மனிதனைபோல நடந்து சென்று வேலை பார்க்கும் ரோபோவை களமிறக்கும் கார் உற்பத்தி நிறுவனம்.. இனி மனுசனே தேவையில்ல போல!

கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியமர்த்தி இருப்பது வாகனம் உற்பத்தி சார்ந்து பணியாற்றி வருவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக பிஒய்டி (BYD) இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சீனாவில் மட்டுமின்றி உலக அளவில் வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த சீன கார் உற்பத்தியாளர், தன்னுடைய கார் உற்பத்தியில் நடமாடும் மனித உருவத்திலான ரோபோக்களை இணைத்திருக்கின்றது.

யுபி டெக் (UBTech) நிறுவனத்தின் வால்கர் எஸ் (Walker S1 Humanoid Robot) ரோபோக்களையே நிறுவனம் பயன்பாட்டிற்கு களமிறக்கி இருக்கின்றது. இது மனிதர்களை போல அதுவாக நடந்துச் சென்று கார் உற்பத்திக்கான முக்கிய பணிகளை மேற்கொள்ளும். சுமார் 500 ரோபோக்களுக்கு நிறுவனம் ஆர்டரை வழங்கி இருக்கின்றது.

BYD using walker s1 humanoid robot in ev factories

யுபி டெக், ஓர் சீனாவைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தகுந்தது. சீனாவில் பணியாளர்களின் தட்டுப்பாடு மிகப் பெரிய அளவில் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே மனிதர்களைப் போல செயல்படும் ரோபோக்களை தாங்கள் களமிறக்க இருப்பதாகவும் பிஒய்டி தெரிவித்து உள்ளது.

5.6 ஆடி உயரம் கொண்ட மனித ரோபோவே இதுவாகும். 167.6 பவுண்டு எடைக் கொண்டதாகவும் இது காட்சியளிக்கின்றது. கார் உற்பத்திக்கான புரோக்ராம் செய்யப்பட்டே இது வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. குறிப்பாக, மிகவும் ஆபத்தான பணிகளை மேற்கொள்ள இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

Walker s1 humanoid robot on ev making mission

ஆகையால், மனிதர்கள் வாகன உற்பத்தியின்போது காயம் அடைவது முழுமையாக தவிர்க்கப்படும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாகவே மூன்று கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. மூன்றுமே எலெக்ட்ரிக் கார் மாடல்கள் மட்டுமே ஆகும்.

இ-மேக்ஸ் 7 (eMax 7), அட்டோ 3 (Atto 3) மற்றும் சீல் (Seal) ஆகியவையே அவை ஆகும். இதில் இ-மேக்ஸ் 7 கார் மாடலே நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் ஆகும். இது முன்னதாக சந்தையில் இ6 எனும் பெயரில் விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது.

புதுப்பித்தலின் அடிப்படையில் இக்காரின் சிறப்பம்சங்களை அப்கிரேட் செய்ததுடன் அதன் பெயரையும் மாற்றியிருக்கின்றது பிஒய்டி. இதற்கு அறிமுக விலையாக ரூ. 26.90 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிறுவனம் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதன் சீல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது.

ரூ. 2.50 லட்சத்திற்கான சிறப்பு பலன்களையே அது அறிவித்திருக்கின்றது. மேலும், 3 ஆண்டுகள் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பேக்கேஜ்களையும் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்தியாவில் பிஒய்டி சீல் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டைனமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

இதில் டைனமிக் மாடலே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 41 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 200 கிமீ ஆகும். மேலும், ஓர் முழு சார்ஜில் 650 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே பிஒய்டி போன்ற நிறுவனங்களின் கால் தடம் இந்தியாவில் தொடர்ச்சியாக பதிந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல நிறுவனங்கள் நாட்டில் கால் தடம் பதிக்க இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 22, 2024, 12:52 [IST]
English summary
Byd employs walker s1 humanoid robot to address labour shortages on its ev factories
மேலும்... #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+