டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சீன நிறுவனம்! யாருக்குமே தெரியாம சைலெண்டா வளர்ந்துட்டாங்க!
சர்வேதச அளவில் நம்பர் 1 எலக்ட்ரிக் கார் விற்பனையாளராக இருந்த டெஸ்லா நிறுவனம் தற்போது அந்தப் பெயரை இழந்துள்ள.து சீனாவை சேர்ந்த பிஓய்டி நிறுவனம் தான் தற்போது சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த திடீர் மாற்றம் ஏற்பட்டது எப்படி என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் டெஸ்லா என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனம் வாகன தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது முதல் மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. தானியங்கியாக இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்த இவர், ஏதோ சோப்பு டப்பா போல காரை தயாரிப்பார் என முதலில் கருதினார்கள். ஆனால் இவர் காரை களத்தில் இறக்கும் போது ஒட்டுமொத்த உலகமும் இவரை திரும்பிப் பார்த்தது.

இதன் விளைவாக இவர் தற்போது உலகின் நம்பர்1 பணக்காரராக மாறிவிட்டார். உலகில் பல்வேறு நாடுகளில் இவரது தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக இதுவரை இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது அந்தப் பெயர் பறிபோய்விட்டது என்றே சொல்லிவிடலாம்.
2023-ம் ஆண்டு கடைசி காலாண்டுக்கான விற்பனை விபரங்கள் சர்வதேச அளவில் தற்போது வெளியாகியுள்ளன. இதில் டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் 4,84,57 கார்களை விற்பனை செய்திருந்தது. இது கடந்த ஆண்டு கடைசி காலாண்டு விற்பனை விபரத்துடன் ஒப்பிடும்போது 11% அதிகம் தான். அதாவது டெஸ்லா நிறுவனம் நல்ல வளர்ச்சியை தான் பெற்றுள்ளது. ஆனால் முதலிடத்தில் தக்க வைத்துக்கொள்ள இந்த வளர்ச்சி போதவில்லை.

சீனாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் இந்நிறுவனம் இதே காலகட்டத்தில் 5,26,49 கார்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. அதாவது டெஸ்லாவைவிட அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்து உள்ளது. இந்த ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் பல மார்கெட்டை இந்த பிஒய்டி நிறுவனம்தான் பிடித்துள்ளது. பிஒய்டி நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய வளர்ச்சி வருவதற்கு சீன அரசு வழங்கும் சப்போர்ட் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.
1995ஆம் ஆண்டு பேட்டரி தயாரிப்பு நிறுவனமாக தான் முதன்முதலாக பிஒய்டி நிறுவனம் துவங்கப்பட்டது. மெதுவாக இந்நிறுவனம் பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் நிறுவனமாக மாறுகிறது. சர்வதேச அளவில் நேரடியாக டெஸ்லாவிற்கு போட்டியாக கார்களை களத்தில் இறக்கி வருகிறது. இந்நிறுவனம் சீனா மற்றும் ஐரோப்பிய ஆகிய நாடுகளில் சிறப்பான எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

சீன நாட்டின் நிறுவனம் என்பதால் சீன அரசு அந்த நிறுவனத்திற்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் மூலம் சீனாவில் இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்நிறுவனம் இதுவரை அமெரிக்காவில் தனது தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லவில்லை. அமெரிக்காவில் உள்ள இறக்குமதி வரி காரணமாக பிஒய்டி நிறுவனம் தனது வாகனங்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய தயங்கி வருகிறது.
டெஸ்லா நிறுவனத்திற்கும் பிஒய்டி நிறுவனத்திற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. டெஸ்லா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆனால் பிஒய்டி நிறுவனம் ஹைபிரிட் காரர்களின் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் ஒட்டுமொத்த 2023 ஆம் ஆண்டுக்கான விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் 18 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு விற்பனையை காட்டிலும் 38 சதவீத வளர்ச்சியாகும்.
இதே காலகட்டத்தில் பிஒய்டி நிறுவனம் 16 லட்சம் வாகனங்களை தான் விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் 2022ம் ஆண்டு விற்பனையை காட்டிலும் 73% விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆண்டு முழுவதும் நடந்த விற்பனையில் டெஸ்லா நிறுவனம் முதலிடத்தை பெற்றிருந்தாலும், தற்போது பிஒய்டி நிறுவனத்தின் விற்பனை என்பது டெஸ்லாவிற்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும். டெஸ்லா மாதிரியான ஒரு மிகப்பெரிய நிறுவனத்தையே ஆட்டிப் பார்க்க சீன நிறுவனம் களமே இறங்கியது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் துவங்கப்பட்டது முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகச் சிறந்த கார் தயாரிப்பு நிறுவனமாக மாறிவரும் நிலையில் தற்போது பிஒய்டி போன்ற சில நிறுவனங்கள் வந்து டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு வளர்ந்து இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.பிஒய்டி கார்கள் இந்தியாவிலும் விற்பனையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications









