இந்த காரை வாங்குவதும் பாழும் கிணத்துல நாமலே போய் குதிப்பதும் ஒன்னு.. வெளியான அதிர்ச்சியான தகவல்!
முன்னணி நிறுவனத்தின் கார் பாதுகாப்பு விஷயத்தில் மண்ணை கவ்வி இருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிட்ரோன் நிறுவனத்தின் சி3 ஏர்கிராஸ் / புதிய ஏர் கிராஸ் (Citroen C3 Aircross / New Aircross + 2 Airbags), இதுவே பாதுகாப்பு விஷயத்தில் தரமற்றது என்கிற ரேட்டிங்கை பெற்ற அந்த கார் மாடல் ஆகும். சமீபத்தில் இந்த கார் மாடலை லத்தின் என்சிஏபி (Latin NCAP) மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு தரத்தை ஆராய்ந்தது.
மணிக்கு 64 கிமீ வேகத்தில் இயக்கி சி3 ஏர்கிராஸ் / புதிய ஏர் கிராஸ் காரை மோதல் ஆய்விற்கு அது உட்படுத்தியது. இதில், ஐந்திற்கு ஒரு ஸ்டார்களைகூட பெறவில்லை. பூஜ்ஜியம் ஸ்டார்களையே அது பெற்றிருக்கின்றது. அதாவது, பாதுகாப்பிற்கு துளியளவும் உகந்ததல்ல இந்த வாகனம் என்பதே இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இதனால்தான் பலரும் அதிர்ச்சியில் மூழ்கி இருக்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேண்டும் என்பதற்காக வாகனங்களின் தரத்தை மேம்படுத்துகின்ற விதமான புதிய விதிகளை உலக நாடுகள் அனைத்தும் உருவாக்கி வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பாதுகாப்பான பயணத்திற்கு துளியளவும் உகந்ததல்ல என இந்த கார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது கார் காதலர்களை மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது என்றே கூறலாம். மேலும், இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் மாடல் அல்ல, பிரேசிலில் தயாரிக்கப்பட்ட வாகனமே என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த கார் மாடல்கள் பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 33 சதவீத பாதுகாப்பு புள்ளிகளையும், சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 11.37 சதவீத புள்ளிகளையும் பெற்றிருக்கின்றது.
இத்தகைய மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்ற காரணத்தினாலேயே இது பாதுகாப்பு விஷயத்தில் பூஜ்ஜியம் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களாக சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் / புதிய ஏர்கிராஸ் காரில் பல வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், முன் பக்கத்தில் இரண்டு ஏர் பேக்குகள், பெல்ட் லோடு லிமிட்டர், சீட் பெல்ட் ரிமைண்டர், இஎஸ்சி மற்றும் பதாசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இருப்பினும், இந்த கார் பாதுகாப்பில் ஒரு ஸ்டாரைகூட பெறவில்லை. அதேவேளையில், இந்த கார் மாடல் தலைக்கான கர்டைன் வகை ஏர்பேக், மார்பகத்திற்கான ஏர்பேக், கால் மற்றும் இடுப்பு பகுதிகளுக்கான ஏர் பேக்கை பெறவில்லை. இதேபோல், ஏஇபி பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு மற்றும் ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களையும் அது பெறவில்லை.

இதுவே சிட்ரோனின் தயாரிப்பு பூஜ்ஜியம் ஸ்டாரைப் பெற செய்திருக்கின்றது. குறிப்பாக, சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற தவறியதன் விளைவாக முன்பக்க பயணி மற்றும் டிரைவருக்கு மிகவும் ஆபத்தான சூழல் இந்த காரில் நிலவுகின்றது. முக்கியமாக மார்பகம் மற்றும் தொடைப் பகுதிக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளது. இதன் விளைவாகவே ஒரு ஸ்டாரைகூட இந்த கார் பெறவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் கார் மாடல் விற்பனையில் இருக்கின்றது. ஆனால், தற்போது மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருப்பது ஏற்கனவே கூறியதை போல பிரேசில் சந்தைக்கானது ஆகும். ஆகையால், புதிய ரேட்டிங்கைப் பார்த்து எந்த அச்சமும் பட தேவையில்லை. மேலும், இதற்கும் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சி3 ஏர்கிராஸ்-க்கும் கணிசமான வித்தியாசங்கள் உண்டு.
இதேபோல், இந்தியாவிற்கான சி3 ஏர்கிராஸ் இதைவிட சற்றே மேலான பாதுகாப்பு தர மதிப்பெண்களையேப் பெற்றிருக்கின்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆறு ஏற் பேக்குகளை இந்தியாவிற்கான ஏர்கிராஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக பெற்றிருக்கின்றது. இதுமாதிரியான மாற்றங்களாலேயே இந்தியாவிற்கான சி3 ஏர்கிராஸ் பாதுகாப்பு விஷயத்தில் நல்ல ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து, 40க்கும் மேற்பட்ட அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்களையும் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








