அனிமேஷனாகும் பாடி பேனல் கொண்ட கார்.. செல்போன் திரையை போல கண்கவர் வண்ணங்களில் அனிமேஷனை பிரதிபலிக்கும்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா (BMW i5 Flow NOSTOKANA) கார் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. வழக்கமான கார்களைக் காட்டிலும் மிக அதிக தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக காரின் பாடி பேனல்கள் உள்ளன.
இந்த பேனல்கள் ஓர் மின்சார அனிமேஷன் வசதிக் கொண்ட பேனல்கள் ஆகும். தெற்கு ஆப்பிரிக்கா பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் டிசைனே இந்த பேனல்கள் பிரதிபலிக்கும். தென்னாப்பிரிக்க பழங்குடியின மக்கள்கள் தங்களின் உடல் மற்றும் முகத்தில் விநோதமான சின்னங்களை வரைந்துக் கொள்வர்.

அதுமாதிரியான வடிவங்களையே கலர்ஃபுல்லாக தன்னுடைய உடல் முழுவதும் தாங்கி இருக்கின்றது பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா. தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற கலைஞரான எஸ்தர் மஹ்லாங்குவின் கை வண்ணத்தினாலேயே இந்த கலை ஓவியம் பிஎம்டபிள்யூ காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. 1991 ஆம் ஆண்டில் இருந்து இந்த பணிகளை பிஎம்டபிள்யூ உடன் இணைந்து அவர் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவரே, இந்த பணியில் ஈடுபடும் முதல் ஆப்பிரிக்க பெண் கலைஞர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு முன்னதாக இவருடைய கை வண்ணத்தில் 525ஐ கார் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே கலரை மாற்றிக் கொள்ளும் காரிலும் தன்னுடைய தனித்துவத்தை எஸ்தர் காண்பித்து இருக்கின்றார்.

பிஎம்டபிள்யூ ஐ5, ஓர் எலெக்ட்ரிக் செடான் கார் மாடல் ஆகும். இதன் பேனலில் அனிமேட் ஆகுவதற்காக 1,349 ஃபில்ம்கள் ஃபிட் செய்யப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமாக செயல்படும் திறன் கொண்டவை. இ-இங்கு மற்றும் எலெக்ட்ரிக் வோல்டேஜ் வாயிலாகவே இந்த பேனல் ஃபிலிம்கள் வேலை செய்கின்றன.
இதன் வாயிலாக வண்ணங்களையும் மாற்றிக் கொள்ள முடியும். இதுதவிர, எஸ்தர் மஹ்லாங்குவின் குரல்கள் காரில் ஒலிக்கும் வகையிலும் வசதியை வழங்கி இருக்கின்றது பிஎம்டபிள்யூ. இவையே பிஎம்டபிள்யூ ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனாவின் தனித்துவமான வசதிகள் ஆகும். பிஎம்டபிள்யூ நிறுவனம் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் வசதியை கார்களுக்கு வழங்கும் பணியில் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வருகின்றது.
இந்த சமீபத்திய வெளியீட்டின் வாயிலாக பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த பணியில் மிகப் பெரிய உச்சத்தை எட்டியிருப்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இதேபோல், இன்னும் சில உச்சங்களையும் இந்த நிறுவனம் அடுத்தடுத்து அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரை சமீபத்திலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியீடு செய்தது.
ஃப்ரீஸ் லாஸ் ஏஞ்ஜல்ஸ் (Frieze Los Angeles)-லேயே இந்த கார் வெளியீடு செய்யப்பட்டது. இது ஓர் புகழ்பெற்ற கலை கண்காட்சி ஆகும். இந்த நிகழ்ச்சி நீண்ட காலமாக பிஎம்டபிள்யூ ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தென்னாப்பிரிக்காவிலும் இம்முறை கலை கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கின்றது. கலை நிகழ்ச்சியின் 30 ஆண்டு கால வரலாற்றில் தென்னாப்பிரிக்காவில் கலை கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பிஎம்டபிள்யூ ஐ5 எலெக்ட்ரிக் கார் உலக சந்தையில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஐ5 இ-டிரைவ்-40 மற்றும் ஐ5 எம்60 ஆகியவையே அவை ஆகும். இதில் ஐ5 எம்60 சற்று ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட தேர்வாகக் காட்சியளிக்கின்றது. சென்ற ஆண்டின் மத்திய பகுதியிலேயே ஐ5 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தியை பிஎம்டபிள்யூ தொடங்கியது. ஜெர்மன் நாட்டிலேயே இந்த காரின் உற்பத்தி பணிகள் தொடங்கி இருக்கின்றன.
இதன் இந்திய வருகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில், இக்காரை இந்தியாவில் பிஎம்டபிள்யூ களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிஎம்டபிள்யூ ஐ5 ஓர் ஃபுல் சார்ஜில் 475 கிமீட்டர் ரேஞ்ஜை தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ஜை போலவே சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலும் இந்த கார் மிக சிறந்த பிஎம்டபிள்யூ தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் உலக செல்வந்தர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூவின் இந்த அனிமேட் ஆகும் பாடி பேனல்களைக் கொண்ட ஐ5 ஃப்ளோ நோஸ்டோகனா எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்பங்களை விரும்பும் கார் ஆர்வலர்கள் மத்தியில் இப்போதே இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே வெகுவிரைவில் இவர்களின் காத்திருப்பிற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









