உல்லாச கப்பலை வாங்க போறீங்களா?.. அதுக்கு பதிலா இந்த காரை வாங்கிடலாம்.. சாலையிலேயே மிதக்குற ஃபீல் கிடைக்கும்!

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), இந்தியாவில் எக்ஸ்7 சிக்னேச்சர் எடிசன் (BMW X7 Signature Edition)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எக்ஸ்7 கார் மாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாகவே இந்த சிறப்பு பதிப்பை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், பார்க்க உல்லாச கப்பலைப் போன்றிருக்கும் இந்த கார், பயன்பாட்டிலும் உல்லாச கப்பல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே இருக்கும் என கூறப்படுகின்றது. இதற்கேற்பவே அந்த காரில் ஆடம்பர அம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது, பிஎம்டபிள்யூ.

ஆகையால், சாலையில் பயணிக்கும்போது தண்ணீரில் மிதக்கின்ற அனுபவம் இந்த காரில் கிடைக்கும் என நம்பலாம். அறிமுகமாக பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பிற்கு ரூ. 1.33 கோடி விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ஒன்றரை கோடி ரூபாக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

Bmw x7 signature edition launched

மேலும், வழக்கமான பதிப்பு எக்ஸ்7-ஐக் காட்டிலும் இது ரூ. 3 லட்சம் மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அதிக தொகைக்கு கூடுதல் சிறப்பு அலங்காரமே காரணம் ஆகும். வருகின்ற விழாக்காலத்தைக் கருத்தில் வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக கார்களையும், சிறப்பு பதிப்பு கார்களையும் தொடர்ச்சியாக விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதன் அடிப்படையிலேயே சொகுசு உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூவும் இந்த சிறப்பு பதிப்பை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. முன்னதாக கூறியதைப் போலவே வழக்கமான எக்ஸ்7-ஐக் காட்டிலும் கூடுதல் அலங்காரமாக இந்த காரில் அப்டேட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட், ஸ்வரோவ்ஸ்கி கிளாஸ் கட் கிரிஸ்டல்கள் உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Bmw x7 signature edition seat

தொடர்ந்து, புதிதாக குரோம் பார், அலுமினியம் ரூஃப் ரெயில், ஜன்னல்களில் அலுமினியம் பெல்ட்லைன் என ஏகப்பட்ட அழகு கூறுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரின் பின் பக்கத்திற்கும் அழகு சேர்க்கின்ற வகையிலான வேலைகள் பல மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பின் பக்கத்திலும் எல்இடி லைட்டே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, இந்த காரின் உட்பக்கத்தையும் பலமடங்கு மேம்படுத்தி இருக்கின்றது. எனவே பலமடங்கு பிரீமியமான லுக்கிற்கு அது அப்கிரேட் ஆகியிருக்கின்றது. குறிப்பாக, இந்த காரின் இருக்கை மற்றும் டோர் சைடு பேனல்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் லெதர் அக்காருக்கு வேற லெவல் லுக்கை வழங்கி இருக்கின்றது என்றே கூறலாம்.

தொடர்ந்து, இதற்கு வலுசேர்க்கும் விதமாக வெள்ளை மற்றும் கிரே நிறத்தாலும் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பனோரமிக் சன்ரூஃப், கார் இணைப்பு வசதி,12.3 அங்குலத்தில் டிரைவருக்கான திரையும், 14.9 அங்குலத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் மியூசிக் சிஸ்டம், ஹெட்ஸ் அப் திரை போன்ற அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் சற்றும் குறைச்சலின்றியே காணப்படுகின்றது. அந்தவகையில், பலதரப்பட்ட ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அடாஸ் அம்சம், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிரைவர் தூங்குவதைக் கண்டறியும் வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்7 சிக்னேச்சர் எடிசனில் வழக்கமான பதிப்பில் பயன்படுத்தப்படும் அதே 3.0 லிட்டர் ட்வின் டர்போ, இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 386 பிஎஸ் மற்றும் 520 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே அனைத்து வீல்களுக்கும் இயக்க ஆற்றல் கடத்தப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்களுக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது அதன் புகழ்பெற்ற எக்ஸ்7 கார் மாடலில் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2024, 20:27 [IST]
English summary
Bmw x7 signature edition released in india with exclusive features at rs 1 33 crore
மேலும்... #bmw #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+