குடும்பத்தோட போக முடியும்னு சொன்னதும் சொன்னாங்க இந்த காருக்கு டிமாண்ட் குவியுதுங்க!.. விலையும் இவ்ளோதானா!!

இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல் ஒன்று அமைந்திருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD). இதுவே தன்னுடைய அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடலுக்கே இந்தியாவில் நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் இ-மேக்ஸ் 7 (eMax 7) எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எம்பிவி ரக கார் (Electric MPV Car) மாடல் ஆகும்.

இந்த கார் மாடலை இந்தியாவில் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்விலேயே பிஒய்டி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த இரண்டில் அதிக இருக்கைகளைக் கொண்ட, அதாவது, ஏழு இருக்கைகளைக் கொண்ட வெர்ஷனுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Byd emax7 7 seater capacity

இந்த வெர்ஷன் சற்றே அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதிலும் இந்தியர்கள் அதை தேடிச் செல்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, அதிக விலைக் கொண்ட உயர்நிலை தேர்வுகளுக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாகவும் பிஒய்டி தெரிவித்துள்ளது. பிஒய்டி, இம்மாத 8 ஆம் தேதி அன்றே இ-மேக்ஸ் 7 எம்பிவி எலெக்ட்ரிக் காரை நாட்டில் அறிமுகப்படுத்தியது.

அன்று தொடங்கி இப்போது வரை சுமார் 1000 புக்கிங்கைக் குவித்து உள்ளது. இதில், அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும் உயர் நிலை தேர்வு மற்றும் ஏழு இருக்கைகளைக் கொண்ட தேர்வுகளுக்கு அதிக புக்கிங் கிடைத்திருக்கின்றன. பிஒய்டி இ-மேக்ஸ் 7 கார் மாடல் இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட வாகனமாகும்.

Byd emax7 7 seater demand grows in india

நிறுவனம் இ6 எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை முன்னதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் அப்டேட் செய்யப்பட்ட மாடலே இ-மேக்ஸ் 7 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அப்டேட்டின்கீழ் சிறப்பம்சங்களை மாற்றியது மற்றும் அணிகலன்களை மாற்றியது உள்ளிட்டவற்றுடன் பெயரையும் அவர்கள் மாற்றி இருக்கின்றனர்.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 இந்தியாவில் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். பிரீமியம் (Premium) மற்றும் சுப்பீரியர் (Superior) ஆகியவையே அவை ஆகும். பிரீமியம் மற்றும் சுப்பீரியர் இந்த இரண்டிலும் 6 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 26.90 லட்சம் ரூ. 29.90 லட்சம் வரையிலான விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். பிரீமியம் வேரியண்டில் 55.4 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் மற்றும் 163 பிஎஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கும்.

இதன் சுப்பீரியர் வேரியண்டில் 71.8 kWh பேட்டரி பேக் மற்றும் 204 பிஎஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும். இவை ஓர் முழு சார்ஜில் 420 கிமீ முதல் 530 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும்.

தொடர்ந்து, பிரீமியமான டிராவல் அனுபவத்தையும் இந்த எலெக்ட்ரிக் கார் அதன் பயனாளிகளுக்கு வழங்கும். இதன் அடிப்படையில், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், பனோரமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவற்றை இ-மேக்ஸ் 7 அதனுள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்றாகவே பிஒய்டி இ-மேக்ஸ்7 எலெக்ட்ரிக் எம்பிவிக்கு கிடைத்திருக்கும் புக்கிங் எண்ணிக்கையானது அமைந்திருக்கின்றது. இந்த எம்பிவி கார் மாடலுக்கு மட்டுமல்ல மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற எம்பிவி காருக்கும் மிக சிறப்பான வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 11:10 [IST]
English summary
Byd india is witnessing a notable increase in demand for the seven seat emax7 mpv
மேலும்... #byd #BYD eMAX 7 #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+