அம்பானி போன்ற பெரும் பணக்காரர்கள் விரும்ப கூடிய காருக்கு புக்கிங் பணிகளை தொடங்கிய பிஎம்டபிள்யூ..

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் அதன் புதுமுக கார் மாடல் ஒன்றிற்கு புக்கிங் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றநிலையிலேயே இந்த பணிகளை பிஎம்டபிள்யூ தொடங்கி இருக்கின்றது.

இந்த புக்கிங் பணிகள் யாரும் எதிர்பார்த்திராத நிலையிலேயே தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக ஐ5 எம்60 எக்ஸ்-டிரைவ் இருக்கின்றது. இதற்கே தற்போது புக்கிங் பணிகள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.

Bmw i5 m60 xdrive bookings open

பிஎம்டபிள்யூ ஐ5 எம் எக்ஸ்-டிரைவ் ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த செடான் ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்திய வாகன காதலர்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வந்த கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த சொகுசு கார் மாடலுக்கு ப்ரீ-புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 516 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது. மேலும், வெறும் 3.8 செகண்டுகளிலேயே இந்த எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கின்றது.

BMW i5 m60

முழுமையாக கட்டியமைக்கப்பட்ட யூனிட்டாகவே (Completely Built-Up Unit) பிஎம்டபிள்யூ ஐ5 எம்60 எக்ஸ் டிரைவ் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இந்த காருக்கு இப்போது புக்கிங் பணிகள் மட்டுமே தொடங்கப்பட்டு இருக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வமாக இதன் அறிமுகத்தை பிஎம்டபிள்யூ செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னரே டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. வருகின்ற மே மாதத்திலேயே அந்த பணிகள் தொடங்கப்படும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மே மாதத்திலேயோ அல்லது அதற்கு முன்னரோ பிஎம்டபிள்யூ ஐ5 எம்6 எக்ஸ்-டிரைவ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் சிலவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7), பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX), பிஎம்டபிள்யூ ஐ4 (BMW i4), பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 (BMW iX1) மற்றும் மினி எஸ்இ (MINI SE) ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களையே அந்நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அடுத்த தயாரிப்பாக ஐ5 எம்6 எக்ஸ்-டிரைவ்வை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் பிஎம்டபிள்யூ களமிறங்கி இருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. அறிமுக நாளின்போது அதுபற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே ஐ5 எம்6 எக்ஸ்-டிரைவ் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்-ஷோரூமிலேயே இந்த உயரிய விலையில் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சொகுசு வசதிகள் நிறைந்த ஆடம்ப கார்களுக்கு இந்திய பணக்காரர்கள் டிமாண்ட் மிக அமோகமாக உள்ளது. இந்த நிலையிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் பணக்காரர்கள் பெரிதும் விரும்பக் கூடிய கார் மாடலான ஐ5 எம்6 எக்ஸ்-டிரைவ் எலெக்ட்ரிக் செடான் ரக காரை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 4, 2024, 21:56 [IST]
English summary
Bmw opens pre launch bookings for i5 m60 xdrive here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+