3 லிட்டர் பெட்ரோல் போட்டா போதும் 100 கிமீ பயணம் செய்யலாம்! பிஒய்டியின் புது ஹைபிரிட் கார்கள் வந்தாச்சு!

பிஒய்டி நிறுவனம் நேற்று சீனாவில் 2 புதிய ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த கார்கள் மிகக் குறைவான எரிபொருள் செலவில் பயணம் செய்யக் கூடியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய வெறும் மூன்று ரூபாய் தான் எரிபொருள் செலவாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தற்போது உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு எதிரான மாற்று எரிசக்தி மற்றும் பசுமையான வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. உலக நாடுகளும் தற்போது பசுமையான வாகனங்களை நோக்கி நகரத்துவங்கி விட்டார்கள். இதனால் அரசுகள் பசுமையான வாகனங்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

byd hybrid

தற்போது பசுமையான வாகனங்களில் என்றால் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் தான் மிக அதிக மவுசு இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதன் ரேஞ்ச்தான் எலெக்ட்ரிக் கார்களை ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டு நீண்ட தூரம் பயணிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. ஆங்காங்கே இந்த காரை நிறுத்தி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வாக தற்போது பிளக்கின் ஹைபிரிட் கார்களை வெளிநாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்க துவங்கிவிட்டன. ஏற்கனவே டொயோட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் தீவிரமாக இறங்கி பல்வேறு விதமான தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தற்போது புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட கார்களை நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளது.

byd hybrid

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட குயின் எல் மற்றும் சீல் 06 ஆகிய இரண்டு செடான் கார்களும் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கார்களாக இருக்கின்றன. இந்நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் தொழில்நுட்பம் என்பது குறைந்த எரிபொருளில் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடியதாக இருக்கிறது.

பிஒய்டி நிறுவனம் தற்போது கூறியுள்ளது படி இந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கார்களை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்து அதே நேரம் எரிபொருளையும் முழுவதுமாக நிரப்பி விட்டால் 2500 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என தெரிவித்துள்ளது. பயணித்திற்கு இடையில் எரிபொருள் நிரப்பவோ சார்ஜ் போடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளது.

அப்படி என்றால் இந்த வாகனம் வெறும் 3லிட்டர் எரிபொருள் செலவில்லையே 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியா பெட்ரோல் விலை படி கணக்கிட்டால் ஒரு கிலோமீட்டர் பயணிக்க இந்த வாகனத்தில் வெறும் மூன்று ரூபாய் மட்டுமே எரிபொருள் செலவாகிறது. ஒரு லிட்டருக்கு 34 கி.மீ மைலேஜ் தருகிறது. இது ஒரு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார் என்பதால் இதை தனியாக சார்ஜ் செய்யவும் வேண்டும்.

இருந்தாலும் தற்போது மார்க்கெட்டில் உள்ள ஹைபிரிட் கார்களை ஒப்பிடும்போது, கீலீ ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேலக்ஸி எல் 6 என்ற ஹைபிரிட் கார் முழுவதுமாக சார்ஜ் போட்டு எரிபொருளை நிரப்பினால் 1370 கிலோ மீட்டர் தான் பயணிக்கும். ஸீக்கர் எலெக்ட்ரிக் 001 என்ற கார் முழுவதுமாக சார்ஜ் போட்டு எரிபொருளை நிரப்பினால் ஆயிரம் கிலோமீட்டர்தான் பயணிக்கும் அந்த கார்களை எல்லாம் ஒப்பிடும்போது இந்த கார் அதிகமான ரேஞ்ச் தருகிறது.

தற்போது பிஓய்டி நிறுவனம் எந்த பிளக்இன் ஹைபிரிட் கார்களை சீனாவிற்கு மட்டுமே தயாரித்து வருகிறது. விரைவில் இந்த கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் பிஒய்டி கார்கள் மிகப்பெரிய அளவு மார்க்கெட்டை வைத்துள்ளது. நாட்டில் விற்பனையாகும் இரண்டு ஹைபிரிட் கார்களில் ஒரு ஹைபிரிட் கார் நிச்சயம் பிஒய்டி நிறுவனம் தயாரித்த காராக தான் இருக்கும் என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஒய்டி நிறுவனம் பிளக்இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதிக ரேஞ்ச் தரும் இன்ஜினை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவிற்கு நிச்சயம் சிறந்த ஒரு வாகனமாக இருக்கும். அதே நேரம் இந்த வாகனத்தின் விலையும் குறைவாக இருந்தால் இந்தியாவில் அந்நிறுவனம் இந்த வாகனத்தை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில் இதன் விற்பனை அதிகமாக இருக்கும். அதே நேரம் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியையும் கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 10:28 [IST]
English summary
Byd hybrid new powertrain tech 100km 2 9 litre fuel
மேலும்... #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+