445 கிமீ வேகத்தில் சீறி பாயும் காரை அறிமுகப்படுத்திய புகாட்டி! விலை வெறும் ரூ34 கோடி தான்!

புகாட்டி நிறுவனம் சர்வதேச அளவில் அதிவேகமாக பயணிக்கும் கார்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஹைப்பர் கார்கள் மார்க்கெட்டில் பெரும் மதிப்பை பெற்று வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் சாலையில் பார்த்தாலே பெரிய விஷயம் என்ற அளவில் தயாரிக்கப்படும் கார்களாக இருக்கின்றன. இந்நிலையில் இந்நிறுவனம் தனது மூன்றாவது ஹைப்பர் காராக டூர் பில்லியன் என்ற காரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற கார்களில் இருந்து இந்த கார் எப்படி வேறுபடுகிறது? இந்த கார்களில் உள்ள அம்சங்கள் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம்.

புகாட்டி நிறுவனம் வேய்ரான் என்ற காரை முதல் ஹைப்பர் காராக அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சிரான் என்ற காரை இரண்டாவது ஹைப்பர் காராக அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது அந்த காருக்கு மாற்றாக டூர் பில்லியன் என்ற காரை மூன்றாவது ஹைப்பர் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் டிசைன் அடிப்படையில் முந்தைய கார்களை விட சிறந்த காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

bugatti tourbillon

இந்த டூர் பில்லியன் ஹைப்பர் காரை பொறுத்தவரை அதன் சிறப்பம்சமே அதன் இன்ஜின் தான். இந்த காரில் 8.3 லிட்டர் நேச்சுரலி அஸ்பர்டு டர்போ அல்லாத வி16 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 735 கிலோ வாட் அதாவது 1000 எச்பி பவரையும் 900என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முழு திறன் 9000 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் இந்த காரில் மொத்தம் 250 கிலோ வாட் கொண்ட மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க ஆக்ஸிலில் இரண்டு மோட்டார்களும் பின்பக்க ஆக்ஸிலில் ஒரு மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் மொத்தம் 1800 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

bugatti tourbillon

நாம் ஏற்கனவே சொன்னது படி இந்த காரில் உள்ள வி16 என்ஜின் டர்போ சார்ஜ் இல்லாத என்ஜினாக இருக்கிறது இது முதல் தலைமுறை ஹைப்பர் காரை விட சுமார் 150 கிலோ எடை குறைவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு ஆல் வீல் டிரைவ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் 8ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் பெர்ஃபார்மென்ஸை பொருத்தவரை 0 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை இரண்டு நொடியிலும், 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடியிலும், 0 முதல் 300 கிலோமீட்டர் வேகத்தை 10 நொடியிலும், 0 முதல் 400 கிலோமீட்டர் வேகத்தை 25 நொடியிலும் பிக்கப் செய்து விடுகிறது. இந்த கார் அதிகபட்சமாக 445 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

bugatti tourbillon

சாதாரணமாக இந்த கார் 380 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் போதே இதன் ஸ்பீடு கட் ஆகிவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஸ்பீடு கீ என்ற ஆப்ஷனை பயன்படுத்தும் போது இந்த கார் 445 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் பவர் கொடுப்பதற்காக 25 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆயில் கூலிங் முறையில் செயல்படுகிறது.

இந்த காரை எலெக்ட்ரிக் மோடில் மட்டும் இயங்கும் காராக பயன்படுத்த முடியும். அப்படி பயன்படுத்தினால் இந்த கார் 60 கிமீ வரை இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஹைப்பர் கார்களை விட இந்த காரின் எடை குறைவாக இருக்கிறது. இந்த கார் 1995கிலோவிற்கும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் புதிய கார்பன் பைபர் சேஸ் மற்றும் குறைந்த எடை கொண்ட மெட்டீரியல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது தான்.

இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை முன்பக்கம் புகாட்டி நிறுவனத்தின் வழக்கமான ஹார்ஸ் ஷூ வடிவமைப்பிலான கிரில் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது இது ஏர் இன் டேக் பகுதியாகவும் இருக்கிறது. இந்த காரின் முன் பக்கம் மல்டி லிங்க் டிசைன் கொண்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல பின்பக்க வீலுக்கும் சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது இந்த சிஸ்டம் இதற்கு முந்தைய ஹைப்பர் காரண காரை விட 45% எடை குறைவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்த காரில் 3d பிரிண்ட் செய்யப்பட்ட அலுமினிய உதிரிபாகங்கள் மற்றும் ஏஐ தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு 3டி பிரிண்ட் மூலம் தயாரிக்கப்பட்ட ஹலோ ஏர் ஃபாயில் எடையை குறைக்க உதவி செய்கின்றன. இந்த கார் கார்பன் செராமிக் பிரேக்குகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பக்கம் 20 இன்ச் அளவிலும் பின்பக்கம் 21 இன்ச் அளவிலும் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த காருக்கான டயரை பொறுத்தவரை மிச்செலின் நிறுவனம் தனித்துவமாக தயாரித்த டயர்களை இந்த காரில் பொருத்தியுள்ளது. இந்த காரில் முன்பக்கம் உள்ள கிரில் ஏரியா சிரோன் காரை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் டூயல் இன்வெர்ட்டர் இருந்தாலும் லக்கேஜ் வைக்க அதிக இட வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4671 மிமீ நீளமும், 2051 மிமீ அகலமும், 2740 மிமீ வீல் பேஸூம் கொண்டதாக இருக்கிறது. இந்த காரின் கதவுகளை சுற்றி சி வடிவ டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் இரண்டு விதமான கலர் கொண்டு பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரின் முன் பக்கம் போல்டான லுக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஹைபர் காரை விட இந்த காரில் உள்ள ஹார்ஸ் ஷூ வடிவத்தில் கிரில் பெரிதாக வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் ஸ்லிம்மாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த காரின் ஸ்போர்ட்டி லுக்காக காட்சியளிக்கிறது.

மற்றொரு முக்கிய டிசைன் அம்சமாக இந்த காரின் நடுவே முன்பகுதியிலிருந்து பின்பகுதி வரை கோடு போன்ற அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காரின் கிரில் பகுதி பானட், விண்ட் ஸ்கிரீன், வைப்பர் ரூஃப் பேனல், பின்பக்கம் உள்ள பிரேக் லைட் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் டிசைன் என்பது மேம்படுத்தப்பட்ட ஏரோ டைனமிக்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் உட்புறமும் சிறப்பான வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இந்த காரில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 600 உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது டைட்டானியம் என்ற மூலப் பொருளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டரின் எடை மட்டும் 700 கிராம் ஆகும்.

இந்த இன்ஸ்ட்ருமென்ட் சிஸ்டம் இந்த காரின் ஸ்டேரிங் வீலுக்கு நடுவே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏர் பேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் பொசிஷன் என்பது கார் ஓட்டும்போது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தெளிவாக டிரைவருக்கு தெரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பெரும்பாலும் அலுமினிய பாகங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் எல்லாம் 13 கட்டங்களாக பிராசஸ் செய்யப்பட்டு கிளியரான வியூவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள டச் ஸ்கிரீன் சிஸ்டமும் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன. போர்ட்ரைட் அமைப்பில் இது வழங்கப்பட்டுள்ளது. கார் ரிவர்ஸ் மோடுக்கு செல்லும்போது பின்பக்க கேமராவை இரண்டு நொடியில் டிஸ்ப்ளேவில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள சீட்டுகள் எல்லாம் ப்ளோரில் நிரந்தரமாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெடல் பொசிஷன் மட்டும்ம் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய வகையில் இருக்கிறது.

இந்த காரில் உள்ள சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை வழக்கமான ஸ்பீக்கர்களாக இல்லாமல் எக்சைட்டர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சவுண்ட் சிஸ்டம் ஏற்கனவே இருக்கும் இன்டீரியல் பேனர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கார் வரும் 2026ம் ஆண்டு தான் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கார் இடதுபக்க டிரைவ் கொண்ட காராக இருக்கிறது. வலதுபக்க டிரைவ் காராக இது மாற்றப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த காரின் விலையை பொறுத்தவரை 3.8 மில்லியன் யூரோ என்ற மதிப்பில் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இந்திய மதிப்பு படி ரூபாய் 34 கோடியாகும். இதில் வெறும் 250 கார்கள் மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த 250 கார்களும் முன்பதிவு அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த காரை யாரும் வாங்குகிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புகாட்டி நிறுவனத்தின் இந்த டூர் பில்லியன் கார் பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகள் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்த்த காராக இருக்கிறது. இந்த கார் 445 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கார் என்பதால் பலர் இந்த காரின் பெர்பார்மென்ஸ் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்த காரை வாங்கினாலும் ஓட்டுவதற்கு தகுந்த சாலைகள் பெரிய அளவில் இல்லை என்பது சோகமான விஷயம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 13:10 [IST]
English summary
Bugatti tourbillon hypercar specs design engine price details
மேலும்... #bugatti #hybrid super car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X