஸ்டியரிங் என்ற தொழில்நுட்பத்தை உற்பத்தி உள்ளது.

அதாவது பின்பக்க வீலையும் கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது. இதனால் மிகக் குறுகலான இடங்களில் கூட இந்த காரால் பயணிக்க முடியும். திடீரென ஒரு திருப்பத்தில் திரும்ப வேண்டும் என்றால் சுலபமாக இந்த காரால் வேகமாக திருப்ப முடியும் என்பதற்காக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் 20 இன்ச் லைட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் தரையில் படும் பகுதி பெரும் பகுதியாக இருக்கும் வகையில் இதன் டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பஞ்சர் ஆனாலும் தொடர்ந்து 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இந்த டயர் இருக்கிறது. காரின் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த காரின் உட்புறம் சிறிய கூல்பாக்ஸ் இருக்கிறது இதனால் காருக்குள் இருக்கும் பயணிகள் தங்கள் ட்ரிங்க்ஸ் களைண்டாக வைத்திருக்க முடியும் இரண்டு வாட்டர் பாட்டில்களை இரண்டு கிளாஸ்களையும் வைக்கும் அளவிற்கு இதழ் இடம் இருக்கிறது இது நான்கு முதல் பத்து டிகிரி வரை மட்டுமே வெப்பத்தை வைத்திருக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.
மேலும் இந்த காரின் உள்ளே ஆடியோ சிஸ்டமாக 1265 வார்ட் டிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் இருக்காங்க 28 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. காருக்குள் இருக்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவு சத்தம் கேட்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
உன்பக்கம் கண்ணாடியில் திரை மறைப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது b பலரிலிருந்து சீப்புல்லர் வரை எலக்ட்ரானிக் முறையில் இயங்கும் இந்த திரை மறைப்பு உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே நடப்பது என்பதை பார்க்க முடியும். ஆனால் வெளியே உள்ளவர்களுக்கு உள்ளே இருக்கும் எந்த விஷயத்தையும் காண முடியாது வாகனங்களில் பயணிப்பவர்கள் மிக முக்கியமான ஆவணங்களை எடுத்துச் செல்லும் போது கண்ணாடி வழியாக அந்த தகவல்களை பார்க்க கூடாது என்பதற்காக இந்த ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் சுமார் 45 ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு நிறைந்த காரங்களை தயாரிக்கும் அனுபவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் கார்களை உலக தலைவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த காரையும் அப்படியான நபர்தான் வாங்குவார்கள் பெரும்பாலும் இந்தியாவின் அடுத்த பிரதமர் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









