கப்பல் மாதிரியான காரின் விலையில் ரூ. 9 லட்சம் வரை குறைச்சுட்டாங்க! இந்தியர்களை மொத்தமா வளச்சுபோட திட்டம்!

சீனாவைச் சேர்ந்த பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் பிஒய்டி (Build Your Dreams). இந்த நிறுவனம் இந்தியாவிலும் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. அது தற்போது நாட்டில் மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே அட்டோ 3 (ATTO 3) ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனையே இந்தியாவில் தற்போது பிஒய்டி விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

அறிமுக விலையாக இந்த எலெக்ட்ரிக் காருக்கு பிஒய்டி நிறுவனம் ரூ. 24.99 லட்சம் விலையை நிர்ணயித்து உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அப்டேட்டின்கீழ் பலதரப்பட்ட சிறப்பம்சங்களை இந்த காரில் பிஒய்டி சேர்த்து இருக்கின்றது. இதுதவிர, புதிதாக சில தேர்வுகளையும் இந்த கார் மாடலுடன் அது இணைத்திருக்கின்றது.

Byd atto 3

முன்னதாக, அதாவது, அப்டேட் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த கார் மாடல் ஒரே ஒரு தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், மூன்று விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் சுப்பீரியர் (Superior) ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்கு வந்துள்ளது.

இதில் டைனமிக்கே மிகவும் விலை குறைவான தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இதற்கே பிஒய்டி நிறுவனம் 24.99 லட்சம் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரீமியம் வேரியண்ட் இருக்கின்றது. இதற்கு ரூ. 29.85 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடைசி மற்றும் உயர்நிலை தேர்வாக சுப்பீரியர் உள்ளது. இதன் விலை ரூ. 33.99 லட்சம் ஆகும்.

Byd atto 3 cosmos black edition

இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய வேரியண்டுகளை அறிமுகப்படுத்தி இருப்பதன் வாயிலாக அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை விலை குறைவானதாக பிஒய்டி மாற்றி இருக்கின்றது. முன்னதாக ரூ. 33.99 லட்சம் செலுத்தினால் மட்டுமே இந்த கார் மாடலை வாங்க முடியும் என்கிற நிலை இருந்தது.

ஆனால், தற்போது அதை அந்நிறுவனம் மாற்றி இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், சுப்பீரியர் வேரியண்டைக் காட்டிலும் சிறப்பம்சங்களைச் சற்று குறைவாகவே புதிய வேரியண்டுகள் தாங்கி இருக்கின்றன.

இதன் வாயிலாகவே அவற்றின் விலை நம்ப முடியாத அளவிற்கு தற்போது குறைந்திருக்கின்றது. அதாவது, முன்பு 34 லட்சம் ரூபாயை செலவிட்டால் மட்டுமே வாங்க முடியும் என்றிருந்த கார் மாடலை தற்போது சிறப்பம்சங்கள் சிலவற்றை குறைத்து ரூ. 25 லட்சத்திற்கு பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் வரை இதன் விலையில் பிஒய்டி குறைத்திருக்கின்றது. இந்த விலைக் குறைப்பால் டைனமிக் வேரியண்டில் மிக மிக முக்கிய அம்சமான அடாஸ் (ADAS) காணாமல் போயிருக்கின்றது. இதேபோல், 80kW டிசி சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், அடாப்டீவ் முன் பக்க மின்விளக்கு, பன்முக வண்ணங்களில் ஒளிரும் திறன் கொண்ட ஆம்பியன்ட் லைட் மற்றும் 8ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் ஆகியவையும் இந்த தேர்விலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

இதேபோல், உயர்நிலை தேர்வைக் காட்டிலும் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் பிரீமியம் தேர்விலும் சில மிக முக்கியமான அம்சங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. அடாஸ் மற்றும் அடாப்டீவ் முன் பக்க லைட்டே இதில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றது.

அதேவேளையில், இந்த இரண்டு தேர்வுகளிலும் மற்ற பிரீமியம் அம்சங்களான பனோரமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட பவர்டு டிரைவர் இருக்கை, சூடாகும் திறன் மற்றும் எலெக்ட்ரிக் வசதிக் கொண்ட ஓஆர்விஎம்-கள், 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கேமிரா உள்ளிட்டவற்றை அவை தாங்கி இருக்கின்றன.

சொகுசாகவும், பிரீமியம் ஃபீல் உடன் பயணிக்க இந்த அம்சங்களே போதுமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒருவேளை உங்களுக்கு இதைவிட மிக சிறந்த ரைடு அனுபவம் வேண்டும் என்றால், அதற்கான தேர்வே சுப்பீரியர் ஆகும். மேலே நீக்கப்பட்டதா கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்த தேர்வில் இடம் பெற்றிருக்கும்.

கூடுதல் அம்சங்களையும் இதில் காண முடியும். குறிப்பாக, அடாஸ், 7 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மலைப் பாதையில் இருந்து இறங்கும் போது போதுமான கன்ட்ரோலை வழங்கும் வசதியும் இந்த காரில் பிஒய்டி வழங்கி இருக்கின்றது.

பிஒய்டி நிறுவனம் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை ரேஞ்ஜ் தருவதிலும் மிக சிறந்த வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், டைனமிக் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 468 ரேஞ்ஜ் தரும் திறன் கொண்ட 49.92 kWh பேட்டரி பேக்கையும், பிரீமியம் மற்றும் சூப்பீரியர் தேர்வில் 60.48 kWh பேட்டரி பேக்கையும் வழங்கி இருக்கின்றனர்.

இது ஓர் முழு சார்ஜில் 521 கிலோ மீட்டர் வரையில் ரேஞ்ஜ் தரும். இந்த மூன்று வேரியண்டுகளிலும் 204 பிஎஸ் மற்றும் 310 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன்மிக்க காராகவே அட்டோ 3 இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியிலேயே தற்போது பிஒய்டி களமிறங்கி இருக்கின்றது. இது என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 15:40 [IST]
English summary
Byd atto 3 suvs new variants launched in india pricing and features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+