இந்த சீன எலக்ட்ரிக் காரை இந்த ஒரு காரணத்துக்காகவே வாங்கலாம்!! மாருதி காரின் அதே விலையில்!

பிஒய்டி (BYD) நிறுவனம் அதன் புத்தம் புதிய இமேக்ஸ்-7 (eMax 7) எலக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிஒய்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் எம்பிவி காராக இது விளங்குகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால், முழு எலக்ட்ரிக் காரை காட்டிலும் ஹைப்ரீட் கார்கள் ஏற்றவையாக இருக்கும் என உங்களுள் சிலர் நினைக்கலாம்.

பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரின் அதே அளவில் பெரியதான தோற்றத்தில், அதே விலையில் கிடைக்கக்கூடிய மாருதி சுஸுகி ஹைப்ரீட் கார், இன்விக்டோ ஆகும். இதனை பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் சார்ஜ் என இரண்டிலும் இயக்கலாம். பிஒய்டி இமேக்ஸ்-7 மற்றும் மாருதி சுஸுகி இன்விக்டோ இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

byd emax7 vs maruti invicto

என்ஜின்: செயல்படுதிறனை பொறுத்தவரையில், இந்த இரு எம்பிவி கார்களும் ஒவ்வொரு விதமாக தனித்துவமான பவர்ஃபுல்லான கார்களாக விளங்குகின்றன. இமேக்ஸ்-7 ஆனது ஓர் எலக்ட்ரிக் கார் ஆகும். இதில் 55.4kWh மற்றும் 71.8kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பேட்டரிகள் வழங்கும் ரேஞ்ச்கள் முறையே 420கிமீ மற்றும் 530கிமீ ஆகும்.

மறுப்பக்கம், இன்விக்டோவில் 2.0 லிட்டர் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து மொத்தமாக வெளிப்படுத்தும் அதிகப்பட்ச இயக்க ஆற்றலின் அளவு 183 பிஎச்பி ஆகும். என்ஜின் மூலமாக மட்டும் 188 என்.எம் வரையிலும், கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் 206 என்.எம் வரையிலும் டார்க் திறனை பெற முடிகிறது.

தொழிற்நுட்ப வசதிகள்: பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 7 பேர் வரையில் சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம். எலக்ட்ரிக் கார் என்பதால், முன் இருக்கைகளுக்கு மத்தியில் டிரான்ஸ்மிஷனுக்காக இடம் வீணாகவில்லை. இந்த காரினுள் 12.8 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கேற்ப செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக சுழற்றிக் கொள்ளலாம்.

byd emax7 vs maruti invicto

இன்விக்டோ காரில் 8 பேர் வரையில் சவுகரியமாக அமர முடியும். இந்த காரில் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஏற்கக்கூஇய 10.1-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் & ஏர்பேக்ஸ் போன்ற அவசியமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும், அடாஸ் வழங்கப்படாதது சற்று குறையாகவே பார்க்கப்படுகிறது.

ரேஞ்ச் & மைலேஜ்: பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக கிடைக்கும் ரேஞ்ச் 530கிமீ என்பது இந்த காரின் ஹைலைட்டான விஷயமாகும். ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் இந்த காரில் 10%-இல் இருந்து 80% சார்ஜை வெறும் 37 நிமிடங்களில் நிரப்பிவிடலாம். மறுப்பக்கம், இன்விக்டோவில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 23.4கிமீ மைலேஜை பெறலாம் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 52 லிட்டர்கள் ஆகும்.

விலை: பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.26.90 லட்சத்தில் இருந்து ரூ.29.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் கார் என்பதால், எரிபொருள் செலவு அதிகமாக இருக்காது என்பது இந்த பிஒய்டி காரின் சிறப்பம்சம் ஆகும். இன்விக்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.25.21 லட்சம்- ரூ.28.92 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு இன்னும் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளது. இதனை அதிகரிக்க சீன எலக்ட்ரிக் கார் நிறுவனமான பிஒய்டி பல்வேறு விதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியே இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரின் அறிமுகமாகும். மாருதி சுஸுகி இன்விக்டோ காரை வாங்கும் ஐடியாவில் இருப்பவர்கள் இந்த பிஒய்டி எலக்ட்ரிக் காரை வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 21:54 [IST]
English summary
Byd emax 7 electric car vs maruti suzuki invicto mpv cars comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+