இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
பிஎம்டபிள்யூ நிறுவனம் முதல் முறையாக தனது ஐ5 எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல மேம்படுத்தப்பட்ட டிசைன் அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல்லான பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தும் காராக இது இருக்கிறது. இந்த கார் ரூ1.19 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஐ5 என்ற எலெக்ட்ரிக் தான் கார் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகமாகியுள்ளது. இது 5 சீரியஸ் காரின் எட்டாம் தலைமுறை காரை அடிப்படையாகக் கொண்ட எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன் பக்கம் வழக்கமான பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் வடிவமைப்பில் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ள கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சுற்றி இலுமினேட் செய்யக்கூடிய ரிங் போன்ற அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் அடாப்டிவ் ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இரண்டு பூமராங் வடிவிலான எல்இடி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 20 இன்ச் கொண்ட எம் லைட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோக சிவப்பு நிற பிரேக் கேலிபர்களும், எம் ஸ்போர்ட் கார்களுக்கு உண்டான பின்பக்க ஸ்பாய்லர்களும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை ஃப்ரீ ஸ்டாண்டிங் டூயல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக பேனரோமிக் சன்ஃரூப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் உள்ள ஆடியோ சிஸ்டத்தை பொருத்தவரை பௌவார்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் சவுண்ட் சிஸ்டம் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த காரின் உட்புறத்தில் வேகன்சா மற்றும் அல்கண்ட்ரா ஆகிய மெட்டீரியலை கொண்டு அப்ஹோல்சரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் உட்புறம் முழுவதும் கார்பன் பைபர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ5 எம்6 எக்ஸ் டிரைவ் காரை பொருத்தவரை இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இந்த இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து மொத்தமாக 593 பிஎச்பி பவரையும், 795 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 83.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி பேக் மூலம் இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 516 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சத்திற்காக அடாஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடாஸ் சிஸ்டத்தில் க்ரூஸ் கண்ட்ரோல், அட்டென்டிவ்னஸ் அசிஸ்டென்ட் , பார்க்கிங் அசிஸ்டென்ட், செல்போன் மூலமாக ரிமோட் பார்க்கிங் செய்யும் வசதி மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோக கூட்ட நெரிசலில் செல்லும்போது முன்பக்கம் உள்ள காரில் இருந்து எவ்வளவு தூரத்தில் இந்த கார் பயணிக்க வேண்டும் என்ற டிஸ்டன்ஸ் ஸ்டாப் அண்ட் கோ ஃபங்ஷன் உடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக ஸ்டேரிங் மற்றும் லேன் கண்ட்ரோல் அசிஸ்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் ஸ்டாண்டர்டாக அடாப்டிவ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது..
இதுபோக இந்த காரில் நான்கு சவுண்ட் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா வென்டிலேட்டட் சீட்டுகள் எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டெபிள் செய்யக்கூடிய சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 1.20 கோடி என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்கள் மீது மக்களுக்கு மிகப்பெரிய மவுசு இருக்கும் நிலையில், இந்த எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் பணக்காரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரின் விலை அதிகமாக இருப்பதால் விற்பனை குறைவாக தான் இருக்கும். பெரும் பணக்காரர்கள் இந்த காரை வாங்க வாய்ப்புள்ளது. இந்த காரை இந்தியாவில் யார் வாங்குகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









