விலை சொன்னதுக்கு அப்புறம் தான் இன்னோவாவை விட எவ்வளவு அதிகம்னு தெரியுது - இந்தியாவில் சீன எலக்ட்ரிக் கார்!!

பிஒய்டி (BYD), பிரபலமான சீன எலக்ட்ரிக் கார் நிறுவனம். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக அதன் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் புதியதாக பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு அளவில் பெரியதான எலக்ட்ரிக் எம்பிவி கார் ஆகும். இந்த அளவிற்கு பெரிய தோற்றத்தை கொண்டிருக்கும் மற்றொரு எம்பிவி கார் என்றால், அது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகும். ஆனால், இன்னோவா ஹைகிராஸ் ஆனது எலக்ட்ரிக் கார் கிடையாது. பிஒய்டி இமேக்ஸ்-7 காருக்கும், இன்னோவா ஹைகிராஸுக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

விலை & வேரியண்ட்கள்: பிஒய்டி இமேக்ஸ்-7 கார் மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ப்ரீமியம் & சூப்பிரியர் என அழைக்கப்படும் இந்த வேரியண்ட்கள் 6 மற்றும் 7 சீட்டர் லே-அவுட்களில் கிடைக்கின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.26.9 லட்சத்தில் இருந்து ரூ.29.9 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

byd emax-7 vs toyota innova

மறுப்பக்கம், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஜி.எக்ஸ், ஜி.எக்ஸ் (ஆப்ஷ்னல்), வி.எக்ஸ், வி.எக்ஸ் (ஆப்ஷ்னல்), இசட்.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் (ஆப்ஷ்னல்) என்கிற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இன்னோவா ஹைகிராஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.19.77 லட்சத்தில் இருந்து ரூ.30.9 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பரிமாண அளவுகள்: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை காட்டிலும் பிஒய்டி நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார் 65மிமீ நீளம் குறைவானது, 40மிமீ அகலம் குறைவானது, 105மிமீ உயரம் குறைவானது ஆகும். இதற்கேற்ப, பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 50மிமீ குறைவாக உள்ளது. ஹைகிராஸில் 18-இன்ச்சிலும், இமேக்ஸ்-7 காரில் 17-இன்ச்சிலும் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

பவர்டிரெயின்: புதிய பிஒய்டி இமேக்ஸ்-7 காரில் 55.4kWh மற்றும் 71.8kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 55.4kWh பேட்டரியில் 420கிமீ ரேஞ்சையும், 71.8kWh பேட்டரியில் 530கிமீ ரேஞ்சையும் பெறலாம் என பிஒய்டி தெரிவித்துள்ளது. இந்த எலக்ட்ரிக் எம்பிவி காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும். காருடன் 7 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் வழங்கப்படுகிறது.

byd emax-7 vs toyota innova

இன்னோவா ஹைகிராஸ் காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் பெட்ரோல் என்ஜின் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இவை இரண்டு உடனும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதில்லை; ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் முன் சக்கரங்களுக்கு செல்கின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்: இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரில் டேஸ்போர்டில் 12.8 இன்ச்சில் ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 2 வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், 5-இன்ச் எல்சிடி உடன் செமி-டிஜிட்டல் க்ளஸ்ட்டர், பனோராமிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் மூலமாக 6 விதமாக மடக்கக்கூடிய டிரைவர் சீட், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 6-ஸ்பீக்கர்கள், டைப்-சி சார்ஜிங் பாயிண்ட்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இன்னோவா ஹைகிராஸில் பெரிய 10.1-இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இனஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், டிரைவர் இருக்கையில் மெமரி ஃபங்க்சன், கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள், பவர்டு டெயில்கேட், ரியர் சன்ஷேட், 360-டிகிரி கேமரா, செமி-டிஜிட்டல் க்ளஸ்ட்டர், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பவர்டு லெக் ரெஸ்ட், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில் வேண்டுமாயின் ஒரே மாதிரியாக இருந்தாலும், பிஒய்டி இமேக்ஸ்-7 எலக்ட்ரிக் காரை வாங்கும் கஸ்டமர்களும், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை வாங்கும் கஸ்டமர்களும் முற்றிலும் வேறுப்பட்டவர்கள். இப்போதுதான் மெல்ல மெல்ல இந்தியாவில் ஷோரூம்களை திறந்துவரும் பிஒய்டி நிறுவனத்தில் இருந்து லேட்டஸ்ட் எலக்ட்ரிக் கார் ஒன்றை ஒருவர் வாங்குகிறார் என்றால் அவர் மாடர்னான புதிய முயற்சிகளை வரவேற்பவராகவே இருப்பார்.

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2024, 8:00 [IST]
English summary
Byd emax 7 electric car vs toyota innova hycross check full comparison here
மேலும்... #byd #BYD eMAX 7 #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+