6-7இருக்கைகள் தேர்வில் இந்த கார் விற்பனைக்கு வர போகுதா! நாளை அறிமுகமாகுது குடும்பமே பயணிக்கிற மாதிரியான இ-கார்

மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (BYD). இது நாளை (அக்டோபர் 8) தினம் இந்தியாவில் அதன் புதுமுக எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இ-மேக்ஸ்7 (e-Max7) எனும் இ-காரையே அது நாட்டில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இது ஓர் அதிக இருக்கைகளைக் கொண்ட எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இ6 (e6) எனும் பெயரில் ஏற்கனவே அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

இந்த கார் மாடலை சமீபத்தில் பிஒய்டி நிறுவனம் அப்டேட் செய்தது. அப்டேட்டைத் தொடர்ந்து அதன் பெயரையும் அது மாற்றி இருக்கின்றது. அந்தவகையில், சந்தையில் அது இ-மேக்ஸ்7 எனும் பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. புதுப்பித்தலைத் தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் கார் 6 மற்றும் 7 இருக்கைகள் என இரண்டு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

BYD emax 7 launching tomorrow

சந்தையில் தற்போது குடும்பத்துடன் பயணிக்கின்ற மாதிரியான அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே பிஒய்டி நிறுவனம் இந்த காரை ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நாளையே இந்த தகவல் மற்றும் விலை விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தகவல்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அதேவேளையில், புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் பல்வேறு புதிய சிறப்பு வசதிகளை சேர்த்திருப்பதாகவும், அத்துடன், காரின் லுக்கை மேலும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்தவகையில், இந்த காரின் வெளிப்புறத் தோற்றத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட கிரில், மறு வடிமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றைக் கொண்டே புதிய இ-மேக்ஸ் 7 எலெக்ட்ரிக் காரை அலங்கரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேபோல், காரின் உட்பக்கத்திலும் கணிசமான மாற்றங்களை அது செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இரட்டை நிறங்களால் அது அலங்கரிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. தொடர்ந்து, டிரைவிங் மோடை மாற்றும் பொத்தானும் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, 12.8 அங்குல திருப்பும் வசதிக் கொண்ட டச் ஸ்கிரீன், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்குமாம்.

இதுமட்டுமில்லைங்க, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக புதிய இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் காரில் 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவற்றையும் இந்த காரில் பிஒய்டி வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், இவை அனைத்தும் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகும். நாளையே இந்த தகவல்கள் அனைத்தும் உறுதிச் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கூடுதல் சிறப்பாக, இந்த காரில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், ஓர் முழு சார்ஜில் 530 கிமீ ரேஞ்சை தரும் திறன் உள்ளிட்டவையும் பிஒய்டி இ-மேக்ஸ் 7 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

பிஒய்டி நிறுவனம் ஏற்கனவே இந்த எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகளை தொடங்கிவிட்டது. ரூ. 51 ஆயிரம் முன் தொகையிலேயே இ-மேக்ஸ் 7 எம்பிவி ரக எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த எலெக்ட்ரிக் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு சில சிறப்பு திட்டங்களையும் பிஒய்டி நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

அதாவது, இ-மேக்ஸ் 7 எலெக்ட்ரிக் காரை வாங்க முன் வரும் முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்தும் முன் தொகையான ரூ. 51 ஆயிரத்தையும் அப்படியே சிறந்த பலனாக வழங்க அது திட்டமிட்டுள்ளது. அத்துடன், 7 kW, 3 kW சார்ஜரையும் இலவசமாக வழங்க இருப்பதாக அது தெரிவித்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இந்த எம்பிவி ரக எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இப்போதே இந்த காருக்கு எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2024, 10:35 [IST]
English summary
Byd emax 7 is scheduled to launch in india tomorrow more details
மேலும்... #byd #BYD eMAX 7 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+