ரூ1.4 கோடி விலையில் வெளியாகியுள்ள பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார்! இதுல அப்படி என்ன இருக்குது தெரியுமா?
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ் எக்ஸ்டிரைவ் 50 என்ற காரை ரூபாய் 1.4 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 635 கிலோமீட்டர் வரை பயணிக்கும் எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் குறித்த விரிவான அனைத்து தகவல்களையும் காணலாம் வாருங்கள்.
பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 என்ற எக்ஸ்1 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஐஎக்ஸ் எக்ஸ்டிரைவ் 50 என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய உள்ளது. இந்த கார் அதிக பெர்ஃபார்மென்ஸ் வெளிப்படுத்தும் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் எக்ஸ்டிரைவ் 40 காரை விட சற்று அதிக ரேஞ்சில் இருக்கும் காராக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த காரின் விலையை பொருத்தவரை பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ1.4 கோடி என்ற விலையில் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை மினரல் ஒயிட், பைட்டானிக் ப்ளூ, பிளாக் ஸப்பையர்,அவெஞ்சுரைன் ரெட் மற்றும் ஆக்ஸைடு க்ரே ஆகிய நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரின் உட்புறத்தில் உள்ள லெதர் எல்லாம் வீகன் லெதர்களாக வழங்கப்பட்டுள்ளன. இது ஆயிஸ்டர் அல்லது மோச்சா ஆகிய கலர் ஸ்கிம்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் முன் பக்கத்தில் வழக்கமான கிட்னி கிரில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழுவதுமே ஒரு பவர் ஃபுல்லான டிசைன் மொழி பின்பற்றப்பட்டுள்ளது. காரில் உள்ள பெரும்பாலான டிசைன் மொழிகள் எக்ஸ்டிரைவ் 40 என்ற காரிலும் இருக்கிறது.

இந்த காரில் 22 இன்ச் அலாய்வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக 3டிபானட்டுகள், செவ்வக வடிவ வீல் ஆர்ச்சுகள், ஒரே பீஸ் கொண்ட எல்இடி டெய்லி லைட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் உள்ளது. இதன் ஹெட் லைட்டை பொருத்தவரை மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லேசர் லைட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்த காரின் அளவு பெரிதாக இருப்பதால் இந்த காருக்கு உட்புறம் ஏகப்பட்ட இடவசதி இருக்கிறது.
இந்த காரின் உட்புறம் உள்ள மிகப்பெரிய டேஷ்போர்டு சிங்கிள் பீஸ் டேஷ் போர்டுடாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஸ்கிரீனில் இன்போடைமென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய இரண்டையும் கொண்ட மிகப் பெரிய கர்வ்டு ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டியரிங் வீல் ஹெக்ஸகோனல் வடிவமைப்பில் இருக்கிறது. இந்தக் காரில் எலெக்ட்ரோ குரோமிக் ஃபங்ஷன் உடன் கூடிய பிஎம்டபிள்யூ ஸ்கை லாஞ்ச் பானரோமா கிளாஸ் ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது.

லெதர் கவர் செய்யப்பட்ட மசாஜ் சீட்டுகள், ஆம்பியன்ஸ் லைட், ஆக்டிவ் சீட் வெண்டிலேஷன், 1750 லிட்டர் இட வசதி கொண்ட பூட் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் இந்த காரில் உள்ளன. இந்த காரின் முன்பக்கம் உள்ள பெரிய கர்வ்டு ஸ்கிரீனில் 14.9 இன்ச் அளவிற்கு இன்போடெயின்மென்ட் சிஸ்டமும், 12.3 இன்ச் அளவிற்கு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்கிரீனும் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ ஐடிரைவ் ஓஎஸ் 8.5-ல் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே இருக்கிறது. பிஎம்டபிள்யூ ஆர்கியூமென்டெட் ரியாலிட்டி மேப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக விர்ச்சுவல் அசிஸ்டென்ட், வயர்லெஸ் சார்ஜிங், 18 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், அடாஸ்தொழில்நுட்பம், பிஎம்டபிள்யூ டிரைவிங் அக்செஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த காரின் பவர் டெரைனை பொருத்தவரை ஐந்தாம் தலைமுறை பிஎம்டபிள்யூ இ டிரைவ் டெக்னாலஜியில் இயங்குகிறது. இதில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பாக பெர்ஃபார்ம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 523 பிஎச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடியில் பிக்கப் செய்து விடும்.
இந்த காரின் பேட்டரி அம்சத்தை பொருத்தவரை 111.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 635 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 22 கிலோ வாட் ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 195 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கோடி கணக்கில் விலை மதிப்பு கொண்ட கார்கள் வெகு சில தான் விற்பனையாகி வருகின்றன. பெரும் பணக்காரர்கள் மட்டுமே இந்த கார்களை வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அப்படியான ஒரு காராக தான் இந்த பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எக்ஸ்டிரைவ்50 என்ற கார் விற்பனைக்கு வந்துள்ளது. மார்க்கெட்டில் உள்ள பென்ஸ் இக்யூஇ, ஆடி க்யூ8 இடிரான், ஜாக்குவார் ஐபேஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications









