பிஒய்டி இ-மேக்ஸ் 7 இ-கார் அறிமுகம்.. இதுல குடும்பத்தோட 530 கிமீ தூரம் வரை சார்ஜ் பயமே இல்லாம பயணிக்கலாம்!

இந்தியாவில் பிஒய்டி (BYD) நிறுவனம் இ6 (e6) எனும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிக்கின்றதது. இந்த கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனே தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. பொதுவாக அப்டேட் வெர்ஷன் கார்கள், சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் அலங்கரிப்பைப் பெற்ற வாகனமாகவே விற்பனைக்கு வரும். ஆனால், பிஒய்டி நிறுவனம் அப்டேட்டின்கீழ் இ6 காரின் ஸ்டைலை மாற்றியமைத்ததோடு அதன் பெயரையும் மாற்றி இருக்கின்றது. உலக சந்தையிலும் இதே நிலையே தென்படுகின்றது.

எம்6 (M6) எனும் பெயரில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் அது இ-மேக்ஸ் 7 (eMax 7) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 26.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

BYD emax 7 electric mpv car launched

இரண்டு விதமான வேரியண்டுகள் மற்றும் இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷனில் இந்த காரை வாங்கிக் கொள்ள முடியும். பிரீமியம் (Premium) மற்றும் சுப்பீரியர் (Superior) ஆகிய இரண்டு விதமான தேர்வுகளிலேயே புதிய இ-மேக்ஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த இரண்டிலும் 6 மற்றும் 7 இருக்கைகள் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில் பிரீமியம் 6 சீட்டரே ரூ. 26.90 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதே வேரியண்டின் 7 சீட்டர் ஆப்ஷன் ரூ. 27.90 லட்சத்திற்கு விற்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சுப்பீரியர் 6 சீட்டர் இருக்கின்றது. இதற்கு ரூ. 29.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவை அனைத்தைக் காட்டிலும் மிக அதிக விலைக் கொண்ட உயரிய தேர்வாக சுப்பீரியர் 7 சீட்டர் இருக்கின்றது. இதற்கு ரூ. 29.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசமாக பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவை இருக்கின்றன.

பிரீமியம் வேரியண்டில் 55.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் 163 பிஎஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருமே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், சுப்பீரியர் வேரியண்டில் 71.8 kWh பேட்டரி பேக்கும், 204 பிஎஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாருமே வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக்குகள் ஓர் முழு சார்ஜில் 420 கிமீ மற்றும் 530 கிமீ ரேஞ்சை வழங்கும். இதன் வாயிலாக பிஒய்டி இ-மேக்ஸ் 7 எலெக்ட்ரிக் கார் குடும்பத்துடன் பயணிக்க மட்டுமல்ல, நீண்ட தூரம் பயணிக்கவும் ஏதுவான வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. நிற தேர்வையும் சற்று தாராளமாகவே இந்த காரில் பிஒய்டி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில் நான்கு விதமான நிற ஆப்ஷன்கள் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. குவார்ட்ஸ் ப்ளூ (Quartz Blue), காஸ்மோஸ் ப்ளூ (Cosmos Blue), க்ரிஸ்டல் ஒயிட் (Crystal White) மற்றும் ஹார்பர் கிரே (Harbour Grey) ஆகியவையே அவை ஆகும். அப்டேட்டின்கீழ் இந்த காரில் பல்வேறு மாற்றங்களை பிஒய்டி செய்திருக்கின்றது.

குறிப்பாக, இதன் முகப்பு பகுதி மிக முக்கியமான மாற்றங்களைப் பார்க்க முடிகின்றது. மெல்லிய எல்இடி ஹெட்லைட் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், அட்டோ 3 எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் கிரில்-லையும் இந்த வாகனத்தில் பார்க்க முடிகின்றது. மேலும், இதன் பம்பரின் லுக்கும் லேசாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், காருக்குள் இருக்கும் லைட்டிங் செட்-அப்பிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, வெளிப்புற லைட் செட்-அப் மற்றும் குரைம் அணிகலன்கள் உள்ளிட்டவையும் மாற்றப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, இதன் பம்பரின் தோற்றமும் மாற்றப்பட்டு உள்ளது. மாற்றங்கள் வெளிப்புறத்தில் மட்டுமல்ல இந்த காரின் உட்புறத்திலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், உட்பக்கத்திற்கு கருப்பு மற்றும் பழுப்பு நிற அலங்கரிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, இதன் டேஷ்போர்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கும் விதம் மிகவும் அழகானதாகக் காட்சியளிக்கின்றது. முழுக்க கருப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் அது முழு அகலத்திற்கும் குரோம் ஸ்ட்ரிப் பொருத்தப்பட்டு இருக்கின்றது. கேபினுக்குள் இருக்கும் கண்கவர் மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதன் இருக்கைகள் முழுவதும் பழுப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். தொடர்ந்து, இதன் டோர் பேட்கள் சாஃப்ட் டச் லெதர் பேடால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் ஸ்டியரிங் வீலும் மாற்றப்பட்டு உள்ளது. மேலும், காரில் உள்ள ஏசி வெண்ட் மற்றும் டோர் உள்ளிட்டவற்றில் குரோம் அக்செண்டுகளைக் காண முடிகின்றது.

இவை அனைத்தும் காரின் லுக்கை மேலும் பிரீமியமானதாக மாற்றி இருக்கின்றன. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் மிக தாராளமாக இந்த காரில் பிஒய்டி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 12.8 அங்குல ரொட்டேட் செய்யும் வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5 அங்குல டிஜிட்டல் திரை (டிரைவருக்கானது) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 6 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகியவைக் கொடுக்கப்பபட்டு இருக்கின்றன.

இதுதவிர, லெவல் 2 வகை அடாஸ் அம்சமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், எலெக்ட்ரிக் டெயில்கேட், வாகனத்தில் இருந்து மின்சாரத்தை வேறொரு சாதனத்திற்கு வழங்கும் திறன், 6 வழிகளில் டிரைவருக்கான இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முதல் எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். இதற்கு மின்சார வெர்ஷனில் இப்போதைக்கு ஒரு போட்டிகூட இல்லை. அதேவேளையில், இது ஐசிஇ வாகன மாடல்களான மாருதி சுஸுகி எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 14:57 [IST]
English summary
Byd emax 7 launched in india prices start from rs 26 90 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+