புது பொண்டாட்டிக்கு முழம் முழமா பூ வாங்குற மாதிரி.. இந்திய பணக்காரங்க சீன பிராண்ட் இ-கார வாங்கிட்டு இருக்காங்க

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்ற சூப்பரான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் சீல் (Seal)-ம் ஒன்றாகும். இது சீன நிறுவனமான பிஒய்டி (BYD) பிராண்டின் தயாரிப்பாகும். சீன நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும் இந்தியர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த காருக்கு கிடைத்த புக்கிங் பற்றிய விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. கடந்த மூன்று மாதங்களாகவே பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதற்கு 1000-க்கும் அதிகமானோர் இந்தியாவில் புக்கிங்கை வழங்கி இருக்கின்றனர்.

BYD seal electric car delivery

இதில் 500 புக்கிங்குகள் முதல் 15 நாட்களில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது. மீதமுள்ள 500 புக்கிங்குகள் அடுத்தடுத்த நாட்களில் கிடைத்தவை ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே இந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி உள்ளிட்ட நகரங்களிலேயே இந்த காருக்கான புக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இங்கு கிடைத்தவை மட்டுமே அந்த 1000 புக்கிங்குகள் ஆகும். இந்த மாதிரியான சூழலிலேயே இன்று (மே 27) ஒரே நாளில் சுமார் 200 யூனிட்டுகள் சீல் எலெக்ட்ரிக் கார்களை பிஒய்டி டெலிவரி கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நாடு முழுவதும் டெலிவரி செய்யப்பட்ட எண்ணிக்கை ஆகும்.

பிஒய்டி சீல் ஓர் சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் ரூ. 41 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்று தேர்வுகளும் வெவ்வேறு ரேஞ்ஜ் மற்றும் திறனை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. விரிவாக கூற வேண்டும் என்றால் டைனமிக் தேர்வு 204 பிஎஸ் பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

மேலும், இது ஓர் முழு சார்ஜில் 510 கிமீ தூரம் பயணிக்கும். 61.4 kWh பேட்டரி பேக்கே இந்த தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன், பிரீமியம் தேர்வில் ஓர் முழு சார்ஜில் 650 கிமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இதில் 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

மின்சார மோட்டாரை பொருத்த வரை 313 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. பெர்ஃபார்மன்ஸ், இருப்பதிலேயே இதுதான் அதிக பவரை வெளியேற்றும். இது ஓர் அனைத்து வீல் இயக்கம் கொண்ட தேர்வாகும். 530 பிஎஸ் மற்றும் 670 என்எம் டார்க்கையே இது வெளியேற்றும்.

பேட்டரி பேக்கை பொருத்த வரை 82.5 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு முழு சார்ஜில் 580 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இந்த எலெக்ட்ரிக் காரை 150 kW சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக்கொள்ள முடியும்.

இதை பயன்படுத்தும் பட்சத்தில் வெறும் 37 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு அம்சங்களை இந்த கார் மடால் தாங்கி இருக்கின்றது. அந்தவகையில், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட்டிங் மற்றும் வெண்டிலேஷன் வசதி கொண்ட பவர்டு முன் பக்க இருக்கை ஆகியவை சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட் செட்-அப் ஆகிய அம்சங்களும் பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், பாதுகாப்பு அம்சங்களாக 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை 11 kW ஏசி சார்ஜரிலும் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்தும்போது பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் சார்ஜை எட்ட 8 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். இதோபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அது பெற்றுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2024, 20:08 [IST]
English summary
Byd delivers 200 units seal electric cars in one day across the country
மேலும்... #byd #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+