இது காரே இல்ல கப்பல்! என்னது கர்வ் இவி-க்கு புக்கிங்கை தொடங்கிட்டாங்களா! எல்லாரும் ஷோரூமை தேடி அலைய போறாங்க!

மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் எஸ்யூவி கூபே வகை கார் மாடல் ஆகும். இதன் தோற்றம் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு இணையானதாக இருப்பதாக கருத்துகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. தோற்றத்தில் மட்டுமில்லைங்க, சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் விலை உயர்ந்த கார்களுக்கே சவால் விடக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய காருக்கான புக்கிங் பணிகளையே டாடா மோட்டார்ஸ் தற்போது தொடங்கி இருக்கின்றது.

இப்போது தொடங்கி இருப்பது அதிகாரப்பூர்வ புக்கிங் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோல், இந்த காரின் டெலிவரி பணிகளும் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கின்றன. வரும் 23 ஆம் தேதி முதலே இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக டாடா கர்வ் இவி ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Book tata curvv ev

கிரியேட்டீவ் (Creative), அக்காம்ப்ளிஷ்டு (Accomplished), அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் எஸ் (Accomplished+ S), எம்பவர்டு பிளஸ் (Empowered+) மற்றும் எம்பவர்டு பிளஸ் ஏ (Empowered+ A) ஆகியவையே அந்த ஐந்து விதமான வேரியண்டுகள் ஆகும். வேரியண்டைப் பொருத்து பேட்டரி பேக்கின் திறன் மாறுபடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே கர்வ் இவி-யில் வழங்கப்படுகின்றன. 45 kWh பேட்டரி பேக் மற்றும் 55 kWh பேட்டரி பேக் ஆகியவையே அவை ஆகும். இதில் 45 kWh பேட்டரி ஆரம்ப நிலை மற்றும் நடு நிலை வேரியண்டுகளிலும், 55 kWh பேட்டரி பேக் தேர்வு உயர்நிலை தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

மேலும், இதில் முதல் பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 502 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 585 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலம், டாடா மோட்டார்ஸ் இந்த காரை எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமல்ல ஐசிஇ (ICE) அவதாரத்திலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது.

இந்த வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே நாட்டில் அறிமுகம் செய்துவிட்டது, ஆனால், இன்னும் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. இதன் அதிகாரப்பூர்வ வருகை வருகின்ற செப்டம்பர் 2 ஆம் தேதி அரங்கேற உள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஆகும். டாடா கர்வ் இவி ஏற்கனவே கூறியதைப் போலவே மிக அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களாக இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிரைவர்களுக்கான டிஜிட்டல் திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 9 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம் ஆகிய அம்சங்களையே இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது.

இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டரிங் வசதிக் கொண்ட 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன் சிஸ்டம் (ADAS) ஆகிய அம்சங்களையே கர்வ் இவி காரில் இடம் பெற்றிருக்கின்றன.

டாடா மோட்டார்ஸ் இந்த அசத்தலான எலெக்ட்ரிக் காருக்கு ரூ. 17.49 லட்சம் தொடங்கி ரூ. 21.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், அறிமுகத்தை முன்னிட்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் விலையே இவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காருக்கு இப்போதைக்கு பெரிய அளவில் போட்டி இல்லை. சந்தையில் எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV) எனும் போட்டியாளரே இப்போதைக்கு உள்ளது. விரைவில் ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV) மற்றும் மாருதி சுஸுகியின் இவிஎக்ஸ் (Maruti eVX) ஆகியவை கர்வ் இவி-க்கு போட்டியாக வரவுள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கான டிமாண்ட் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காட்சியளிக்கின்றது. இந்தமாதிரியான சூழலிலேயே டாடா கார்வ் இவி எலெக்ட்ரிக் கார் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, August 12, 2024, 11:45 [IST]
English summary
Book your tata curvv ev now deliveries begin august 23
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+