இந்த காருல போற சான்ஸ் கிடைச்சா கட்டாயம் ஹெல்மெட் போட்டுக்கோங்க.. கண்ணு என்ன தலைல இருக்கு முடிகூட காணாம போகலாம்
மணிக்கு 60-80 கிமீ வேகத்துல போனாலே கண்ணுல இருந்து தண்ணீ வர ஆரம்பிச்சிரும். இங்க ஓர் கார் ராக்கெட்டையே மிஞ்சும் அளவிற்கு அதிக வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருப்பதாக ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக புகழ்பெற்ற சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான புகாட்டி (Bugatti)யே அந்த அதிக வேகத்தில் செல்லும் கார் மாடல் தயார் செய்திருக்கின்றது. டபிள்யூ16 மிஸ்ட்ரல் (W16 Mistral) எனும் கார் மாடலே அந்த அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட கார் மாடல் ஆகும்.
இது ஓர் திறந்த மேற்பக்கம் கொண்ட கார் மாடல் ஆகும். இதுவே மணிக்கு 453.91 கிமீ வேகத்தில் சென்று அசத்தியிருக்கின்றது. இந்த வேக திறனையே சமீபத்தில் புகாட்டி நிறுவனம் சோதித்து பார்த்திருக்கின்றது. இந்த சோதனையை புகாட்டி நிறுவனம் சென்ற நவம்பர் 9 ஆம் தேதி அன்றே செய்து பார்த்திருக்கின்றது.

ஜெர்மனியில் உள்ள ஏடிபி ஆட்டோமோட்டிவ் டெஸ்ட்டிங் மையத்தில் வைத்தே அவர்கள் அதன் அதிக வேகத்தை துள்ளியமாக கண்டிருக்கின்றனர். மேலும், மணிக்கு 453.91 கிமீ வேகத்தை எட்டியதனால் உலகிலேயே அதிக வேகத்தில் இயங்கும் திறன் கொண்ட கார் மாடல் என்கிற புகழை டபிள்யூ16 மிஸ்ட்ரல் சூடியிருக்கின்றது.
மேலும், முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சாதனைகளையும் இந்த கார் மாடல் முறியடித்திருக்கின்றது. ஆண்டி வேலஸ் என்பவரே இந்த காரின் அதீத வேகத்தை சோதித்து பார்த்தவர் ஆவார். இவரே புகாட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பைலட் ஆவார். மேலும், லீ மேன்ஸ் 24 ஹவர்ஸ்-இன் வெற்றியாளரும் இவர் ஆவார்.

உண்மையிலேயே இந்த வேகத்தில் காரை ஓட்டி செல்ல தனித் திறமையே வேண்டும். குறிப்பாக, இந்த வேகத்தில் செல்லும்போது நாம் செய்யும் சிறு அசைவுகூட மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வேகத்தையே அசால்டாக கையாண்டு சாதித்துக் காட்டியிருக்கின்றார் ஆண்டி வேலஸ்.
இதற்கு முன்னதாக மணிக்கு 431.07 கிமீ வேகத்தை எட்டி உலகின் அதிக வேகத்தில் செல்லும் கார் என்கிற மகுடத்தை சூடியது வெரோன் சூப்பர் கார். இதுவும் புகாட்டி நிறுவனத்தின் தயாரிப்பே ஆகும். மேலும், இது திறந்த மேற்பக்க்ம கொண்ட கார் மாடல் ஆகும்.
இது சூடியிருந்த மகுடத்தையே அதே புகாட்டி நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான டபிள்யூ16 மிஸ்ட்ரல் தட்டி பறித்திருக்கின்றது. 2010 ஆம் ஆண்டில் இருந்து புகாட்டி வெரோன் 16.4 சூப்பர் ஸ்போர்ட் கார் உலகின் அதிக வேகமான வாகனம் என்கிற மகுடத்தை சூடி வந்தது குறிப்பிடத்தகுந்தது.
புகாட்டி டபிள்யூ16 மிஸ்ட்ரல் உலகின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றாகவும் காட்சியளிக்கின்றது. இந்த காரின் மதிப்பு 14 மில்லியன் யூரோக்கள் ஆகும். இந்திய மதிப்பில் 124 கோடிக்கும் அதிகம் என தெரிகின்றது. இதன் உரிமையாளரே முன்னதாக உலகின் அதி வேக கார் என்கிற சாதனையைப் படைத்த காருக்கும் உரிமையாளர் ஆவார்.
அதேவேளையில், அதிக வேகத்தில் செல்வதில் இந்த கார்களுக்கு எல்லாம் அப்பனாக ஓர் கார் மாடல் இருக்கின்றது. அது புகாட்டி சிரோன் சூப்பஸ் ஸ்போர்ட் 300 பிளஸ் மாடல் ஆகும். இது மணிக்கு 490.48 கிமீ வேகத்தை எட்டி உலக சாதனையைப் படைத்தது. மூடிய மேற்பக்கத்தைக் கொண்ட கார் பிரிவிலேயே இது இந்த சாதனையைப் படைத்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புகாட்டி நிறுவனம் இந்த கார் அதிக வேகத்தில் சென்று சாதனைப் படைத்திருப்பதை தற்போது கொண்டாடி வருகின்றது. இந்த வேகத்தை தாங்குவது என்பது இயலாத ஒன்றாகும். குறிப்பாக, உரிய பாதுகாப்பு இல்லாமல் இந்த வேகத்தில் சென்றால் கண் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சுவாசிப்பது மிகப் பெரிய சிரமமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









