அழகானவர்களை இன்னும் பேரழகாக காண்பிக்க போகும் கார் அறிமுகம்.. பெட்ரோல் இல்லாமல் இந்த காரு 69 கிமீ தூரம் போகும்!

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) அதன் அழகிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எம்5 (M5) எனும் சொகுசு செடான் ரக கார் மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தன்னுடன் சேர்த்து தன்னைப் பயன்படுத்துவோரையும் அழகாகக் காண்பிக்கும் அளவிற்கு மிகுந்த அழகான ஓர் செடான் ரக சொகுசு கார் மாடல் இந்த எம்5 ஆகும். சிபியூ (Completely Built-Up) வாயிலாகவே இந்த காரை பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், இது ஏழாம் தலைமுறை எம்5 என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இந்த காரை அதிக அழகான காராக மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கும் கொண்ட காராகாவும் தயார் செய்திருக்கின்றது. ஏற்கனவே இந்த இரண்டிற்கும் பெயர்போன காராகவே எம்5 இருந்து வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இதையே தற்போது புதிய தலைமுறையின்கீழ் பிஎம்டபிள்யூ இரட்டிப்பாக்கி இருக்கின்றது.

Bmw m5 launched

இதில் மட்டுமல்ல அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் தன்னுள் மிக அதிக அளவில் தாங்கி இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் அழகிய தோற்றத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக ட்வின் ஹெட்லைட், கிட்னி கிரில், அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் ட்வின் வகை ஹெட்லைட், அந்த காருக்கு நான்கு கண்களைக் கொண்டிருக்கும் மிருகம் போன்ற தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது. சொல்லப்போனால் வேற லுக்கை இந்த லைட் அமைப்பு எம்5 காருக்கு வழங்குகின்றது. அதேவேளையில், இந்த காரின் முன் பக்கம் மட்டுமல்ல அதன் பின் பக்கமும் மிகுந்த அழகானதாகக் காட்சியளிக்கின்றது.

இதற்காக பின் பக்கத்தில் எம் வகை ஸ்பாய்ளர், ட்வின் எக்சாஸ்ட் டெயில் பைப்புகள், இலகு ரக எடைக் கொண்ட அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த எம்5 காரில் வழங்கி இருக்கின்றனர். இந்த அலாய் வீலானது முன் பக்கத்தில் 20 அங்குலத்திலும், பின் பக்கத்தில் 21 அங்குலத்திலும் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமாதிரியான வேலைகளாலேயே எம்5 மிக அதிக அழகான காராகக் காட்சியளிக்கின்றது. எம்5 காரின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல உட்பக்கத்திற்கும் அதிகம் முக்கியத்தும் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், இந்த காரின் உட்பக்கத்தில் உள்ள ஸ்டியரிங் வீலிற்கு லெதர் போர்த்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் தட்டையான அடிப்பக்கத்தைக் கொண்ட ஸ்டியரிங் வீல் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதில் கூடுதல் சிறப்பாக பன்முக கன்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், மிக அதிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் திறன் கொண்ட இருக்கைகள், வளைவான திரை, ஆம்பியன்ட் லைட், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், புதிய டிசைன் கொண்ட கியர் செலக்டர் லிவர் மற்றும் 18 ஸ்பீக்கர்கள் கொண்ட போவர்கள் மற்றும் வில்கின்ஸ் டைமண்ட் சரவுண்ட் சவுண்டு சிஸ்டம் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் வி8, எம் ட்வின் பவர் டர்போ டெக்னாலஜிக் கொண்ட மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 8 ஸ்பீடு எம் ஸ்டெப்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன், டிரைவ்லாஜிக் மற்றும் எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 727 பிஎச்பி மற்றும் 1,000 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேர்ந்து எம் ஹைபிரிட் வெளியேற்றும் ஆற்றல் ஆகும். இந்த காரை ப்யூர் மின்சார மோடிலும் இயக்கிக் கொள்ள முடியும். இந்த மோடில் பெட்ரோல் பயன்பாடு இல்லாமலேயே சுமார் 69 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதற்காகவே இந்த காரில் 18.6 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் எம்5 காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 305 கிமீ ஆகும். ஆனால், மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையிலேயே இந்த காரை சந்தையில் வழங்க இருக்கின்றது. இதனால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த காருக்கு அறிமுக விலையாக ரூ. 1,99,00,000 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அழகான கார் மாடல்களின் எண்ணிக்கை இந்த காரின் வருகையால் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். மேலும், இந்த வருகை அதிக ஆற்றலை விரும்பும் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 21, 2024, 18:24 [IST]
English summary
Bmw m5 launched in india a high performance sedan with cutting edge technology
மேலும்... #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+