குடும்பத்துல இருக்க அத்தன பேரையும் இந்த ஒரே காருல கூட்டிட்டு போலாம்.. 3வரிசை இருக்கை கொண்ட கார் அறிமுகமாகபோது!

சீன கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD) இந்தியாவில் இ-மேக்ஸ்7 (eMAX7) எனும் எம்பிவி (MPV) ரக கார் மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே அது அறிமுகமாக இருக்கும் நாள் பற்றிய விபரம் தற்போது வெளியாகி இருக்கின்றது. இதன்படி பிஒய்டி இ-மேக்ஸ்7 எம்பிவி கார் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், விரைவில் இந்த காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஒய்டி இ-மேக்ஸ்7 ஓர் எம்பிவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இது இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது இந்த பிஒய்டி நிறுவனமானது இந்தியாவில் இ6 (e6) எனும் எலெக்ட்ரிக் எம்பிவி வகை கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Byd emax7 india launch date

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனே இந்த இ-மேக்ஸ்7 ஆகும். புதுப்பித்தலின்கீழ் இ6 எலெக்ட்ரிக் கார் மாடலில் புதுமுக அம்சங்கள் பலவற்றை பிஒய்டி சேர்த்திருக்கின்றது. புதிய அம்சங்களை மட்டுமல்ல புதிய பெயரையும் அதற்கு சூட்டியிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இந்த எலெக்ட்ரிக் புதிய பெயரிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது.

ஆனால், இ-மேக்ஸ்7 பெயரில் அல்ல, எம்6 (M6) எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எம்பிவி காரை அப்டேட்டின்கீழ் அதிக இருக்கைகளைக் கொண்டதாகவும் பிஒய்டி மாற்றியிருக்கின்றது. ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகளே இந்த கார் மாடலில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், குடும்பத்துடன் பயணிக்க உகந்த கார் மாடலாக இது இருக்கும் என தெரிகின்றது. குறிப்பாக, அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தாலும் இந்த காரில் பயணிக்க முடியும் என்பது அதன் அதிக இருக்கைகள் வசதியினால் தெரிய வந்திருக்கின்றது. புதிய அம்சத்தை மட்டுமல்ல புதுமுகத்தையும் கொண்டிருக்கும் வகையில் இந்த காரில் பிஒய்டி மாற்றங்களைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அது என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்திருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின் வாயிலாக புதிய இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடலில் 12.8 அங்குல திருப்பும் வசதிக் கொண்ட தொடுதிரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பெரிய பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதுதவிர, சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் பொருட்டு வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கையும் இ-மேக்ஸ்7 எம்பிவியில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது. தொடர்ந்து, இநத் காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும் கூறப்படுகிறது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவையே இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவற்றுடன், லெவல் 2 வகை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சமும் இ-மேக்ஸ்7 காரில் இடம் பெறும் என கூறப்படுகிறது. இந்தோனேசியா சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கும் எம்6 எலெக்ட்ரிக் கார் மாடலில் இந்த வசதிகள் அனைத்தும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, அங்கு இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. 55.4 kWh மற்றும் 71.8 kWh ஆகியவையே அவை ஆகும். இதே ஆப்ஷனே இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதில் மாற்றம் செய்து விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளன. இதேபோல், இரண்டு விதமான எலெக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கான வரவேற்பு மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது மிகப் பெரிய உச்சத்தை அடைந்திருக்கின்றது. அதேவேளையில், கடந்த சில மாதங்களாக ஃபேம் 2 திட்டம் நடப்பில் இல்லாத காரணத்தினால் அவற்றின் விற்பனை கணிசமாக பின் தங்கிக் காணப்படுகின்றது. விரைவில் இந்த நிலையை மாற்றுவதற்கான பணிகளிலேயே அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 18, 2024, 23:07 [IST]
English summary
Byd emax7 launching in india on october 8 here is more details about three row mpv ev
மேலும்... #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+