சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு

புகழ்பெற்ற சீன கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (BYD). இந்த நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே பிஒய்டி நிறுவனம் சாலையோர கடைகள் தின்பண்டங்களை தயாரிப்பதைப் போல அது கார்களை தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனம் 7 மில்லியனாவது யூனிட் காரை தயாரித்து வெளியேற்றி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 7 மில்லியனாவது கார் யூனிட்டாக டென்ஸா என்7 (Denza 7) எலெக்ட்ரிக் கார் மாடலே தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக அமோகமான வரவேற்புக் உலக நாடுகளில் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த தகவல் அமைந்திருக்கின்றது.

Byd ev production reaches 7 millionth milestone

இந்த பிராண்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்திலேயே 1 மில்லியன் தயாரிப்பு சாதனையை எட்டியது. இந்த நிலையிலேயே 2024 மார்ச் மாதம் முடிவடைவதற்குள் அது 7 மில்லியன் எனும் கார் உற்பத்தி எனும் இமாலய சாதனையை படைத்திருக்கின்றது. அனைத்தும் எலெக்ட்ரிக் கார் மட்டுமே ஆகும்.

உலக அளவில் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் இரு மடங்காகிக் கொண்டிருப்பதன் விளைவாகவே நிறுவனம் தற்போது உற்பத்தியிலும் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் உலக அளவில் 3.02 மில்லியன் யூனிட் வாகனங்களை விற்பனைச் செய்து மிகப் பெரிய விற்பனை சாதனையைப் படைத்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் சீனாவைத் தாண்டி இன்னும் பல நாடுகளில் அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் இந்தியா உட்பட உலகின் 64 நாடுகளில் இந்த நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், தாய்லாந்து, பிரேசில், உஸ்பெகிஸ்தான் மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளிலும் அது வாகன உற்பத்தி ஆலையையும் அமைத்திருக்கின்றது.

இந்தியாவில் பிஒய்டி நிறுவனம் கார்களை இறக்குமதி செய்தே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இ6, அட்டோ 3 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் விரைவில் சீல் எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை அது இணைக்க இருக்கின்றது.

இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் தொடங்கிவிட்டது. சமீபத்தில் வெளியாகிய தகவலின்படி இந்த கார் மாடலுக்கு 500க்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்தியாவில் சீல் டைனமிக் (Dynamic), பிரீமியம் (Premium) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டைனமிக்கே ஆரம்ப நிலை தேர்வாகும். இதன் விலை ரூ. 41 லட்சம் ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 510 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இரண்டாவது தேர்வாக பிரீமியம் இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 650 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதற்கு ரூ. 45.55 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. கடைசி மற்றும் அதிக சிறப்பம்சம் தாங்கிய தேர்வாக பெர்ஃபார்மென்ஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 53 லட்சம் ஆகும். ஆனால், இது ஓர் அதிக திறனை வெளியேற்றக் கூடிய தேர்வு என்பதால் ரேஞ்ஜ் விஷயத்தில் பிரீமியம் தேர்வைக் காட்டிலும் சற்று பின் தங்கி இருக்கின்றது.

இதில் ஓர் முழு சார்ஜில் 580 கிமீ தூரம் மட்டுமே பயணிக்க முடியும். அனைத்து விலைகளும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். வெகு விரைவில் இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. நிறுவனத்தின் கூற்றின்படி, மார்ச் 31 ஆம் தேதி முதல் இந்த பணிகள் தொடங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரில் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்ற வகையில் தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதியுடனும், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஹீட் மற்றும் வெண்டிலேஷன் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கை ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களும் சீல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்களாக 9 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா மற்றும் அடாஸ் அம்சம் ஆகியவை கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிரீமியம் கார் காதலர்கள் மத்தியிலேயே பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் சற்று காஸ்ட்லியானவை என்பதால் பணக்காரர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக பிஒய்டியின் எலெக்ட்ரிக் கார்கள் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 5:00 [IST]
English summary
Byd ev production reaches 7 millionth milestone
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+