மொத்த குடும்பமும் ஒண்ணா போகுறதுக்கு எது சரியான வண்டி? இரண்டுமே எலக்ட்ரிக்... விலையை மட்டும் பார்க்காதீங்க!!

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த பிரபலமான எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இ6 கார் மூலமாக நுழைந்தது. இந்த பிஒய்டி இ6 காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக இமேக்ஸ் 7 (eMax 7) சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இ6 காருடன் ஒப்பிடுகையில், புதிய இமேக்ஸ் 7 ஆனது தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மற்றும் பவர்டிரெயினிலும் கூட நிறைய அப்டேட்களை பெற்று வந்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காருக்கும், புதிய இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

டிசைன்: புதிய பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் கார் ரீடிசைனில் மெல்லியதான வடிவத்தில் ஹெட்லேம்ப்களையும், ஸ்போர்டியரான டிசைனில் பம்பர்களையும் பெற்றுள்ளது. அதேபோல், அலாய் சக்கரங்களும் இந்த காரில் புதியவைகளாக வழங்கப்பட்டுள்ளன. வழக்கமான நீல நிற பிஒய்டி லோகோவிற்கு பதிலாக புதிய பிஒய்டி லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப முன்பக்க கிரில் பகுதியும் புதியதாக மாற்றப்பட்டுள்ளது.

byd emax 7 vs e6

பிஒய்டி இ6 கார் உடன் ஒப்பிடுகையில், இமேக்ஸ் 7 அளவில் பெரியதாக உள்ளது. அதேபோல், இமேக்ஸ் 7 காரில் பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களை இணைக்கும் விதத்தில் பார் வழங்கப்பட்டுள்ளதால், பின்பக்கத்தில் இருந்து பார்க்க இமேக்ஸ் 7 மாடர்ன் தோற்றத்தில் உள்ளது. இ6 காரின் பம்பர்களுக்கு ட்யூயல்-டோன் ட்ரீட்மெண்ட் வழங்கப்பட்டது. ஆனால் அது இமேக்ஸ் 7 காரில் வழங்கப்படவில்லை.

கேபின்: இ6 காரில் முழுவதும் கருப்பு நிற கேபின் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய இமேக்ஸ் 7 காரில் கருப்பு மற்றும் பிரவுன் என இரு நிறங்களில் கேபின் வழங்கப்படுகிறது. அதேபோல், இமேக்ஸ் 7 கார் புதிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பெரிய அளவில் 12.8 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இ6 காரில் 10.1 இன்ச்சில் வழங்கப்படுகிறது.

இதற்கேற்ப செண்டர் கன்சோல் பகுதியின் டிசைன் சற்று திருத்தப்பட்டுள்ளது. இ6 கார் ஆனது 5 இருக்கைகளை கொண்ட எம்பிவி கார் ஆகும். ஆனால், இமேக்ஸ் 7 ஆனது 6-சீட்டர் அல்லது 7-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருப்பினும், இமேக்ஸ் 7 காரில் 3வது இருக்கை வரிசை தட்டையானதாக வழங்கப்படுவதால், இ6 காரில் உள்ளதை போல் 580 லிட்டர்கள் கொள்ளளவில் பெரிய அளவில் பூட் ஸ்பேஸை பெறலாம்.

byd emax 7 vs e6

பவர்டிரெயின் & ரேஞ்ச்: புதிய இமேக்ஸ் 7 காரில் முன்பக்கத்தில் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது. இது விலை குறைவான வேரியண்ட்களில் 161 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும், டாப் வேரியண்ட்டில் 201 எச்பி வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. மற்றப்படி, இரண்டிலும் அதிகப்பட்சமாக கிடைக்கும் டார்க் திறன் 310 என்.எம் ஆகும். இ6 காரில் 95 எச்பி மற்றும் 180 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது.

இமேக்ஸ் 7 காரில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 55.4kWh பேட்டரி 420கிமீ வரையிலான ரேஞ்சையும், 71.8kWh பேட்டரி 530கிமீ வரையிலான ரேஞ்சையும் வழங்கக்கூடியவைகளாக உள்ளன. இ6 காரில் 71.7kWh என ஒரேயொரு பேட்டரி ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டது. இது 415கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.

விலை: பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.26.9 லட்சத்தில் இருந்து ரூ.29.9 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிங்கிள் வேரியண்ட்டில் கிடைத்துவந்த இ6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.29.15 லட்சமாக இருந்தது. அதாவது, இ6 காருடன் ஒப்பிடுகையில், இமேக்ஸ் 7 காரை இன்னும் குறைவான விலையில் பிஒய்டி கொண்டுவந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி இமேக்ஸ் 7 எலக்ட்ரிக் கார் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடியதாக விளங்குகிறது. இதன் மூலம் பிஒய்டி நிறுவனத்தின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்வான்ஸான மாடர்ன் தோற்றத்தில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு பிஒய்டி இமேக்ஸ் 7 ஆனது ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 10, 2024, 23:36 [IST]
English summary
Byd emax 7 vs e6 electric cars comparison check all details here
மேலும்... #byd #BYD eMAX 7 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+