ஹோட்டல் வாசல்ல ஷோவுக்காக நிறுத்தப்பட்ட BMW காரோட மதிப்பு இவ்ளோ அதிகமா! பாக்காதத பாத்த மாதிரி மெர்சலாயிட்டாங்க!
பிஎம்டபிள்யூ (BMW) காரை வாங்க வேண்டும் என்பது இப்போதும் நம்மில் பலருக்கு நிறைவேறா கனவாக உள்ளது. இந்த மாதிரியான சூழலில் இருப்பதிலேயே மிகவும் காஸ்ட்லியான பிஎம்டபிள்யூ கார் ஒன்று பிரபல ஹோட்டல் ஒன்றின் முன் ஷோ-கேஷுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. போலந்து நாட்டில் உள்ள ஹோட்டல் வெர்டே(Verte Hotel)-வின் வாசலிலேயே அந்த விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது. நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் அந்த பிஎம்டபிள்யூ கார் மாடல் இன்னும் விற்பனைக்கே வராத கான்செப்ட் கார் மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் ஸ்கைடாப் (BMW Skytop) எனும் கான்செப்ட் (Concept) கார் மாடலை உருவாக்கியது. இதனையே ஹோட்டல் வெர்டே-வின் வாசலுக்கு முன்னே நிறுத்தி வைத்திருக்கின்றனர். கார் காதலர்களின் கவனத்தை இதன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வேலையை பிஎம்டபிள்யூ நிறுவனம் பார்த்திருக்கின்றது.

Source: BMW Blog இது ஓர் பிரத்யேக ஷோ-கேஸ் ஆகும். இன்னும் சில தினங்கள் வரை மட்டுமே அந்த கார் அங்கு தரிசனதம் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. நாளை (டிசம்பர் 15) வரை மட்டுமே அது அங்கு நிற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் வெளியுலகில் காட்சிப்படுத்துவது இது முதல் முறையல்ல.
முன்னதாக கான்கோர்ஸோ டி'எலிகன்சா வில்லா டி'எஸ்டே (Concorso d'Eleganza Villa d'Este)-வில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை சீக்கிரமே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே பெரும் பணக்காரர்களைக் கவரும் பொருட்டு அதை பொதுவெளியில் காட்சிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த காரை மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தயார் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. 50 யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இந்த அனைத்து யூனிட்டுகளும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, இந்த காருக்கான ரிசர்வேஷன் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாம்.
மேலும், ஒவ்வொரு யூனிட்டும் 5 லட்சம் யூரோக்களுக்கு விற்கப்பட்டு இருக்கின்றன. இது ஓர் தனித்துவமான வாகனம் என்பதால் ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி பணக்காரர்கள் பலர் போட்டி போட்டு பிஎம்டபிள்யூ ஸ்கைடாப் கன்வெர்டபிள் காரை வாங்கி இருக்கின்றனர். மேற்கூரை இல்லாத, அதேவேளையில், அதீத ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட கார் மாடலே இந்த ஸ்கைடாப் ஆகும்.
இந்த காரில் 4.4 லிட்டர், ட்வின் டர்போ, வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 617 எச்பி வரை வெளியேற்றும். இந்த மோட்டார் வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஏற்கனவே விற்பனையாகிவிட்டதால் இந்த காரை புதிதாக எந்தவொரு வாடிக்கையாளராலும் வாங்க முடியாத சூழல் உருவாகி இருக்கின்றது. இருப்பினும் அக்காரை தொடர்ச்சியாக பிரபலப்படுத்தும் பணியில் பிஎம்டபிள்யூ ஈடுபட்டு வருகின்றது. ஆகையால், இன்னும் சில யூனிட்டுகளை அது விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ வார்த்தைகள் எதுவும் வெளியாகவில்லை.
டிரைஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ ஸ்கைடாப் கார் மாடலின் அனைத்து யூனிட்டுகளும் ஐரோப்பிய சந்தையிலேயே விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. ஆகையால், இதன் ஒரு யூனிட்கூட இந்தியா போன்ற பிற நாடுகளுக்கு வராது என தெரிகின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கும்? டெலிவரி எப்போது தொடங்கும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் அதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








