பழைய பெயரை இழந்து புதிய பெயரில் விற்பனைக்கு வரும் கார்.. இந்தியர்களை வளச்சுபோட சீன நிறுவனத்தின் புதிய தந்திரம்

பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் இ6 (e6)-ம் ஒன்றாகும். இது ஓர் எலெக்ட்ரிக் எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய புகழ்பெற்ற கார் மாடலையே விரைவில் புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது பிஒய்டி நிறுவனம். புதுப்பித்தலின் அடிப்படையில் புதிய அம்சங்கள் பலவற்றை அந்நிறுவனம் சேர்த்திருக்கின்றது.

புதிய அம்சங்களை சேர்ப்பதோடு நிறுவனம் நிறுத்திக் கொள்ளவில்லை, அதன் பெயரையும் நிறுவனம் மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனத்தின் தற்போதைய டீசர் அமைந்திருக்கின்றது. முன்னதாக இந்த கார் 'எம்6' (M6) என்கிற பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது.

BYD e6 to rebrand as emax 7

இந்த நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத புதிய பெயராக இ-மேக்ஸ் 7 (eMAX 7) என்கிற பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. உலக சந்தையிலும் இந்த காரை பெயரை மாற்றியே பிஒய்டி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், எம்6 எனும் பெயரையே உலக சந்தையில் அது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்தியா ஓர் தனித்துவமான சந்தை என்பதால் இங்கு அக்கார் ஓர் தனித்துவமான பெயரிலேயே விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், இதன் புதிய பெயர் இந்த கார் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்கு வரும் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

ஆனால், இதன் உடல் தோற்றத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதும் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், இதன் லுக்கை மெருகேற்றுவதற்கான அம்சங்கள் பலவற்றை இந்த காரில் பிஒய்டி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், புதிய கிரில், மறு வடிமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றை புதிய இ-மேக்ஸ் 7 எலெக்ட்ரிக் எம்பிவி காரில் அது வழங்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இதேபோல், கணிசமான மாற்றங்களை இக்காரின் உட்பக்கத்திலும் அது செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், காரின் உட்பக்கத்தின் லுக்கை கூடுதல் பிரீமியமானதாக மாற்றும் பொருட்டு இரட்டை நிற அலங்கரிப்பை அது செய்திருக்கின்றது. தொடர்ந்து, டிரைவிங் மோடை மாற்றும் அம்சமும் மாற்றப்பட்டு புதிய ஒன்று சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், 12.8 அங்குல திருப்பும் வசதிக் கொண்ட டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகின்றது. இதேபோல், பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது.

அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவையே இதில் வழங்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து, லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இந்த அடாஸ் அம்சத்தின் வாயிலாக அவசர காலத்தில் தானாக பிரேக் பிடிக்கும் வசதி, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஒரே லேனை ஃபாலோ செய்யும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் வசதி உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

உலக சந்தையில் பிஒய்டி எம்6 எலெக்ட்ரிக் காரில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 55.4 kWh மற்றும் 71.8 kWh ஆகியவையே அவை ஆகும். இவை ஓர் முழு சார்ஜில் 530 கிமீ ரேஞ்சை எதிர்பார்க்கலாம். இதே வசதியுடனேயே இ-மேகே்ஸ் 7 இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி எலெக்ட்ரிக் எம்பிவி கார் பிரிவில் எந்தவொரு போட்டியும் இல்லாத சூழலே நிலவுகின்றது. ஆகையால், இந்த எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அது விற்பனையில் தனிக்காட்டு ராஜாவாகவே இருக்கும். இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக புதிய பெயர் மற்றும் சிறப்பு வசதிகள் சேர்ப்பு உள்ளிட்டவே மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 5:00 [IST]
English summary
Byd e6 to rebrand as emax 7 in india here is more details
மேலும்... #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+