சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது

இந்தியாவில் சீன நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams) விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களில் அட்டோ 3 (Atto 3)-யும் ஒன்றாகும். இந்த காருக்கு இந்திய சொகுசு மற்றும் பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த காரை இறக்குமதி செய்துக் கொண்டிருக்கின்றது பிஒய்டி. இந்த நிலையிலேயே அதிகம் இந்த காரை இறக்குமதி செய்வதற்கான உரிமம் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசாங்கத்தால் வழங்கப்படும் சாலை தகுதிக்கான (Homologation Certificate) சான்றையே அது பெற்றிருக்கின்றது.

Byd homologation certificate

அராய்-யே இந்த சான்றை வழங்கி இருக்கின்றது. ஆகையால், நிறுவனம் சந்தித்து வந்த இறக்குமதி கெடுபிடி தற்போது விலகியிருக்கின்றது. ஆகையால், இனி வரும் நாட்களில் நிறுவனத்தால் 2,500க்கும் அதிகமான யூனிட்டுகள் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் இறக்குமதி செய்துக் கொள்ள முடியும். ஹோமோலோகேஷன் சான்று பெறாத வாகனங்கள் 2,500 யூனிட்டைத் தாண்டி ஒரு யூனிட்கூட இறக்குமதி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து எஸ்கேடி (Semi Knock Down) வாயிலாக விற்பனைச் செய்யப்பட்டு வரும் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை சிகேடி (Complete Knock Down) வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அட்டோ 3 இன் ஆரம்ப நிலை வேரியண்டையும் அது விற்பனைக்குக் களமிறக்கும் என்று தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Byd atto 3

இதை நிறுவனம் செய்யும் எனில் இப்போது இருப்பதைக் காட்டிலும் குறைவான விலையில் அட்டோ 3 விற்பனைக்குக் கிடைக்க நேரிடும். இப்போது விற்பனையில் இருக்கும் பிஒய்டி அட்டோ 3 ஓர் முழு சார்ஜில் 512 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் திறன் கொண்டதாக இருக்கின்றது.

ஆனால், இதன் ஆரம்ப நிலை தேர்வு அதிகபட்சமாகவே ஓர் ஃபுல் சார்ஜில் 264 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இப்போது விற்பனையில் இருப்பதைவிட மிக மிக குறைவான ரேஞ்ஜ் திறன் ஆகும். இத்தகைய குறைவான ரேஞ்ஜ் திறன் காரணத்தினாலேயே அதன் விலையும் குறைவாக இருக்கப்போகின்றது.

பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி அன்றே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில், சீனா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரேசில், தாய்லாந்து, இஸ்ரேல் மற்றும் சுவீடன் என உலக நாடுகள் பலவற்றில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஸ்டைல் மற்றும் நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் மிக சிறந்த கார் மாடலாக அட்டோ 3 காட்சியளிக்கின்றது. லெவல் 2 வகை அடாஸ் அம்சம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கை, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர் ஃபுல் மோட்டார் என ஏகப்பட்ட சிறப்பு வசதிகளை தனக்குள் அட்டோ3 தாங்கி இருக்கின்றது.

இதில் பிஎம்எஸ் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 201 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பேட்டரி பேக்கை பொருத்த வரை 60.48 kWh திறன் கொண்டதே அட்டோ 3இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் ஆரம்ப விலையே ரூ. 33.99 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் கார் விரும்பிகள் மத்தியிலேயே இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது தடையில்லா சான்று கிடைத்திருப்பதால் நிறுவனத்தால் அதிக யூனிட்டுகளை இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா டெலிவரி வழங்க முடியும். ஆகையால், இப்போது நிலவும் மிகப் பெரிய காத்திருப்பும் கணிசமான அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2024, 5:00 [IST]
English summary
Byd atto 3 ev got homologation certificate from arai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+