ஓட்டி பார்த்தால்தான் எல்லாமே தெரியுது! தமிழ்நாட்டில் உருவாகும் சீன எலக்ட்ரிக் கார் எப்படி உள்ளது?

பிஒய்டி (BYD) நிறுவனத்தில் இருந்து புதிய எலக்ட்ரிக் காராக இமேக்ஸ் 7 (eMax 7) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவில் களம்புகுந்த சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காராக இ6 மாடலை அறிமுகம் செய்தது. பிஒய்டி இ6 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் காராகவே இமேக்ஸ் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பழைய பிஒய்டி இ6 எலக்ட்ரிக் கார் உடன் ஒப்பிடுகையில், புதிய இமேக்ஸ் 7 ஆனது எல்லா விதங்களிலும் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது.

குறிப்பாக, காரின் வெளிப்பக்கம் வெகுவாக அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் காரின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய பிஒய்டி இமேக்ஸ் 7 காரில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை அறிய இந்த எலக்ட்ரிக் காரை சென்னை சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை கீழேயுள்ள வீடியோவில் விரிவான ரிவியூவாக வழங்கியுள்ளோம்.

பிரீமியம் மற்றும் சுப்பீரியர் என 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரில் அதற்கேற்ப பேட்டரிகளும் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்பட்டுள்ளன. அதாவது, பிரீமியம் வேரியண்ட்டில் 55.4kWh பேட்டரியும், சுப்பீரியர் வேரியண்ட்டில் 71.8kWh பேட்டரியும் கிடைக்கும். பேட்டரியின் அளவிற்கு ஏற்ப அவை வழங்கும் ரேஞ்ச் மாறுப்படுகிறது.

byd emax 7 review video

அதாவது, பிரீமியம் வேரியண்ட்டில் 420கிமீ வரையிலான ரேஞ்சையும், சுப்பீரியர் வேரியண்ட்டில் 530கிமீ வரையிலான ரேஞ்சையும் பெறலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏகப்பட்ட வசதிகள் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது, அடாஸ் (ADAS) ஆகும். இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரில் லெவல்-2 அடாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஏர்பேக்குகளும் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 9:54 [IST]
English summary
Byd emax 7 electric car test drive review video check all details here
மேலும்... #byd #BYD eMAX 7 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+