பணக்காரர்கள் தேடி வர ஆரம்பிச்சுட்டாங்க.. சரியான நேரத்தில் கப்பல் போன்ற காருக்கு பேடண்ட் பதிவு செய்த பிஒய்டி!!

இந்திய பணக்காரர்களின் பிரியமான கார் பிராண்டாக மாறி இருக்கின்றது பிஒய்டி (BYD) நிறுவனம். சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியாவின் மின்சார கார் பிரிவை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஆடி (Audi), பென்ஸ் (Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு வாகன பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தொடர்ச்சியாக்கும் பொருட்டு, விரைவிலேயே கப்பல் மாதிரியான ஓர் பெரிய உருவம் கொண்ட காரை பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவில் தனது புதுமுக கார் மாடலுக்கான பேடண்ட் பதிவை பிஒய்டி செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த ஆவணமே தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆவணத்தின் வாயிலாக அது பேடண்ட் பதிவைச் செய்திருப்பது டென்சா என்9 (Denza N9) எனும் கார் மாடலுக்கு என்பது தெரிய வந்திருக்கின்றது.

Byd denza n9 patent filed

இது ஓர் பிரமாண்ட உருவ அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இப்போதைய நிலவரப்படி பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் இமேக்ஸ்7 (eMax7) எனும் எம்பிவி (MPV) ரக எலெக்ட்ரிக் கார், அட்டோ 3 (Atto3 SUV) எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் மற்றும் சீல் செடான் (Seal Sedan) ரக எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையிலேயே நான்காவதாக டென்சா என்9 இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் இந்த காருக்கு முன்னதாக இன்னும் வேறு சில கார் மாடல்கள் விற்பனைக்கு வரலாம் என தெரிவிக்கின்றன. புதிய டென்சா என்9 இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் மாடலுக்கு மிகப் பெரிய சவாலை வழங்கக் கூடியதாக அமையும்.

Byd denza n9 patent filed

இந்த கார் மாடலுக்கு சீனா உள்ளிட்ட உலக சந்தையில் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதன் போட்டி கார் மாடல்கள் அனைத்தைக் காட்டிலும் இதற்கு நல்ல வரவேற்பு சில சந்தையில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே டிமாண்டையே இந்தியாவிலும் டென்சா என்9 பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆறு பேர் வரை அமர்ந்து பயணிக்கின்ற மாதிரியான 2+2+2 என்கிற மூன்று வரிசை இருக்கை அமைப்பையே இந்த கார் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஓர் குடும்பம் தாராளமாக அமர்ந்து பயணிக்க ஏதுவான கார் மாடலாக டென்சா என்9 இருக்கும் என தெரிகின்றது.

தொடர்ந்து, டிராவல் அனுபவத்தை சுவராஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 50 அங்குல திரை, 17.3 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 13.2 அங்குல டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு பிரத்யேக அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கி இருக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.

ஆடம்பர அம்சங்களை அதிகம் விரும்புவோரைக் கவரும் நோக்கில் இந்த கார் இந்தியாக் கொண்டு வரப்பட இருப்பதனால், அதில் நம்ப முடியாத லக்சூரி அம்சங்கள் பல அதில் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரேஞ்ச் தருவது மற்றும் அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் இந்த கார் மாடல் கை தேர்ந்ததாக இருக்கும் என கூறப்படுகின்றது.

உலக சந்தையில் ஓர் முழு சார்ஜில் 400 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் தரும் பேட்டரி பேக் மற்றும் 952 பிஎச்பி ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுமட்டுமல்ல, இந்த கார் பிளக்-இன் ஹைபிரிட் ரக காராகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

அதாவது, தேவைப்பட்டால் பெட்ரோல் அல்லது எலெக்ட்ரிக் என 2-இன்-1 காராக மாற்றிக் கொள்ளும் வாகனமாகவும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மின்சார மோடில் பெட்ரோல் செலவு இல்லாமலேயே 165 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 47 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு பணக்காரர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆடம்பர மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளை விரும்புவோர் மத்தியில் மிக சிறப்பான டிமாண்டை பெற்று வருகின்றது. இதே மாதிரியான வரவேற்பையே டென்சா என்9 பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 55 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 31, 2024, 16:01 [IST]
English summary
Byd files patent for denza n9 electric suv hinting at future launch in india
மேலும்... #byd #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X